SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டெல்லி PG கட்டிட விபத்து.. 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்! உயர் நீதிமன்றம் புது உத்தரவு!

டெல்லியின் சத்ய நிகேதனில், மாணவர்கள் தங்கும் PG கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 5 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Written By R Balaji
Published: Sep 08, 2026, 08:14 AM IST | Updated: Sep 08, 2026, 08:18 AM IST
Join

டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே உள்ள சத்ய நிகேதனில், மாணவர்கள் தங்கம் PG கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டிடத்தில் பழுதிபார்க்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் உத்தரவின் பேரில், 5 MCD அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதாவது துணை ஆணையர் ராகேஷ் குமார், கண்காணிப்பு பொறியாளர் ரன்வீர் சிங், கட்டிடப் பிரிவு செயற்பொறியாளர் லலித் குமார் கோயல், உதவி பொறியாளர் சுனில் சவுகான் மற்றும் இளநிலை பொறியாளர் ஆஷிஷ் குமார் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

யார் இந்த அதிகாரிகள்?

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 பேரில் ராகேஷ் குமார், ரன்வீர் சிங் மற்றும் ஆஷிஷ் குமார் ஆகிய மூவரும் இதற்கு முன்பு மலவியா நகர் தீ விபத்து நடைபெற்றபோதும் MCD தெற்கு மண்டலத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அந்த தீ விபத்து தொடர்பாக அவர்கள் மேல் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சத்ய நிகேதன் PG கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து அவர்கள் உட்பட 5 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

PG கட்டிடத்தில் நடந்தது என்ன?

சத்ய நிகேதனில் உள்ள இந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கான PG செயல்பட்டு வந்தது. கட்டிடத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கட்டிடத்தின் அடித்தளப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் அங்கு தண்ணீர் தேங்கியிருந்ததா என்பது உள்ளிட்ட விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், அந்த கட்டிடத்திற்கு தேவையான அனுமதிகள் பெறப்பட்டிருந்தனவா என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த சம்பவத்தை டெல்லி உயர் நீதிமன்றம் தீவிரமாக எடுத்துள்ள நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்துக்கு கட்டிட உரிமையாளர்களை மட்டும் பொறுப்பாக்க முடியாது என தெரிவித்த நீதிமன்றம், MCD அதிகாரிகள் மற்றும் டெல்லி பல்கலைகழகத்தின் பங்கு குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும், கட்டிடத்திற்கு உரிய அனுமதிகள் இருந்தனவா? கட்டுமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் அலட்சியம் நடைபெற்றதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

PG ஹாஸ்டல்களுக்கு இனி சோதனை

வெளியூர்களில் இருந்து டெல்லிக்கு கல்விக்காக வரும் மாணவர்கள் தங்கும் PG மற்றும் ஹாஸ்டல்களின் பாதுகாப்பு குறித்தும் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இதையடுத்து MCD கட்டுப்பாட்டில் உள்ள PG மற்றும் ஹாஸ்டல்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டிடத்திற்கு உரிய அனுமதி உள்ளதா, கட்டிட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கட்டிட பிரிவு செயற்பொறியாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். இந்த அறிக்கையை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES