SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

நடுவானில் மரண பயம்: 34,000 அடியில் கோடரி தாக்குதல்... 170 பயணிகள் உயிர் தப்பியது எப்படி? Flydubai FZ1073 Explainer!

34,000 அடி உயரத்தில் கோடரி தாக்குதல், 16,000 அடி உயர இழப்பு என மரணப் போராட்டத்தில் சிக்கிய Flydubai FZ1073 விமானம், பயணிகள் மற்றும் விமானிகளின் துரித செயல்பாட்டால் 170க்கும் மேற்பட்டோரை எப்படி காப்பாற்றியது?

Written By R Balaji
Published: Oct 05, 2026, 07:44 AM IST | Updated: Oct 05, 2026, 07:51 AM IST
Join

34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழ்நோக்கி பாய்கிறது. பயணிகள் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்து கொண்டிருக்க, காக்பிட்டுக்குள் விமானிக்கும் துணை விமானிக்கும் இடையே கடுமையான மோதல். அடுத்த சில நிமிடங்களில் அந்த விமானத்தில் இருந்த 170க்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்ற நடந்தது என்ன? Flydubai Flight 1073 சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

Flydubai Flight 1073 விமானத்தில் என்ன நடந்தது?

செப்டம்பர் 30 ஆம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி Flydubai-யின் FZ1073 விமானம் புறப்பட்டது. விமானத்தில் 170க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். வழக்கம்போல் பயணம் சென்று கொண்டிருந்த நிலையில், சவுதி அரேபிய வான்வெளியில் விமானம் சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத சம்பவம் நடந்தது.

விமானம் திடீரென வேகமாக உயரத்தை இழக்க தொடங்கியது. சுமார் 30 விநாடிகளில் 16,000 அடிக்கும் அதிகமான உயரத்தை விமானம் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

காக்பிட்டுக்குள் நடந்தது என்ன?

விமானம் ஏன் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது என்பதற்கான முக்கிய காரணம் காக்பிட்டுக்குள் கடந்த மோதலுடன் தொடர்புடையதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, விமானத்தில் துணை விமானி கேப்டனை தாக்கியதாக கூறப்படுகிறது. அவசரநிலைகளில் பயன்படுத்தப்படும் கோடரியை கொண்டு இந்த தாக்குதல் நடந்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தாக்குதலில் கேப்டன் காயமடைந்து காக்பிட்டுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், அவர் காக்பிட் கதவை திறக்க முடிந்தது. அதன்பிறகு நடந்தது தான் இந்த சம்பவத்தின் முக்கியமான திருப்பமாக அமைந்தது.

பயணிகள் காக்பிட்டுகள் சென்றது எப்படி?

காக்பிட் கதவு திறந்ததும், சில பயணிகள் உடனடியாக உள்ளே சென்று துணை விமானியை கட்டுப்படுத்த முயன்றனர். அந்த நேரத்தில் விமானம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்தது. விமானத்தை இயக்கக்கூடிய ஒருவர் தேவைப்பட்ட சூழலில், பயணிகளில் ஒருவரும் விமான குழுவினரும் சேர்ந்து விமானத்தை நிலைப்படுத்த உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த பணியில் இல்லாத இரண்டு விமானிகளும் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டனர். இதனால் விமானம் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விமானம் எங்கு தரையிறக்கப்பட்டது?

சம்பவத்துக்கு பிறகு விமானத்தின் பாதை மாற்றப்பட்டது. டெல் அவிவ் நோக்கி செல்ல வேண்டிய விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தை நோக்கி திருப்பப்பட்டது. அவசரநிலை காரணமாக விமானம் அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் விமானத்தில் இருந்த 170க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பினர்.

துணை விமானி ஏன் தாக்குதல் நடத்தினார்?

துணை விமானி ஏன் கேப்டனை தாக்கினார்? விமானத்தை கட்டுப்படுத்தும் நோக்கம் இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருந்ததா? இந்த கேள்விகளுக்கான முழுமையான பதில் இன்னும் வெளியாகவில்லை.

ஜக்கிய அரபு அமீரக அரசு வழக்கறிஞர், இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் முயற்சியாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தாக்குதலுக்கான முழுமையான நோக்கம் மற்றும் அதன் பின்னணி குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, விசாரணைமுடிவடையும் முன்பே இதற்கான காரணம் குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியாது.

இந்திய விமானி எப்படி உஅதவினார்?

இந்த சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த விமானி Smit Machchhar-ன் பங்களிப்பும் கவனம் பெற்றுள்ளது. விமானம் ஆபத்தான நிலையில் இருந்தபோது, விமானத்தை பாதுகாப்பாக கட்டுப்படுத்தி தரையிறக்குவதில் அவர் முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவத்திற்கு பிறகு, அவரது செயல்பாட்டை இஸ்ரேல் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். ஆபத்தான சூழலில் பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமான குழுவினரின் செயல்பாடு இந்த சம்பவத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

விமானம் எப்படி 16,000 அடி உயரத்தை இழந்தது?

விமானம் சுமார் 34,000 அடி உயரத்தில் இருந்தபோது ஏற்பட்ட கட்டுப்பாட்டு பிரச்சினை காரணமாக மிக வேகமாக கீழ்நோக்கி சென்றது. விமானம் இரண்டு முறை திடீரென கீழ்நோக்கி சென்றதாகவும் இதையடுத்து அவசரநிலை தொடர்பான சிக்னல்கள் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விமானத்தின் கட்டுப்பாடு மீண்டும் கைப்பற்றப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

விசாரணையில் என்ன நடக்கிறது?

விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அந்த நாட்டின் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர். சவுதி அரேபிய அதிகாரிகளும் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளனர். காக்பிட்டில் நடந்த தாக்குதல், விமானம் திடீரென உயரத்தை இழந்தது. துணை விமானியின் நோக்கம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் விமான பாதுகாப்பு தொடர்பாகவும் முக்கியமான கேள்விகளை எழுப்பி உள்ளது.

இன்னும் விடை தெரியாத கேள்விகள்

இந்தச் சம்பவம் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியிருந்தாலும், சில விஷயங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமான தெளிவு கிடைக்கவில்லை.

துணை விமானி ஏன் தாக்குதல் நடத்தினார்? அவரது நோக்கம் என்ன? விமானத்தை முழுமையாக கட்டுப்படுத்த முயன்றாரா? காக்பிட்டில் நடந்த மோதல் எவ்வளவு நேரம் நீடித்தது? இதுபோன்ற சம்பவத்தைத் தடுக்கும் வகையில் விமான நிறுவனங்களின் பாதுகாப்பு நடைமுறைகள் போதுமானதாக உள்ளதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் விசாரணை முழுமையாக முடிந்த பிறகே தெரியவரும்.

பெரும் விபத்தில் இருந்து தப்பிய விமானம்

34,000 அடி உயரத்தில் தொடங்கிய அந்த சில நிமிடங்களின் பரபரப்பு, இறுதியில் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பான தரையிறக்கத்துடன் முடிந்தது.

காக்பிட்டில் ஏற்பட்ட மோதல், விமானம் ஆயிரக்கணக்கான அடி உயரத்தை இழந்தது, பயணிகள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றது, பின்னர் விமானிகள் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது என அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் Flydubai Flight 1073 பயணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் விசாரணையின் முடிவுக்காக காத்திருக்கிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES