• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /இந்தியாவின் GDP வளர்ச்சி உண்மையில் 7.8% தானா? 2.6% கணக்கு எப்படி வந்தது? Explained

இந்தியாவின் GDP வளர்ச்சி உண்மையில் 7.8% தானா? 2.6% கணக்கு எப்படி வந்தது? Explained

இந்தியாவின் 7.8% GDP வளர்ச்சி குறித்த சர்ச்சையில், 2.6% என்ற மாற்று கணக்கு எப்படி உருவானது, புதிய GDP Series மற்றும் GDP Deflator ஆகியவற்றின் பங்கு என்ன என்பது குறித்து இத்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Written ByR Balaji
Published: Sep 04, 2026, 04:47 PM IST|Updated: Sep 04, 2026, 04:54 PM IST
joinshare
இந்தியாவின் GDP வளர்ச்சி உண்மையில் 7.8% தானா? 2.6% கணக்கு எப்படி வந்தது? Explained

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

2

டெட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பயிற்சி ஏற்பாடு

3

விலைவாசியை குறைங்க, பட்டினியா கிடக்க முடியல... விதவை பெண்ணின் தர்ணா போராட்டம்

4

அரசு ஊழியர்களுக்குத் குட்நியூஸ்! திருமண முன்பணம் விதிமுறையில் முக்கிய மாற்றம்

5

மனு போடவே வேண்டாம்... வீடு தேடி வரும் சேவைகள்! தமிழக அரசின் புதிய வெற்றி இ-சேவை 2.0 திட்டம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நமது இந்திய நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக வெளியாகி உள்ளத புதிய GDP புள்ளிவிவரங்கள்தான் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன. 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 7.8% என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொருளாதார நிபுணர்கள் 7.1% ரிசர்வ் வங்கி 7% தான் கணித்து வைத்திருந்தனர். ஆனால் அதனை தாண்டி 0.7% அதிகமாக இந்த வளர்ச்சி பதிவாகி உள்ளது.

இந்த நிலையில்தான் நாட்டின் 7.8% GDP வளர்ச்சி குறித்து பொருளாதார நிபுணர்கள் மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பாக, கடந்த ஆண்டுக்கான GDP மதிப்பில் செய்யப்பட்ட பெரிய மாற்றம், GDP deflator எனப்படும் விலை மாற்ற கணக்கீடு மற்றும் புதிய GDP series ஆகியவை இந்த விவாதத்தின் மையமாக உள்ளன. அப்படியானால், இந்தியாவின் GDP உண்மையில் 7.8% வளர்ந்ததா? 2.6% என்ற மற்றொரு எண்ணிக்கை ஏன் பேசப்படுகிறது? இந்த சர்ச்சையின் பின்னணி என்ன?

முதலில் 7.8% GDP என்றால் என்ன?

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில், அதாவது ஏப்ரல்–ஜூன் 2026 காலகட்டத்தில், இந்தியாவின் Real GDP growth 7.8% என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் Nominal GDP growth 10.3% ஆக இருந்தது. அதாவது விலை மாற்றங்களை கணக்கில் எடுத்த பிறகு கிடைக்கும் உண்மையான உற்பத்தி வளர்ச்சி 7.8% என அரசு கணக்கிட்டுள்ளது.

இந்த வளர்ச்சிக்கு Manufacturing, நிதி மற்றும் தொழில்முறை சேவைகள், தனியார் முதலீடு மற்றும் நுகர்வு உள்ளிட்ட பல துறைகள் பங்களித்துள்ளன. குறிப்பாக Manufacturing துறை 9.2% வளர்ச்சியையும், நுகர்வு 7.1% வளர்ச்சியையும் பதிவு செய்ததாக Reuters தெரிவித்துள்ளது.

அப்படியென்றால் 2.6% என்ற எண்ணிக்கை எங்கிருந்து வந்தது?

இதுதான் தற்போதைய GDP விவாதத்திற்கான முக்கிய காரணம். முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் புதிய GDP Seriesல் கடந்த ஆண்டின் முதல் காலாண்டு Nominal GDP கணிசமாக குறைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

பழைய GDP Series-ன் அடிப்படையில் 2025-26 முதல் காலாண்டுக்கான Nominal GDP சுமார் ரூ. 86.05 லட்சம் கோடி என இருந்தது. புதிய Series-ல் இதே காலாண்டுக்கான மதிப்பு சுமார் ரூ. 80 லட்சம் கோடியாக மாற்றப்பட்டுள்ளது. இதனை பழைய எண்ணுடன் ஒப்பிட்டு, 2026-27 முதல் காலண்டின் புதிய Nominal GDP-யான சுமார் ரூ. 88.3 லட்சம் கோடியை கணக்கிட்டப்போது சுமார் 2.6% வளர்ச்சி கிடைக்கிறது. இதனால் இந்தியாவின் GDP வளர்ச்சி 7.8% அல்ல, வெறும் 2.6% தான் என சில வாதிட்டு வருகின்றனர்.

ஆனால் 2.6% என்ற கணக்கு சரியானதா?

2.6% என்ற எண்ணிக்கை, பழைய GDP Series-ல் இருந்த 2025-26 முதல் காலாண்டின் Nominal GDP-யையும், புதிய GDP Series-ல் கணக்கிடப்பட்ட 2026-27 முதல் காலாண்டின் Nominal GDP-யையும் ஒப்பிட்டு கிடைத்தது.

ஆனால் இந்த இரண்டு எண்ணிக்கைகளும் ஒரே முறையில் கணக்கிடப்பட்டவை அல்ல. 2026 பிப்ரவரியில் மத்திய அரசு GDP கணக்கீட்டுக்கான Base Year-ஐ 2011-12ல் இருந்து 2022-23 ஆக மாற்றியது. இதனுடன் கணக்கீட்டு முறையிலும், பயன்படுத்தப்படும் தரவுகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதனால் பழைய Series-ல் இருந்த GDP மதிப்பை, புதிய Series-ல் இருக்கும் GDP மதிப்புடன் நேரடியாக ஒப்பிட்டு வளர்ச்சி விகிதத்தை கணக்கிடுவது சரியான அணுகுமுறையாக இருக்காது.

அப்படியானால் 7.8% GDP வளர்ச்சி தவறானதா?

7.8% GDP வளர்ச்சி தவறானது என்று நேரடியாக கூறிவிட முடியாது. 7.8% என்பது புதிய GDP Series-ன் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள Real GDP growth rate. அதாவது புதிய Base Year மற்றும் புதிய கணக்கீட்டு முறையை பயன்படுத்தி இந்த வளர்ச்சி கணக்கிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்த புதிய கணக்கீட்டு முறையில் கடந்த ஆண்டுக்கான GDP மதிப்புகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்விதான் தற்போது விவாதமாகியுள்ளது. எனவே, இப்போது நடக்கும் விவாதத்தை “7.8% சரியா, 2.6% சரியா?” என்று மட்டும் பார்ப்பதைவிட, அந்த இரண்டு எண்களும் எப்படி உருவானது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

புதிய GDP-ல் என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

GDP கணக்கிடும் முறையில் Base Year மிகவும் முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட ஆண்டை அடிப்படையாக வைத்து, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றத்தை கணக்கிடுவதுதான் இதன் அடிப்படை. தற்போது இந்தியா 2022-23ஐ புதிய Base Year ஆக பயன்படுத்துகிறது. இதனுடன் பல்வேறு புதிய தரவுகளும் கணக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, விலைகளை கணக்கிடுவதற்கான தரவுகளில் மாற்றம், உற்பத்தி விலை குறியீடு உள்ளிட்ட புதிய தரவுகளை பயன்படுத்துவது மற்றும் வங்கி சேவைகளின் விலையை அளவிடுவதற்கான புதிய குறியீடுகள் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பழைய GDP Seriesல் வெளியான எண்ணிக்கைகளுக்கும் புதிய Seriesல் திருத்தப்பட்ட எண்ணிக்கைகளுக்கும் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

GDP Deflator என்றால் என்ன?

இந்த விவாதத்தில் அடிக்கடி கேட்கப்படும் மற்றொரு வார்த்தை GDP Deflator. இதை எளிமையாக சொல்லவேண்டுமென்றால், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, Nominal GDPயில் இருந்து Real GDPயை கணக்கிட உதவும் ஒரு அளவீடு.

2026-27 முதல் காலாண்டில் இந்தியாவின் Nominal GDP வளர்ச்சி 10.3% ஆக இருந்த நிலையில், Real GDP வளர்ச்சி 7.8% என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கிடையிலான வித்தியாசத்தை விளக்கும் முக்கிய காரணிகளில் GDP Deflator-ம் ஒன்று.

தற்போதைய கணக்கீட்டில் GDP Deflator சுமார் 2.3% என்ற அளவில் உள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் Wholesale Price Index மற்றும் Consumer Price Index போன்ற மற்ற விலை குறியீடுகளில் காணப்பட்ட மாற்றங்களுடன் இதை ஒப்பிடும்போது, GDP Deflator ஏன் இவ்வளவு குறைவாக உள்ளது என்ற கேள்வியை சில பொருளாதார நிபுணர்கள் எழுப்பியுள்ளனர். இதுவும் 7.8% வளர்ச்சி குறித்த சந்தேகங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

அரசின் விளக்கம் என்ன?

GDP கணக்கீட்டில் செய்யப்பட்ட மாற்றங்கள் எந்தவிதமான அரசியல் நோக்கத்துடனும் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. புதிய Base Year, கூடுதல் தரவுகள், மேம்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறைகள் மற்றும் சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப செய்யப்பட்ட மாற்றங்களின் காரணமாகவே பழைய GDP புள்ளிவிவரங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டதாக அரசு கூறுகிறது.

மேலும், GDP வளர்ச்சியை மட்டும் வைத்து பொருளாதார நிலையை மதிப்பிட முடியாது என்றாலும், தனியார் முதலீடு, நுகர்வு, உற்பத்தி மற்றும் வங்கி கடன் போன்ற சில முக்கிய குறியீடுகளும் பொருளாதாரத்தில் வளர்ச்சி இருப்பதை காட்டுவதாக அரசு தரப்பு சுட்டிக்காட்டுகிறது.

இந்திய பொருளாதாரம் உண்மையிலேயே வளர்கிறதா?

ஒருபுறம், 7.8% Real GDP growth, அதிகரித்த தனியார் முதலீடு, நுகர்வு மற்றும் Manufacturing வளர்ச்சி போன்ற தரவுகள் இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதற்கான அறிகுறிகளாக உள்ளன.

மறுபுறம், வேலைவாய்ப்பு உருவாக்கம், வெளிநாட்டு முதலீடு, விலைவாசி நிலவரம் மற்றும் சில துறைகளின் மந்தநிலை போன்ற விஷயங்கள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன.

எனவே, தற்போதைய சர்ச்சையை “இந்தியாவின் GDP 7.8% அல்ல, 2.6% மட்டுமே” என்று சுருக்கிவிடுவது சரியாக இருக்காது. 2.6% என்ற எண்ணிக்கை பழைய மற்றும் புதிய GDP Series-களின் வெவ்வேறு தரவுகளை ஒப்பிட்டதில் உருவானது. அதை தனியாக ஒரு அதிகாரப்பூர்வ Real GDP growth rate என்று கருத முடியாது.

உண்மையில், இந்த விவாதம் இந்திய பொருளாதாரம் வளர்கிறதா இல்லையா என்பதைக் காட்டிலும், அந்த வளர்ச்சியை எப்படி கணக்கிடுகிறோம், பழைய தரவுகளில் ஏன் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது, GDP Deflator ஏன் இவ்வளவு முக்கியமானதாக மாறியுள்ளது என்பதையே மையமாகக் கொண்டுள்ளது.

அதனால் 7.8% என்ற எண்ணிக்கையை மட்டும் பார்த்து இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்கிறது என்று முடிவு செய்வதும், 2.6% என்ற மாற்றுக் கணக்கை வைத்து GDP வளர்ச்சியே இல்லை என்று கூறுவதும் இரண்டுமே முழுமையான பார்வையாக இருக்காது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
India