நம்மில் பெரும்பாலானோர் Amazon, Flipkart உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பொருட்களை வாங்கி வருகிறோம். ஒரு பொருளை தேடும்போது அதிக Discount, Best Deal என பல சலுகைகள் காட்டப்படுகின்றன. அதேபோல், நாம் தேடும் பொருள் ஏன் குறிப்பிட்ட வரிசையில் வருகிறது. சில பொருட்கள் மட்டும் ஏன் மேலே காட்டப்படுகின்றன என்பதும் பல நேரங்களில் நமக்கு தெரியாது. இதுபோன்ற விஷயங்களில் நுகர்வோருக்கு (Customer) கூடுதல் தெளிவு கிடைக்கும் வகையில், E-commerce நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விதிகள் வரும் 2027 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் ஷாப்பிங்கில் என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன? அவை Customerக்கு எப்படி உதவும் உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களை குழப்பக்கூடிய சில நடைமுறைகள் குறித்தும் தொடர்ந்து கேள்விகளெழுந்து வருகின்றன. குறிப்பாக ஒரு பொருளுக்கு அதிக Discount இருப்பதாக காடுவது, குறிப்பிட்ட பொருட்களை Search Result-ல் முன்னிலைப்படுத்துவது, கூடுதல் கட்டங்களை இறுதி கட்டத்தில் காட்டுவது போன்ற விஷயங்கள் வாடிக்கையாளர்களின் முடிவுகளை மாற்றக்கூடும். இதுபோன்ற நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவே புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு, Consumer Protection Rulesல் முக்கிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பொருட்களின் Discount, Search Ranking, Sponsored Products மற்றும் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தக்கூடிய Dark Patterns போன்ற விஷயங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் இந்த விதிகள் அமைந்துள்ளன.
இதன்படி, E-commerce நிறுவனங்கள் தங்கள் தளங்களில் பொரூட்கள் மற்றும் சலுகைகள் தொடர்பான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக வழங்க வேண்டும். அதேபோல் ஒரு பொருள் Search Reasult-ல் எந்த காரணங்களால்முன்னிலையில் வருகிறது. என்பதிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். மேலும், பணம் செலுத்தி முன்னிப்படுத்தப்படும் Sponsored Products என்பதை வாடிக்கையாளர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையிலும் தகவல்கள் இடமொபெற வேண்டும்.
இவற்றில் குறிப்பாக Discount மற்றும் Search Ranking தொடர்பான மாற்றங்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும், வாடிக்கையாளர்களுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒரு பொருளுக்கு Discount அறிவிக்கும்போது, இனி அந்த சலுகை எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பதில் கூடுதல் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். புதிய விதிகளின்படி, ஒரு பொருளின் விலை குறைக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தும்போது, அதற்கு முந்தைய 30 நாட்களில் அந்த பொருள் விற்பனை செய்யப்பட்ட குறைந்தபட்ச விலையை அடிப்படையாக கொண்டு தகவல் காட்ட வேண்டும்.
இதன் மூலம், ஒரு பொருளின் பழைய விலையை அதிகமாக காட்டி, அதில் பெரிய Discount வழங்குவது போன்ற நடைமுறைகளை வாடிக்கையாளர்கள் எளிதாக புரிந்துகொள்ள முடியும். அதாவது, 50% Discount, Beat Deal போன்ர சலுகைகளை பார்க்கும்போது, அந்த பொருள் சமீபத்தில் எந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது என்பதையும் வாடிக்கையாளர்கள் கவனிக்க முடியும்.
இதனால் ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது Discount என்ற பெயரில் காட்டப்படும் சலுகையை மட்டும் பார்த்து முடிவு எடுப்பதற்கு பதிலாக, விலையை ஒப்பிட்டு வாங்குவதற்கு கூடுதல் தகவல் கிடைக்கும்.
ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஒரு பொருளை Search செய்யும்போது, பல பொருட்கள் வெவ்வேறு வரிசையில் காட்டப்படும். இதில் சில பொருட்கள் ஏன் முதலில் வருகின்றன. சில பொருட்கள் ஏன் முதலில் வருகின்றன. சில பொருட்கள் ஏன் கீழே செல்கின்றன என்பது வாடிக்கையாளர்களுக்கு பல நேரங்களில் தெரியாது. இனி Search Ranking தொடர்பாகவும் E-Commerce நிறுவனங்கள் கூடுதல் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும்.
புதிய விதிகளின்படி, Search Result-ல் ஒரு பொருள் எந்த காரணங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தில் காட்டப்படுகிறது என்பதற்கான முக்கிய காரணிகளை E-commerce தளங்கள் தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல், வாடிக்கையாளர் தேடும் விஷயத்துடன் தொடர்பு இல்லாத வகையில் Search Result-ஐ மாற்றி அமைப்பது அல்லது தவறாக வழிநடத்தும் வகையில் பொருட்களை முன்னிலைப்படுத்துவதும் அனுமதிக்கப்படாது.
இதன் மூலம், ஒரு பொருள் Search Result-ல் முதலிடத்தில் இருப்பதை மட்டும் பார்த்து அது தான் சிறந்த பொருள் என்று வாடிக்கையாளர்கள் முடிவு செய்வதை விட, அந்த பொருள் எந்த காரணத்தால் முன்னிலையில் காட்டப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், பணம் செலுத்தி Search Result-ல் முன்னிலைப்படுத்தப்படும் Sponsored Products மற்றும் Listings ஆகியவை தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் குறிப்பிடப்பட வேண்டும். இதனால் விளம்பரத்திற்காக முன்னிலைப்படுத்தப்படும் பொருட்களையும், சாதாரண Search Result-களையும் வாடிக்கையாளர்கள் எளிதாக வேறுபடுத்திப் பார்க்க முடியும்.
ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட முடிவை எடுக்க வேண்டும் என்பதற்காக, இணையதளத்தின் வடிவமைப்பு அல்லது Purchase Process-ல் சில தந்திரங்கள் பயன்படுத்தப்படுவது Dark Pattern எனப்படுகிறது. இதுபோன்ற நடைமுறைகள் வாடிக்கையாளர்களின் முடிவை அவர்கள் எதிர்பாராத வகையில் மாற்றக்கூடியதாக இருக்கும். இந்தியாவில் இதற்கான 13 வகையான Dark Pattern நடைமுறைகள் ஏற்கனவே 2023ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களில் வரையறுக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, ஒரு பொருளை வாங்கும்போது கூடுதலான பொருள் அல்லது சேவை வாடிக்கையாளரின் தெளிவான சம்மதம் இல்லாமல் Cart-ல் சேர்ப்பது, Checkout செய்யும் கடைசி கட்டத்தில் மட்டும் கூடுதல் கட்டணங்களை காட்டுவது போன்றவை இதில் அடங்கும். அதேபோல், ஒரு Subscription-ஐ Cancel செய்வதை வேண்டுமென்றே சிக்கலாக்குவது, விளம்பரத்தை சாதாரண பொருள் அல்லது Content போல காட்டுவது போன்ற நடைமுறைகளும் Dark Pattern ஆக கருதப்படுகின்றன.
புதிய E-commerce விதிகளின்படி, 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Dark Pattern வழிகாட்டுதல்களை E-commerce நிறுவனங்கள் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்களது தளத்தில் இதுபோன்ற நடைமுறைகள் உள்ளதா என்பதை சுயமாக ஆய்வு செய்து, அதற்கான Compliance Certificate-ஐ முக்கியமாக காட்ட வேண்டும்.
இதன் மூலம், ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது வாடிக்கையாளர்களை குழப்பும் அல்லது அவர்களின் முடிவை மறைமுகமாக மாற்றும் நடைமுறைகளை கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
பொருள் பற்றிய தகவல்களிலும் மாற்றம்
ஆன்லைனில் ஒரு பொருளை வாங்கும்போது அதன் விலை மற்றும் Discount மட்டுமின்றி, அந்த பொருள் தொடர்பான முக்கியமான தகவல்களும் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக கிடைக்க வேண்டும். இதற்காகவும் புதிய E-commerce விதிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன்படி, Marketplace E-commerce தளங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தொடர்பாக Best Before அல்லது Use Before தேதி, Return மற்றும் Refund விதிமுறைகள், Warranty, Delivery மற்றும் Payment தொடர்பான முக்கிய தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். இதன் மூலம், பொருளை வாங்குவதற்கு முன்பே அதன் முக்கியமான நிபந்தனைகள் குறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
அதேபோல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு Importer விவரங்கள் மற்றும் அந்த பொருளின் Country of Origin ஆகிய தகவல்களும் தெரிவிக்கப்பட வேண்டும். இதனால், ஒரு பொருள் எங்கிருந்து வருகிறது மற்றும் அதனை இந்தியாவில் யார் இறக்குமதி செய்கிறார்கள் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள முடியும்.
இதன் மூலம், ஆன்லைனில் ஒரு பொருளை வாங்கும்போது விலை மற்றும் Discount-ஐ மட்டும் பார்த்து முடிவு எடுப்பதை விட, அந்த பொருளின் Return, Warranty, Delivery உள்ளிட்ட முக்கிய விவரங்களையும் ஒப்பிட்டு முடிவு எடுக்க முடியும்.
ஆன்லைன் ஷாப்பிங் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதுகுறித்து புகார் அளிப்பதற்கான நடைமுறையிலும் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, E-commerce நிறுவனங்களின் Grievance Officer பதிவு செய்யும் புகாரின் நகலை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கும் வழங்க வேண்டும்.
மேலும், E-commerce நிறுவனங்கள் National Consumer Helpline (NCH) உடன் இணைந்து செயல்படும் நடைமுறையிலும் ஈடுபட வேண்டும். இதன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் தொடர்பான நுகர்வோர் புகார்களை தேசிய நுகர்வோர் உதவி அமைப்புடன் இணைத்து கையாளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால், ஒரு பொருள் அல்லது சேவை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் தங்களது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
புதிய விதிகளில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாகவும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. Marketplace E-commerce நிறுவனங்கள், குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்களின் தெளிவான மற்றும் உறுதியான சம்மதம் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது.
அதேபோல், E-commerce தளங்களுடன் நேரடியாக தொடர்பில்லாத சில சேவைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் Bundled Fees வசூலிப்பதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Loyalty அல்லது Membership Programme போன்ற குறிப்பிட்ட சேவைகளுக்கு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்கு பொருந்தும்.
இதன் மூலம், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது பொருளின் விலை மற்றும் சலுகை மட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் தகவல் பயன்பாடு மற்றும் கூடுதல் கட்டணங்கள் தொடர்பான விஷயங்களிலும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதே புதிய விதிகளின் நோக்கமாக உள்ளது.
மொத்தத்தில், 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய E-commerce விதிகள், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விலை, Discount, Search Result, Sponsored Listings, Dark Patterns மற்றும் பொருட்கள் தொடர்பான தகவல்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதேபோல், வாடிக்கையாளர் புகார்கள், தனிப்பட்ட தகவல்களின் பயன்பாடு மற்றும் சில கூடுதல் கட்டணங்கள் தொடர்பாகவும் E-commerce நிறுவனங்களின் பொறுப்புகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், ஆன்லைனில் ஒரு பொருளை வாங்கும் போது விலை மற்றும் சலுகையை மட்டும் பார்த்து முடிவு எடுப்பதற்கு பதிலாக, அந்த பொருளின் விலை, விளம்பரம், Search Ranking, Return மற்றும் Refund விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்க வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தகவல்கள் கிடைக்கும். ஆனால், இந்த விதிகள் நடைமுறையில் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகின்றன என்பது அவற்றின் அமலாக்கத்தைப் பொறுத்தே இருக்கும்.