வங்கிகளுக்கு இனி சனிக்கிழமை விடுமுறையா? மத்திய அரசு Fact Check சொல்வது என்ன?
அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் பொது விடுமுறை என்று மத்திய அரசு அறிவித்திருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் இனி சனிக்கிழமை விடுமுறை என மத்திய அரசு அறிவித்திருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வந்தது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசு அறிவிப்பு என வெளியான செய்தி:
மத்திய அரசு வெளியிட்டது போன்ற அரசிதழ் அறிவிப்பு ஒன்று வைரலாகி வந்ததூ. அதில், “இனி, வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகள் செயல்படும் என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்றும், அனைத்து சனிக்கிழமையும் பொதுத்துறை வங்கிகளுக்கும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளுக்கும் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதாகவும்” என்று மத்திய அரசு தெரிவித்தது போன்ற ஒரு தகவல் வைரலாகி வந்தது. இதற்கு, மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசு Fact Check :
வாரத்தில் 5 நாள் மட்டுமே வங்கிகளுக்கு வேலை, சனிக்கிழமைகளில் விடுமுறை என்கிற அறிவிப்பை தவறானது என்று மத்திய அரசின் PIB Fact Check தளம் உறுதி படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் பதிவில், “சமூக ஊடகங்களில் பரவி வரும், நிதி அமைச்சகத்தால் (நிதிச் சேவைகள் துறை) வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு அரசிதழ், எஸ்பிஐ உட்பட அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் மத்திய அரசு ஒவ்வொரு சனிக்கிழமையையும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளதாகக் கூறுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
அதோடு, இந்த ஆவணம் முற்றிலும் பொய்யானது என்றும், இது போன்ற ஒரு அரிவிப்பை மத்திய அரசின் இந்திய நிதி அமைச்சகம் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய அரசு தெரிவித்தது போன்ற இந்த பொய்யான அறிவிப்புகளை பார்த்தால் உடனே தெரியப்படுத்தவும் என்று PIB தெரிவித்திருக்கிறது. இதற்கு Whatsappல் +91 8799711259 மற்றும் Mail ID : factcheck@pib.gov.in ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
போராட்டம் வாபஸ்:
சனிக்கிழமை, வங்கிகளுக்கு பொதுவிடுமுறையாக இருக்க வேண்டும் என்பதுதான், அனைத்து வங்கி ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதனால், கடந்த மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் செய்வோம் என்று அறிவித்திருந்தனர். இதையடுத்து, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக கடந்த ஞாயிறு அன்று மட்டும் வேலை செய்வதாக தெரிவித்தனர். இறுதியில், அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.