தங்கம் வாங்க வேண்டாம்... கிரிகிஸ்தானில் இருந்து வீடியோ போட்ட பிரதமர் மோடி
இக்கட்டான காலத்திலும் இந்தியா அதன் அசாத்திய பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது என பிரமதர் மோடி நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த அதேவேளையில், அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தம் குறையே மக்களை தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகமாக 7.8% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த சிறப்பான பொருளாதார வளர்ச்சியை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேவேளையில் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நாடு தொடர்ந்து முன்னேற, தற்சார்பு கொள்கையையும், தற்சார்பு பாரதம் இலக்கையும் தீவிரமாக பின்பற்றுமாறு அவர் பொதுமக்களிடம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
வீடியோ மூலம் வாழ்த்து
தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிரிகிஸ்தான் நாட்டிற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பிஷேக்கில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் வீடியோ வெளியிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அந்த வீடியோவில் பிரதமர் மோடி பேசியதாவது:
உலகெங்கும் போர்ச் சூழல்களஉம், விநியோகச் சங்கிலி பாதிப்புகளும் நிலவும் இந்த இக்கட்டான காலத்திலும் இந்தியா அதன் அசாத்திய வளர்ச்சியை எட்டியுள்ளது என பாராட்டுத் தெரிவித்தார். 140 கோடி மக்களின் கூட்டு உழைப்பும், உறுதியுமே நாட்டின் இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்
நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அதே நேரத்தில் சில முக்கிய வேண்டுகோளையும் பிரதமர் மோடி முன்வைத்தார்.
வெளிநாடு போக வேண்டாம்: தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கவும். உள்நாட்டுச் சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
உள்நாட்டிலேயே திருமணம்: வெளிநாடுகளில் ஆரம்பத் திருமணங்கள் நடத்துவதை தவிர்த்து, உள்நாட்டிலேயே திருமணங்களை நடத்த வேண்டும்.
உள்நாட்டுப் பொருட்களுக்கு ஆதரவு: உள்ளூர் பொருட்கள் மற்றும் உள்ளூர் சேவைகளை நாம் அதிகம் பயன்படுத்தும்போது நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும்.
தங்கம் வாங்க வேண்டாம்: அவசியமில்லாத போது தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார் இதன்மூலம், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தம் குறையும்.
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கு
சுயசார்பு கொள்கையை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்கும்பட்சத்தில், சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை எட்டும்போது, அதாவது 2047ஆம் ஆண்டில் இளைய தலைமுறையிடம் ஒரு முழுமையான வளர்ந்த இந்தியாவை ஒப்படைக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த மே மாதமும் வலியுறுத்திய பிரதமர்
முன்னதாக, சர்வதேசப் போர் பதற்றங்கள், பணவீக்கத்தைச் சமாளிக்க பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், பெட்ரோல் டீசல் நுகர்வைக் குறைத்தல், மின்சார வாகனங்களை பயன்படுத்துதல், வீட்டில் இருந்தே பணிபுரிதல் போன்ற வழிகளை பின்பற்றுமாறு பிரதமர் மோடி கடந்த மே மாதமே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இக்கட்டான உலகளாவிய சூழலில், இந்தியப் பொருளாதாரம் தநது ஸ்திரத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள ஒவ்வொரு குடிமகளின் பங்களிப்பும் அவசியம் என்பதை பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டி உள்ளார்.