• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /Kanyakumari Red Alert: திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை மூடல்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

Kanyakumari Red Alert: திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை மூடல்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Written ByR Balaji
Published: Oct 24, 2026, 03:35 PM IST|Updated: Oct 24, 2026, 03:41 PM IST
joinshare
Kanyakumari Red Alert: திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை மூடல்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இனி EB ரீடிங் எடுக்க ஆள் வரத் தேவையில்லை: தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் Explained

இனி EB ரீடிங் எடுக்க ஆள் வரத் தேவையில்லை: தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் Explained

2

Kanyakumari Red Alert: திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை மூடல்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

3

நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

4

அரசு ஊழியர்களுக்கு அதிரடி எச்சரிக்கை: நேரடியாக மனு அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை!

5

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: முன் பணம் பெறும் விதிமுறைகளில் முக்கிய மாற்றம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மறு உத்தரவு வரும் வரை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், கன்னியாகுமரியில் காலை முதல் மழை பெய்யாததால், சுற்றுலாப் பயணிகள் பலரும் அங்கு வந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் எவை?

மழை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, விவேகானந்தர் பாறை, திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம் மற்றும் கடற்கரைப் பகுதிகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சுற்றுலாத் தலங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யாததால் சுற்றுலாப் பயணிகள் வருகை!

மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும், கன்னியாகுமரியில் காலை முதல் மழை பெய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், காலை 9 மணி முதலே சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள பகுதிகளுக்கு வந்து செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே பெய்த கனமழையால் சில பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்புகள் உருவாகியுள்ளன. இதையடுத்து, அடுத்த சில நாட்களுக்கு நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்யவில்லை என்றாலும், வானிலை எச்சரிக்கையை புறக்கணித்து ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu