Nandini Milk: பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்வு.. வெளியான அதிர்ச்சி தகவல்!
Nandini Milk Price Hike: நவம்பர் 1 முதல் நந்தினி பால் விலை ரூ.8 வரை உயரக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் நந்தினி பால் ரூ.54 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஒரு லிட்டர் நந்தினி பால் விலை ரூ.46க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Nandini Milk Price Hike: கர்நாடக அரசின் கீழ் இயங்கும் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் நந்தினி பாலை மாநிலம் முழுவதும் விற்பனை செய்து வருகிறிது. இந்தியாவின் இரண்டவாது மிகப்பெரிய பால் கூட்டுறவு நிறுவனமாகும். கர்நாடகா முழுவதும் மக்கள் பெரும் நந்தினி பாலை தினந்தோறும் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
நந்தினி பால் விலை உயர்வு
அதாவது, நவம்பர் 1ஆம் தேதி முதல் நந்தினி பால் விலை உயரக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நந்தினி பால் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் நந்தினி பால் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அப்போது, நந்தினி ஒரு லிட்டர் பால் விலையை ரூ.8 வரை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6 ரூபாய் பால் உற்பத்தியாளர்களுக்கும், 2 ரூபாய் பால் சங்கங்களுக்கு வழங்கப்படும். நந்தினி பால் விலை உயர்வு நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு லிட்டர் நீல நிற நந்தினி பால் விலை ரூ.46-லிருந்து ரூ.54 ஆக உயரும். இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தற்போது கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
மேலும் படிக்க: குஜராத் டூ டெல்லி வரை.. 25 ஆண்டு சாதனை கொண்டாட்டம்! நன்றி தெரிவித்த பிரதமர்
அதாவது, உள்ளாட்சி தேர்தலால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால், நந்தினி பால் விலை உயர்வை உடனடியாக அமல்படுத்த கோரி தேர்தல் ஆணையத்திடம் முதல்வர் டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதி உள்ளார் என கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டால், நவம்பர் 1ஆம் தேதி முதல் பால் விலை உயர்வு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது. இந்த விலை உயர்த்தப்பட்டால், நவம்பர் 2022 முதல் நந்தினி பால் விலையில் செய்யப்படும் ஐந்தாவது மாற்றமாகும். நவம்பர் 2022ல் நந்தினி பால் விலை ரூ.3 உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, ஜூலை 2023ல் ரூ.3, ஜூன் 2024ல் ரூ.2, மார்ச் 2025ஆம் ஆண்டில் ரூ.4 என விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
நந்தினி பால் விலை உயர்வுக்கு காரணம்
கால்நடைகளுக்காக தீவினம், புல், மருந்துகள், போக்குவரத்து, பிளாஸ்டிக் பேக்கேஜிங் ஆகியவற்றின் செலவுகளை சமாளிக்க முடியவில்லை தொழிற்சங்கள் தெரிவித்து இருக்கின்றனர். இவர்கள் கர்நாடக அரசிடம் ஒரு லிட்டருக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை விலை உயர்வை கோரியிருந்தன. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகாவில் பால் கொள்முதல் விலை குறைவாக இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். தொழிற்சங்கங்களின் கூற்றுப்படி, கர்நாடகாவில் ஒரு லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால் ரூ.35க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆந்திராவில் ரூ.41.5, கேரளாவில் ரூ.41.8, தமிழகத்தில் ரூ.42.2 என்ற விலைக்கு பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அதிகரித்து வரும் செலவுகளை குறிப்பிட்டு, பால் விலையை உயர்த்த வேண்டும் என கர்நாடக அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது ஒரு நந்தினி பால் விலையை ரூ.8 வரை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக, அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள் மே 14ஆம் தேதி முதல் ஒரு லிட்டர் பால் விலையை ரூ.2 வரை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.