SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

6 வயது சிறுமி மீது கொலை வெறித்தாக்குதல்! 8 வயது சிறுவன் செய்த கொடூரம்.. பள்ளியில் ஷாக்

Haryana School Girl Assaults: ஹரியானாவில் 6 வயது சிறுமி மீது 8 வயது சிறுவன் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8 வயது சிறுவன் செய்த கொடூரம் பலரையும் பல கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Nov 01, 2026, 10:30 AM IST | Updated: Nov 01, 2026, 10:50 AM IST
Join

Haryana School Girl Assaults: நாட்டில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிறார்கள் இந்த கொலையில் ஈடுபடுவது  கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கும்போதே சிறார்கள் கொலை சம்பவங்களில் ஈடுபடுவது அவர்களது மனநிலை எப்படி இருக்கிறது என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது. இதற்கு சிறார்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த நிலையில், ஹரியானாவில் 8 வயது சிறுவன், 6 வயது சிறுமியை கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

6 வயது சிறுமி மீது தாக்குதல்

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் 3ஆம் வகுப்பு மாணவன், 6 வயது சிறுமியை தாக்கியுள்ளார். அக்டோபர் 28ஆம் தேதி பஞ்ச்குலா செக்டார் 20ல் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைக்குள் 8 வயது சிறுவன் ஒருவன் 6 வயது சிறுமியை கொலை வெறித் தாக்குதல நடத்தி இருக்கிறார்.  அக்டோபர் 28ஆம் தேதி தனது தந்தையிடம் சந்திக்க வைப்பதாக கூறி, சிறுவன், சிறுமியை அழைத்து சென்றார்.

பள்ளிக் கட்டிடத்தின் முதல் தளத்திற்கு சிறுமியை, 8 வயது சிறுவன் அழைத்து சென்றுள்ளான். முதல் மாடியில் காலியாக உள்ள வகுப்பறைக்கு சிறுமியை அழைத்து சென்ற அவன், சிறுமியை கல்லால் கொடூரமாக தாக்கியுள்ளான். பின்னர், பூந்தொட்டியாலும் அடித்துள்ளார். 

மேலும் படிக்க: Chalo Dilli: முதலில் போராட்டம்... பின்னர் ஷாப்பிங்... ராகுல் காந்தி போட்ட வீடியோ

அதன்பிறகு, சிறுமியின் தலையை இழுத்து சென்று, மேசையில் மோதினான். அந்தச் சிறுமி சுயநினைவை இழந்த பிறகும் இந்தத் தாக்குதல் தொடர்ந்தது. மேலும், அந்தச் சிறுவன் அவளது தலைமுடியைப் பிடித்துப் பள்ளி வளாகம் முழுவதும் இழுத்துச் சென்றான்.

வகுப்பறையில் தொடர்ந்து அந்த சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளான். இந்த தாக்குதலை தொடர்ந்து, சிறுமி பலத்த காயம் அடைந்த நிலையில், அவரை பஞ்ச்குலாவின் செக்டர் 6-ல் உள்ள சிவில் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு முதற்கட்ட சிகிச்சை அளித்த பின்னர், அவரது காயங்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் அவரை சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாக அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மேலும் படிக்க: தீபாவளிக்கு முன் ஷாக்... LPG சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு - சென்னையில் எவ்வளவு?

வழக்குப்பதிவு

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஹரியானா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாகவே முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.  இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியிடம் விரிவாக அறிக்கையை கோரியது. பள்ளிகளில் குழந்தைகளின் நடத்தையைக் கண்காணிக்க ஒரு சிறப்பு முறையை ஹரியானா மனித உரிமைகள் ஆணையமும் பரிந்துரைத்தது.

இதற்கிடையில், பஞ்ச்குலா காவல்துறையினர், சிறார் நீதிச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா (பி.என்.எஸ்) ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பள்ளி நிர்வாகத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். பள்ளி நிர்வாகம் அலட்சியம் கட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  இந்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிம்ரன்ஜித் கவுர் மற்றும் பூஜா ராணி என அந்த இரு ஆசிரியர்களும் பணியிடை செய்யப்பட்டுள்ளது.  பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் அலட்சியம் இருந்ததை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: 'தூஸ்ரா' படத்திற்கு எதிராக சவுரவ் கங்குலி வழக்கு.. பின்னணி என்ன? Explained
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES