• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained : மகாராஷ்டிராவில் 75% வறட்சி! 1975 மாதிரி ஆகிடுமோ? அச்சத்தில் விவசாயிகள்..

Explained : மகாராஷ்டிராவில் 75% வறட்சி! 1975 மாதிரி ஆகிடுமோ? அச்சத்தில் விவசாயிகள்..

மகாராஷ்டிராவின் 75 சதவீத பகுதியை, மாநில அரசு, வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்திருக்கிறது. இதையடுத்து, இந்தியா இந்த பருவமழை காலத்தில் ஏன் இவ்வளவு வறட்சியானதாக இருக்கிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 29, 2026, 18:32 IST|Updated: Sep 29, 2026, 18:38 IST
joinshare
Explained : மகாராஷ்டிராவில் 75% வறட்சி! 1975 மாதிரி ஆகிடுமோ? அச்சத்தில் விவசாயிகள்..
Image Credit: Maharashtra Drought | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

2

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

3

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

4

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

5

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

பருவமழை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பொய்த்து வருகிறது. இதில் பெரிதாக பாதிக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது மகாராஷ்டிரா. இந்த பகுதியில் 75 சதவீதம் வறட்சி நிலவுவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

மகாராஷ்டிரா வறட்சி:

மகாராஷ்டிராவில், இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவிற்கு பருவ மழை பெய்யவில்லை. இதையடுத்து சோலாப்பூர் உள்பட சில மாவட்டங்களில், 50 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான மாவட்டங்களில், போதிய அளவு விவசாய பணிகள் நடைபெறவில்லை.

தற்போது, பருவமழை இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இனி அதிகப்படியான மழை பெய்து, பற்றாக்குறையான மழையை சரி செய்யுமா எனும் கேள்வி நிலவி வருகிறது. இதையடுத்து, மழை குறைவாக இருக்கும் தாலுக்காக்கள் குறித்து மாநில அரசு, கணக்கெடுப்பு நடத்தி இருக்கிறது.

வறண்ட வானிலை மற்றும் மழைப்பற்றாக்குறி காரணமக, பயிர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து, அம்மாநிலத்தில் இருக்கும் 358 தாலுக்காக்களில், 265 தாலுக்காக்களை வறட்சி பகுதிகளாக மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்த சதவீதம், மாநிலத்தின் பரப்பளவில் நான்கில் மூன்று பங்கை உள்ளடக்கியதாக இருக்கிறது. மழைப்பற்றாக்குறை காரணமாக, ஜூன் மாதம் முதல் 265 வட்டங்களில், வறட்சி போன்ற சூழல் நிலவுவதாக வேளாண் ஆணையர் சமீபத்தில் அரசுக்கு அறிக்கை அனுப்பினார். பருவமழை காலத்தில், மழையின்றி குறைந்த்து 21 நாட்கள் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவினால், அது வறட்சி மிகுந்த பகுதியாக அறிவிக்கப்பட்டு விடும்.

11 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வறண்ட வானிலை!

தாமதமாக பெய்த கனமழையையும் மீறி, 2026ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழையானது, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் வறண்ட பருவமழையாக மாற இருக்கிறது.

சமீபத்தில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கிழக்கு, வடக்கிழக்கு, மத்திய மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் பரவலான மழை பெய்ய காரணமாக இருந்தது. இதையடுத்து, நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு இந்த பருவத்தின் மழை பற்றாக்குறை, 15 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்திருந்தது.

பழை பெய்தாலும், இந்த பருவமழை, 2015ஆம் ஆண்டிற்கு பிறகு, இந்தியாவில் முதல் பற்றாக்குறை பருவமழையாகவும், சுதந்திரத்திற்கு பிந்தைய, 10 பலவீனமான பருவமழைகளுள் ஒன்றாகவும் இருக்கிறது.

நம்பிக்கையின்மையில் விவசாயிகள்!

துலே பகுதியின், சாக்ரி தாலுகாவில் இருக்கும் விவசாயிகளுக்கு, இந்த வருடத்தின் வறட்சி, மழையின்மை காரணமாக மட்டும் கடினமானதாக இல்லை. மழை பெய்து, நம்பிக்கையை கொடுத்து, பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படும் போது மழை பொய்த்து போவதுதான் வேதனையாக இருக்கிறது.

மகாரஷ்டிர அரசாங்கத்தால், வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 265 தாலுக்காக்களும், சாக்ரியும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 358 தாலுக்காக்கள் இருக்கின்றன. இதில், தூலெ மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 4 தாலுக்காக்களும் வறட்சி ஏற்பட்ட பகுதிகளாக மாறியிருக்கின்றன. இந்த மாநிலத்தில் 18 சதவீதம் இந்த வருடத்தில் மழை குறைந்திருக்கிறது. 798.2 மில்லி மீட்டர் மட்டுமே ஜூன் 1 முதல் செப்டம்பர் மாதம் வரை மழை பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக 970.9 மில்லி மீட்டர் மழையே பதிவாகி இருக்கிறது.

சாக்ரி பகுதியில், ஜூன் 1 முதல் செப்டம்பர் 11 வரை, சுத்தமாக மழையே பெய்யவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சாக்ரி தாலுகாவில் உள்ள 227 கிராமங்கள் 50 சதவீத மழையை மட்டுமே எதிர்கொண்டதாம். அதுவும், ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் மட்டும். பெரும்பாலான மழை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்ததால், இந்தப் பகுதியில் மழை குறைவாகவே இருந்தது. மேலும், விதைப்புப் பருவத்திற்கு முன்பே மழை பெய்தது" என்று இது குறித்த அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க | Fixed Deposit விதிகளில் அக்டோபர் 1 முதல் பெரிய மாற்றம்: RBI முக்கிய அறிவிப்பு

1972 வறட்சி:

1972ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி என்பது, இந்திய வரலாற்றிலும், குறிப்பாக மகாராஷ்டிர மாநில வரலற்றிலும் ஒரு மிக மோசமான இயற்கை பேரிடர் மற்றும் உணவு நெருக்கடியாக கருதப்படுகிறது. இது, உலகளவில், தீவிர எல் நினோ விளைவால் உருவான பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டது.

மகாராஷ்டிராவில் மட்டும், கிட்டத்தட்ட 2.5 கோடி மக்கள் மற்றும் 80 சதவீத விவசாய நிலங்கள், இந்த வறட்சி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அப்போது, மகாராஷ்டிராவில் இருந்த 26 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் கடும் வறட்சியில் சிக்கி தவித்தன. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பருவமழை பொய்த்ததால், கிணறுகள், ஏரிகள் மற்றும் ஆறுகள் முற்றிலும் வறண்டு போயின. பயிர்கள் கருகி விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாயின.

மகாராஷ்டிரா மட்டுமன்றி, குஜராத், ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகாவின் மைசூரு பகுதி ஆகிய மாநிலங்களின் உட்பகுதிகளும் இந்த வறட்சியால் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின.

உணவு தானிய உற்பத்தி, சுமார் 100 மில்லியன் டன்களாக குறைந்தது. மொத்தத்தில், 1972 வறட்சி, இந்தியாவில் பெரும் உணவு பஞ்சத்தை ஏற்படுத்தியது.

தற்போது நிலவும் வறட்சியை காணும் மக்கள் பலர், இதனை 1972 வறட்சியுடன் ஒப்பிடுகின்றனர்.

மகாராஷ்டிர விவசாயிகள், கடைசியாக நல்ல மழையை பார்த்த நியாபகமே இல்லை என்கின்றனர். ஒரு சில நாட்களில், மழைத்துளி விழுவது போல சத்தம் கேட்டு நடு இரவில் விழித்துக்கொள்வதாகவும், பின்னர்தான் அது தங்களின் கற்பனை என தெரிய வருவதாகவும் கூறுகின்றனர்.

ஜூனில் மழை ஆரம்பித்த போது நம்பிக்கையுடன் இருந்ததாக சொல்லும் அவர்கள், அதன் பின் ஆகஸ்டில் மொத்தமாக மழை நின்ற பிறகு அந்த நம்பிக்கை அழிந்து விட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | Explainer: LPG சிலிண்டர்.... விலை முதல் புக்கிங் வரை, அக்டோபர் 1 முதல் 5 முக்கிய மாற்றங்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer