• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained : CJP போராட்டக்காரரின் தலையை உடைத்தது பெருமையா? கைது செய்யப்பட்ட இன்ஃப்ளுவன்சர்..

Explained : CJP போராட்டக்காரரின் தலையை உடைத்தது பெருமையா? கைது செய்யப்பட்ட இன்ஃப்ளுவன்சர்..

உலகையே திரும்பி பார்க்க வைத்த சமீபத்திய நிகழ்வுதான், இளைஞர்களின் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவியின் மண்டையை உடைத்ததற்காக இந்துத்துவ அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Written ByYuvashree M
Published: Sep 05, 2026, 05:59 PM IST|Updated: Sep 05, 2026, 06:09 PM IST
joinshare
Explained : CJP போராட்டக்காரரின் தலையை உடைத்தது பெருமையா? கைது செய்யப்பட்ட இன்ஃப்ளுவன்சர்..
Image Credit: Bharatwaj | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : SBI வங்கி கணக்குகளின் விவரங்கள் லீக்! உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளதா?

Explained : SBI வங்கி கணக்குகளின் விவரங்கள் லீக்! உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளதா?

2

40 கோடி செலவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்! தமிழ்நாடு அரசு உத்தரவு..

3

Explained: சென்னையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது ஏன்? இந்தாண்டு தப்பிக்குமா?

4

கடிப்பிடித்ததால் வந்த விணை! மனைவியின் மார்பு எலும்புகளை உடைத்த கணவன்..

5

ஹர்திக் பாண்டியா ஏன் இந்திய அணியில் தவிர்க்க முடியாத தூண்...? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நடந்த போராட்டத்தை எந்த வரலாறும் அவ்வளவு எளிதில் மறந்து விடாது. இந்த போராட்டத்தில் மாணவர்கள், தங்களை தாக்கியதாக ஒரு அமைப்பினர் கூற, மாணவர் தரப்பினர் தாங்கள் தாக்கப்பட்டதாக கூறுகின்றனர். இதில் எது உண்மை எனும் ஆராய்ச்சியை விடுத்து, பலரும் போராட்டம் முடிந்து தரேந்திர பிரதான் பதவி விலகிய பின்பு அவரவர் வேலையை பார்க்க தொடங்கி விட்டனர். இந்த சமயத்தில்தான், இந்துத்துவ அமைப்பை சேர்ந்த ஒரு நபர், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தான் ஒருவரின் மண்டையை உடைத்ததாக கூறி, தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் என்ன நடந்தது?

காக்ரோச் ஜனதா கட்சி, ஜூன் 6ஆம் தேதி ஆரம்பித்து, ஜூலை 25ஆம் தேதி வரை ஜந்தர் மந்தரில் போராட்டத்தை நடத்தியது. இவர்களின் முக்கிய கோரிக்கையே, நீட் தேர்வு முறையீடுகளுக்கு தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும், நீட் தேர்வு முறைகேட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் போன்றவைதான்.

ஜூலை 9ஆம் தேதி, தாங்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

ஜூலை 20ஆம் தேதி, அறிவித்தப்படி லட்சக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நாடாளுமன்றம் நோக்கி தங்களின் நடை பயணத்தை தொடங்கினர். அவர்களை போலீசார் ப்ளாக் செய்து, தடியடி, தண்ணீர் பீச்சு, கண்ணீர் புகை குண்டுகள் போட்டு தடுக்க பார்த்தனர். அப்போது பலருக்கு காயங்கள் ஏற்பட்டது.

ஜூலை 23ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக், தன்னுடைய 26 நாட்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

ஜூலை 26, தர்மேந்திர பிரதான் தன் பதவியில் இருந்து விலகினார்.

செப்டம்பர் 1ஆம் தேதி, போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட புகார்கள் ரத்து செய்யப்பட்டன.

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது, நிஷு அசாத் என்கிறா மாணவியின் தந்தை சஞ்சய், பரத்வாஜ் எனும் இந்துத்துவ இன்ஸ்டா இன்ஃப்ளுவன்சரால் தாக்கப்பட்டுள்ளார். அந்த சமயத்தில், போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கைவில்லை என்று பரத்வாஜே, சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில், பாஜகவின் சில மூத்த அதிகாரிகளின் பெயரை கூறி அவர்கள் போன் செய்ததால் தான் விடுவிக்கப்பட்டதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அண்ணன் போன்றவர் என்றும் தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் அவர் போராட்டத்தின் போது தான் குப்பைக்கு அருகே தள்ளப்பட்டதாகவும், அப்போது தான் திருப்பி அடிக்கவில்லை என்றால் அது நன்றாக இருக்காது எனும் காரணத்தால் அவர் மண்டையை உடைத்ததாகவும் கூறியிருந்தார்.

பரத்வாஜின் இந்த பேச்சும், தனக்கு ஒருவர் உதவியதாக அவர் பேசிய தொனியும் பலரை அச்சுறுத்தியது.

மீண்டும் வெடித்த போராட்டம்:

சுதந்திர பரத்வாஜ் எனும் அந்த இன்ஃப்ளுவன்ஸரின் வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, நாடாளுமன்ற வீதி காவல் நிலையம் முன்பாக, காக்ரோச் ஜனதா கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட சுதந்திரா பரதாஜ் கைது செய்யப்படுவார் என காவல்துறையினர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, அப்போராட்டம் ஓரளவிற்கு சமநிலைக்கு கொண்டு வரப்பட்டது.

உத்தர பிரதேசத்தின், புலந்த்ஷாஹரிஸ் எனும் இடத்தில், பரத்வாஜ் தலைமறைவகா இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் துறையினர் அங்கு சென்றதோடு சுற்றி விசாரித்துள்ளனர். அப்போது, தப்ப முயன்ற பரத்வாஜை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.

எப்போது நடந்தது?

ஜந்தர் மந்தர் போராட்டம் நடந்து கொண்டிருந்த ஜூன் 23ஆம் தேதியன்று தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில், பாதிக்கப்பட்ட சஞ்சய் குமார், தன்னுடைய மகளும், நீர் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவியுமான நிஷு அசாத் உடன் போராட்டக்களத்தில் இருந்திருக்கிறார். அப்போது அவர் தன் மகளுக்கு நியாயம் வேண்டும் என்று முழக்கமிட்டு கொண்டிருந்த போது தலையில் தாக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பல தையல்கள் போடப்பட்டுள்ளது.

என்ன பிரச்சனை?

இந்துத்துவ இன்ஃப்ளுவன்ஸரான பரத்வாஜ், தான் ஒரு மனிதரின் தலையை உடைத்ததோடு, அதை ரொம்பவே பெருமையாக சமீபத்திய பாட்காஸ்டில் கூறியிருந்தார். அதோடு, பாஜகவில் உள்ள கபில் மிஸ்ரா என்பவரிடம் போன் கால் வந்த பிறகு தான் சிறையில் இருந்து வெளியில் வந்ததாகவும், இன்னும் பல முக்கிய தலைவர்களின் பெயர்களை கூறி, அவர்கள் தனது அண்ணன் போன்றவர்கள் என்றும், அவர்கள் தனக்கு ஆதரவு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

”நான் நிஷுவின் தந்தையின் மண்டையை உடைத்தேன். அது எந்த குற்றப்பிரிவில் வரும் தெரியுமா? செக்‌ஷன் 310. நான் மண்டையை உடைத்த நபருக்கு 60 தையல்கள் தேவைப்பட்டது. அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில், ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார். அவருடைய மகள் காவல் நிலையத்திற்கு வெளியில் நின்று கொண்டு தன் தந்தைக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், தானும் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று மிரட்டினார்” என்று அந்த நபர் பாட்காஸ்டில் தெரிவித்துள்ளார்.

டெல்லி போலீஸ் தெரிவிப்பது என்ன?

டெல்லி போலீசார், Fact check ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “23.06.2026 அன்று ஜந்தர் மந்தரில் நடைபெற்ற CJP போராட்டத்தின்போது, ​​காசியாபாத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் (38) என்பவருக்கு, ஒரு மோதலின்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அணிந்திருந்த 'கடா' (கைவளையம்) தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது.

RML மருத்துவமனை மருத்துவர்களால் அவர் பரிசோதிக்கப்பட்டதில், அவருக்கு ஏற்பட்ட காயங்கள் சாதாரணமானவை என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் காயங்கள் 'கடா'வினால் ஏற்பட்டவையே தவிர, வேறு எந்த ஆயுதத்தாலும் ஏற்படவில்லை. மண்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டதாகப் பரப்பப்படும் தவறான தகவல், உண்மைகளாலோ அல்லது மருத்துவச் சான்றிதழ் (MLC) குறிப்புகளாலோ உறுதிப்படுத்தப்படவில்லை; அது முற்றிலும் ஆதாரமற்றது.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் (PS Parliament Street) வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்; விசாரணையின்போது, ​​சூரஜ் குமார் (24) மற்றும் சுதந்திர பரத்வாஜ் (21) ஆகியோருக்கு சட்டப்படி அறிவிப்புகள் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் தகுந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படும்.

இவ்விவகாரத்தில் தேவையற்ற செல்வாக்கு அல்லது தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைகளுக்குப் புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை.

இவ்விவகாரம் சட்டம் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க மிகக் கடுமையாகக் கையாளப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer