• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained : வறட்சியை வாரி வழங்கும் El nino! 2027ல் என்னவாகும்? நிபுணர்கள் கணிப்பு..

Explained : வறட்சியை வாரி வழங்கும் El nino! 2027ல் என்னவாகும்? நிபுணர்கள் கணிப்பு..

வரும் 2027ஆம் ஆண்டில், எல் நினோவின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என்றும், இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம், இதோ.

Written ByYuvashree M
Published: Sep 04, 2026, 05:29 PM IST|Updated: Sep 04, 2026, 05:39 PM IST
joinshare
Explained : வறட்சியை வாரி வழங்கும் El nino! 2027ல் என்னவாகும்? நிபுணர்கள் கணிப்பு..
Image Credit: El Nino | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

2

டெட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பயிற்சி ஏற்பாடு

3

விலைவாசியை குறைங்க, பட்டினியா கிடக்க முடியல... விதவை பெண்ணின் தர்ணா போராட்டம்

4

அரசு ஊழியர்களுக்குத் குட்நியூஸ்! திருமண முன்பணம் விதிமுறையில் முக்கிய மாற்றம்

5

மனு போடவே வேண்டாம்... வீடு தேடி வரும் சேவைகள்! தமிழக அரசின் புதிய வெற்றி இ-சேவை 2.0 திட்டம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

உலக வானிலை அமைப்பு, 2027ஆம் ஆண்டு நாம் சந்திக்கப்போகும் எல் நினோ பாதிப்புகள் குறித்து பகீர் கிளப்பி இருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

2027ஆம் ஆண்டில் வரப்போகும் எல் நினோ, மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் என்று தற்போது தெரிய வந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இது குறித்து தெரிவிக்கையில், பசிபிக்கின் வானிலை அமைப்பு தற்போது நிலையாக இருப்பதாகவும், 2026ஆம் ஆண்டின் இறுதியில், இந்த வானிலை வலுபெறும் என்றும் கூறியிருக்கிறது. இது, அடுத்த ஆண்டின் பிப்ரவரி மாதம் வரை வலுபெற 100% வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த மாற்றம், கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரும் தாக்கத்தை உலகில் ஏற்படுத்தும் என்று உலக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

எல் நினோ (El Nino) என்பது, பசிபில் பெருங்கடலில் மத்திய மற்றும் கிழக்குப்பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக வெப்பமடையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வாக இருக்கிறது. ஸ்பேனிஷ் மொழியில், எல் நினோ என்றால் குழந்தை சிறுவன் என்று பொருள்.

வழக்கமான காலநிலையில், கிழக்கிலிருந்து மேற்காக வீசும் காற்று, ஆசியாவை நோக்கி சூடான நீரை தள்ளுகிறது. இதனால், ஆழத்திலிருந்து குளிர்ந்த நீர் மேலெழுகிறது.

எல் நினோ காலத்தில், இந்த காற்று பலவீனமடையும் அல்லது திசை மாறும். இதனால் சூடான நீர், கிழக்குப்பகுதியை நோக்கி திரும்பி, மேற்பரப்பு நீரின் வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கிறது.

எல் நினோவால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

முக்கியமான எல் நினோ பாதிப்பாக வானிலை மாற்றம் குறிப்பிடப்படுகிறது. இது, உலகளாவிய வானிலை அமைப்புகளை பாதிக்கும் ஒன்றா இருக்கிறது.

இரண்டாவதாக, இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற பகுதிகளில் பருவமழை குறைந்து வறாட்சி ஏற்பட வாய்ப்பை உண்டாக்குகிறது.

தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில், அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்துகிறது.

கடல் நீர் வெப்பமாவதால், அதில் வாழும் மீன்களுக்கு தேவையான உணவுகள் கிடைக்காமல் மீன் வளம் பாதிக்கப்படுகிறது.

எல் நினோ எப்போது நிகழும்?

எல் நினோ, பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழலாம். இதனால் ஏற்படும் பாதிப்புகளானது 9 முதல் 12 மாதங்கள் வரை கூட நீடிக்கும்.

சூப்பர் எல் நினோ என்றால் என்ன?

எல் நினோவை விட, சூப்பர் எல் நினோ சக்தி வாய்ந்தது. இது, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப்பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட, 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் மேல் அதிகரிக்கச்செய்யும். இது, உலகளாவிய வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் காலநிலை நிகழ்வாகும்.

இதனால் உலகின் ஒரு சில பகுதிகளில் கடும் வறட்சி, பயிர்ச்சேதம் மற்றும் பல பகுதிகளில் அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவை ஏற்படலாம்.

புவி வெப்பமயமாதலால், இது உலகளாவிய வெப்பநிலையையும் அதிக்ரிக்கும். இதனால் பலவித தீவிர வானிலை மாற்றங்கள் நிகழலாம்.

சிம்பிளாக சொல்லப்போனால், எல் நினோவால் ஏற்படும் பாதிப்புகளை விட, சூப்பர் எல் நினோ ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகமாகும்.

2027 வரை நீடிக்கும் பாதிப்புகள்!

உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, 2027 பிப்ரவரி வரை, எல் நினோ பாதிப்பு தொடரும் என தெளிவான மற்றும் உறுதியான கணிப்புகள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழலில், இந்த எல் நினோ வலுவடைந்து வருவது, உலக மக்கள் பலரையும் கவலையடைய செய்துள்ளது.

2027ஆம் ஆண்டில், உலக மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க இன்னும் சில காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுகின்றன. அதாவது, அடுத்த ஐந்து ஆண்டுகளில், உலகளாவிய வெப்பநிலையானது, இதற்கு முன் இருந்த உச்சபட்ச அளவுகளிலோ அல்லது அதற்கு மிக அருகில் நீடிக்கும் என்று உலக வானிலை அமைப்பின் மதிப்பீட்டு அறிக்கை எச்சரித்திருக்கிறது.

மேலும் படிக்க | Explained : ‘தங்கம் வாங்காதீங்க..வெளிநாடு போகாதங்க’ பிரதமர் மோடி இப்படி கூறியது ஏன்?

இந்தியாவிற்கு வரும் பாதிப்பு என்ன?

இந்த எல் நினோ பாதிப்பு, இந்தியாவில் எந்த அளவிற்கான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பலரது கவலையாக இருக்கிறது. ஏனென்றால், இந்தியாவில் அதிக மக்கள் தொகை இருப்பதும், இங்கு ஏதேனும் பாதிப்பு நிகழ்ந்தால் இதனால் பெருமளவிளான மக்கள் பின்விளைவுகளை சந்திக்கலாம். தற்போதைக்கு, இந்தியாவை பொறுத்தவரை எல் நினோவால் ஏற்படும் மிகப்பெரிய கவலையே, மழைப்பொழிவுதான். தென்மேற்கு பருவமழை இதனால் குறையும். இதில் ஒரே ஆறுதல் தரும் விஷயம், இந்தியாவின் பருவமழையை எல் நினோ மட்டுமே முழுமையாக தீர்மானிப்பதில்லை என்பதுதான்.

இந்த ஆண்டில், ஏற்கனவே குறைவான தென்மேற்கு பருவமழையால் தத்தளித்து வருகிறது. இந்த ஆண்டில், பருவகல மழைப்பொழிவானது நீண்டகால சராசரியில் 90% மட்டுமே இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் வரை இது தொடர்ந்து நீடித்தால், நாட்டின் நீர் இருப்பானது விவசாயத்திற்கும் கோடை வெப்பத்தை தனிப்பதற்கும் பற்றாக்குறையாகி போகலாம்.

இது குறித்து பேசும் நிபுணர்கள், இது மழைப்பொழிவுப் பரவலை மாற்றி, வெப்பநிலையை உயர்த்தக்கூடும் என்றும் பின்வாங்கும் தென்மேற்குப் பருவமழையின் மீதான இதன் உடனடித் தாக்கம் குறைவாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இருப்பினும் அது வடகிழக்குப் பருவமழையைப் பாதித்து, இயல்பை விட வெப்பமான குளிர்காலத்திற்கான சாத்தியத்தை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கின்றனர்.

இதுவரை இந்தியா சந்தித்த வறட்சி காலமானது, எல் நினோவின் காலத்தின் போதே வந்திருக்கிறது. இருப்பினும், மொத்தம் 23 எல் நினோ காலத்தில், 11ல்தான் இந்தியா வறட்சியை சந்தித்துள்ளது. எனவே, எல் நினோ காலமும் இந்தியா வறட்சியாக ஒரு காரணமாக இருந்திருக்கலாமே ஒழிய, அதையே மொத்த காரணமாக கூறி விட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்தியாவின் GDP வளர்ச்சி உண்மையில் 7.8% தானா? 2.6% கணக்கு எப்படி வந்தது? Explained

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer