SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

50,000 ஓய்வூதியதாரர்கள், ஆஷா பணியாளர்களுக்கு குட் நியூஸ் தந்த டெல்லி அரசு: மாஸ் அறிவிப்புகள்!!

Delhi Government: அரசின் புதிய பணமில்லா வசதியானது, டெல்லி ஜல் போர்டு ஓய்வூதியதாரர்கள் மருத்துவ சிகிச்சையைப் பெறும்போது எதிர்கொள்ளும் நிதிச் சுமையையும் நிர்வாகச் சிரமத்தையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 07, 2026, 09:45 AM IST | Updated: Oct 07, 2026, 09:53 AM IST
Join

புது டெல்லி: டெல்லி வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. டெல்லி அரசு இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. டெல்லி ஜல் வாரியம் (DJB), சுமார் 50,000 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்காக 'பணமில்லா மருத்துவ வசதி' (cashless medical facility) திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், அவர்கள் மருத்துவச் செலவுகளை முன்கூட்டியே செலுத்தி பின்னர் அதற்கான தொகையைத் திரும்பப் பெற (reimbursement) விண்ணப்பிக்கும் சிரமத்தை எதிர்கொள்ளாமல்  சிகிச்சையைப் பெற முடியும். மேலும், ஆஷா பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்ற இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பொதுப்பணித்துறை (PWD) அமைச்சர் பர்வேஷ் வர்மா, டெல்லி ஜல் வாரியத்தின் துணைத் தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான சதீஷ் உபாத்யாய் மற்றும் MCD மேயர் பிரவேஷ் வாஹி ஆகியோர் கலந்துகொண்டனர். டெல்லி அரசின் முதன்மைச் செயலாளர் ராஜீவ் வர்மா மற்றும் DJB-யின் தலைமை நிர்வாக அதிகாரி சஜ்ஜன் சிங் யாதவ் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

DJB ஓய்வூதியதாரர்களுக்குப் பணமில்லா மருத்துவ வசதி

ஓய்வுபெற்ற டெல்லி ஜல் வாரிய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவ வசதிகளை எளிதாகப் பெறும் வகையில் இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணமில்லா மருத்துவ வசதி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, ஓய்வுபெற்ற DJB ஊழியர்கள் தங்கள் மருத்துவச் சிகிச்சைக்கு முதலில் பணம் செலுத்த வேண்டியிருந்தது. பின்னர், அந்தச் செலவுத் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக அதிகாரிகளை அணுக வேண்டிய நிலை இருந்தது.

சுமார் 50,000 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இந்தப் புதிய வசதி மிகுந்த வசதியை அளிக்கும் என்று பர்வேஷ் வர்மா கூறினார்.

"இந்த முக்கியமான முன்னெடுப்பின் மூலம், டெல்லி ஜல் வாரிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குச் சிகிச்சைக்கான பணமில்லா மருத்துவ வசதி கிடைக்கும்," என்று வர்மா 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஆதரவு அவசியம்: ரேகா குப்தா

தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரேகா குப்தா, 'சேவா சங்கல்ப் அபியான்' (Seva Sankalp Abhiyan) திட்டத்தின் கீழ் இந்த முன்னெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகாலப் பணி மற்றும் நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது என்று குப்தா கூறினார்.

இத்துறையில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான டெல்லி ஜல் வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் தேவைகளை இத்திட்டம் பூர்த்தி செய்வதாக அவர் குறிப்பிட்டார். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அவர்களின் வாழ்க்கையின் பிந்தைய கட்டங்களில், மருத்துவச் சேவைகள் தொடர்பாகக் கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது என்று குப்தா கூறினார்.

"அரசு ஆதரவு தேவைப்படும் இத்தகைய காலகட்டத்தில், இதுவரை அவர்களுக்குப் பணமில்லா மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாமல் இருந்தது. இனி அந்த நிலை மாறும்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: லெவல் 6-8 அரசு ஊழியர்களுக்கு 1 லட்சத்தைத் தாண்டும் அடிப்படை ஊதியம்!!

ஓய்வூதியதாரர்களின் நீண்டகாலக் கோரிக்கை

ஓய்வுபெற்ற DJB ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இந்தப் பணமில்லா மருத்துவ வசதி இருந்து வந்தது என்று வர்மா கூறினார். முன்பெல்லாம் ஓய்வூதியதாரர்கள் மருத்துவச் செலவுகளைத் தாங்களே ஏற்க வேண்டியிருந்ததாகவும், பின்னர் அதிகாரிகளிடமிருந்து அதற்கான தொகையைத் திரும்பப் பெற வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தகைய 50,000 ஓய்வூதியதாரர்களுக்கு பணமில்லா சேவை விருப்பத்தை அரசு வழங்கியுள்லதாகவும் 'சேவா சங்கல்ப் அபியான்' திட்டத்தின் கீழ் இந்த வசதியை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்ததாக வர்மா செய்தியாளர்களிடம் கூறினார்.

அரசின் நடவடிக்கையை வரவேற்ற டெல்லி ஜல் போர்டு அதிகாரிகள்

டெல்லி ஜல் போர்டில் பல தசாப்தங்களாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதில் இந்தத் திட்டம் ஒரு முக்கியமான படியாகும் என்று சதீஷ் உபாத்யாய் கூறினார். பயனாளிகளில் பலர் ஜல் போர்டில் 30 முதல் 40 ஆண்டுகள் வரை பணியாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற ஜல் போர்டு ஊழியர்கள் முன்பு சிகிச்சைக்காகப் பணம் செலுத்தி, பின்னர் அதைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது என்று அவர் கூறினார். இந்த புதிய பணமில்லா வசதியானது, டெல்லி ஜல் போர்டு ஓய்வூதியதாரர்கள் மருத்துவ சிகிச்சையைப் பெறும்போது எதிர்கொள்ளும் நிதிச் சுமையையும் நிர்வாகச் சிரமத்தையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Explained : உலகம் முழுவதும் வரப்போகும் 4 நெருக்கடிகள்! ஜெய்சங்கர் சொன்ன பகீர் தகவல்..

இரட்டிப்பான ஆஷா பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை

டெல்லி அரசு நேற்று மற்றொரு நல்ல செய்தியையும் அளித்தது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியின்படி, டெல்லி அரசு செவ்வாய்க்கிழமையன்று "சேவா சங்கல்ப் அபியான்" (Seva Sankalp Abhiyan) திட்டத்தின் கீழ் பல சுகாதார முன்னெடுப்புகளை அறிவித்தது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர் (ASHA) பணியாளர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகையை இரட்டிப்பாக்குதல் மற்றும் 'மிஷன் அன்மோல்' (Mission ANMOL) எனும் பச்சிளம் குழந்தைகளுக்கான பரிசோதனைத் திட்டத்தை விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கும்.

ரூ.3,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்ந்த ஊக்கத்தொகை

ஆஷா பணியாளர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.3,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்தது. இந்த நடவடிக்கையின் மூலம் தலைநகர் முழுவதும் உள்ள 6,690 ASHA பணியாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்கத்தொகை திருத்தம் கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக நிலுவையில் இருந்ததாகக் குறிப்பிட்ட சுகாதார அமைச்சர் பங்கஜ் குமார் சிங், குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஆஷா பணியாளர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்துப் பாராட்டினார். சவால்களுக்கு மத்தியிலும் அவர்கள் சமூகங்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றியதாகவும், அவர்களின் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், டெல்லி அரசு 'மிஷன் அன்மோல்' திட்டத்தையும் விரிவுபடுத்தியது. இதன் மூலம் பச்சிளம் குழந்தைகளுக்கான இலவச திட்டத்தின் கீழ் கண்டறியப்படும் பிறவிக்குறைபாடுகள் அல்லது உடல்நலப் பிரச்சினைகளின் எண்ணிக்கை 56-லிருந்து 63-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், குழந்தை பிறந்த 24 முதல் 72 மணி நேரத்திற்குள் இத்திட்டத்தின் கீழ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | VDA உயர்வு: விவசாயம், கட்டுமானம்... அக்டோபர் 1 முதல் தொழிலாளர்களுக்கு அதிகரித்த குறைந்தபட்ச ஊதியம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES