SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஐஐடியில் தொடர் மர்மம்.. பாஜக ஆட்சியில் அதிகரித்த மாணவர்களின் மரணங்கள்.. பகீர் ரிப்போர்ட்!

IIT Students Deaths Explained: ஐஐடி பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி மாணவர்கள் உயிரிழப்பது இருமடங்கு உயர்ந்துள்ளாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 19, 2026, 05:44 PM IST | Updated: Oct 19, 2026, 06:09 PM IST
Join

IIT Students Deaths Explained: நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களாக விளங்கும் ஐஐடி பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தொடர் மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் ஐஐடி பல்கலைக்கழகங்களை தேர்வு செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், அறிவியில், பொறியியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் இந்தியா மட்டுமின்றி, ஆசிய கண்டத்திலேயே ஐஐடி புகழ்பெற்றவை.

ஐஐடியில் மாணவர்கள் தொடர் மரணம்

இருந்தபோதிலும் இங்கு பயிலும் மாணவர்கள் மர்மமான முறையில் மரணமடைவது பல சந்தேகங்களை கிளப்பி வருகின்றன. குறிப்பாக,  பட்டியலின, பழங்குடி மாணவர்கள்  சாதிய ரீதியாக  ஐஐடி பல்கலைக்கழங்களில் ஒடுக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், செப்டம்பர் 18ஆம் தேதி ஐஐடி மும்பையில் மாணவர் சாஹில் வக்கோடே தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த சாஹில், செப்டம்பர் 18 அன்று தனது விடுதி அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சாஹிலின் மரணத்திற்கு நீதி கேட்டு, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில், ஐஐடி மாணவர்கள் தொடர்ந்து மரணமடைவது கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்கு உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக ஆட்சியில் அதிகரித்த மாணவர்களின் மரணங்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்கள் மற்றும் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், ஜனவரி 2006 முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலகட்டத்தில்  நாடு முழுவதும் உள்ள ஐஐடி பல்கலைக்கழகங்களில்  மொத்தம் 171 மாணவர் தற்கொலைகள் மற்றும் இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  2006ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 51 மாணவர்கள் தற்கொலைகள் மற்றும் இயற்கைக்கு மாறான மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2016 முதல் 2026ஆம் ஆண்டு வரை மொத்தம் 120 மாணவர்கள் மரணமடைந்துள்ளனர்.

குறிப்பாக  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஐஐடி பல்லைக்கழகங்களில் மாணவர்கள் உயிரிழப்பது அதிகரித்து காணப்படுகிறது. ஆண்டு வாரியாக பார்க்கும்போது 2015ஆம் ஆண்டு 6 மாணவர்களும, 2014ஆம் அண்டு 13 மாணவர்களும் மரணமடைந்துள்ளனர். 2006 முதல் 2013 வரை மட்டும் 32 மாணவர்கள் தற்கொலை மற்றும் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2014-ல் 13 மாணவர் தற்கொலைகளும், அதைத் தொடர்ந்து 2018-ல் 11-ம், 2019-ல் 12-ம் நிகழ்ந்தன. 2020-களில் இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து, 2022, 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் தலா 14  மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 2025ஆம் ஆண்டில் மட்டும் மாணவர்கள் 16 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். 2026 செப்டம்பர் மாதம் 18ஆம் தேதிக்குள் மாணவர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளன.

டாப்பில் சென்னை ஐஐடி பல்கலைக்கழகம்

கடந்த 20 ஆண்டுகளில் ஐஐடி கரக்பூர் (மேற்கு வங்கம்)பல்கலைக்கழகத்தில் 29 மாணவர்கள் தற்கொலைகள் மற்றும் இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகி உள்ளன. தொடர்ந்த இரண்டாவது இடத்தில் ஐஐடி சென்னை பல்லைக்கழகத்தில் மாணவர்கள் 26 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்ததாக, ஐஐடி டெல்லியில் 17 மாணவர்களும், ஐஐடி மும்பையில், ஐஐடி குவஹாத்தியில் தலா 14 மாணவர்களும்  மரமடைந்துள்ளனர்.

ஐஐடி ஹைதரபாத்தில் 9 மாணவர்களும், ஐஐடி ரூக்கியில் 8 மாணவர்களும், ஐஐடி பாட்னாவில் 7 மாணவர்கள் தற்கொலைகள் மற்றும் இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகி உள்ளன.  மீதமுள்ள இறப்புகள் BHU வாரணாசி, புவனேஸ்வர், IIT-ISM தன்பாத், காந்திநகர், ரோபார், மண்டி, ஜோத்பூர், திருப்பதி, தார்வாட், கோவா மற்றும் இந்தூர் உட்பட பல IITகளில் பதிவாகி உள்ளன. ஜம்மு, பிலாய் மற்றும் பாலக்காடு போன்ற புதிய ஐஐடி-களில் மாணவர் தற்கொலைகள் எதுவும் பதிவாகவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு இறப்புகள்?

செப்டம்பர் 2021 முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலகட்டத்தில் 74 ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள் மற்றும் இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகியுள்ளன. 2021-ஆம் ஆண்டில் 3 மாணவர்களும், அதைத் தொடர்ந்து 2022, 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் தலா 14 மரணங்களும் நிகழ்ந்தன. 2025-ல் இந்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது, அதே சமயம் 2026 செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் 13 மரணங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தன.

ஐஐடி வளாகம் தற்கொலை/இயற்கை மாறான மரணங்கள் எண்ணிக்கை
(2021-2026 செப்டம்பர்) 
ஐஐடி கரக்பூர் (மேற்கு வங்கம்)
 
13
ஐஐடி கான்பூர் (உத்தர பிரதேசம்)
 
09
ஐஐடி டெல்லி
 
09
ஐஐடி சென்னை (தமிழ்நாடு)
 
07
ஐஐடி குவாஹாட்டி  (அசாம் )
 
06
ஐஐடி மும்பை (மகாராஷ்டிரா)
 
06
ஐஐடி வாரணாசி (உத்தர பிரதேசம்)
 
05
ஐஐடி ரூர்க்கி (உத்தரகாண்ட்)
 
04
ஐஐடி ஹைதராபாத் (தெலங்கானா)
 
04
ஐஐடி பாட்னா (பீகார்)
 
03
ஐஐடி கோவா
 
01
ஐஐடி ரோபார் (பஞ்சாப்)
 
01
ஐஐடி இந்தூர் (மத்திய பிரதேசம்)01
ஐஐடி புவனேஸ்வர் (ஓடிசா)
 
02
ஐஐடி-ஐஎஸ்எம் தன்பாத் (ஜார்க்கண்ட்)03
                                                    மொத்தம்74 மாணவர்கள் மரணம்

சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் மாணவர்களின் மரணம், ஐஐடி-களில் பயிலும் மாணவர்களின் மனநலம் மோசமடைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. சாதி ரீதியாக ஒடுக்குமுறை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் இம்மாதிரியாக தவறான முடிவுகளை எடுப்பதாக சொல்லப்படுகிறது.  இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

(தற்கொலை எண்ணங்களால் அவதிப்படுபவர்கள் அல்லது மன அழுத்தத்தில் இருப்பவர்கள் உடனடியாக உதவி பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: • சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் (சென்னை): 044-24640050 அல்லது 044-24640060; தமிழ்நாடு அரசின் மருத்துவ உதவி மையம்: 104; டெலி-மானஸ் (Tele-MANAS) உதவி எண்: 14416)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES