• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /வெளிநாட்டில் தங்கம் வாங்காதீங்க! பிரதமர் மோடி சொன்னதன் பின்னணி என்ன? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

வெளிநாட்டில் தங்கம் வாங்காதீங்க! பிரதமர் மோடி சொன்னதன் பின்னணி என்ன? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்வதாக கூறி இருந்தார். இருப்பினும் மக்கள் வெளிநாடுகளில் திருமணம், தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டார். இந்த நிலையில், பிரதமர் மோடி, அப்படி சொல்ல காரணம் என்ன என்பது குறித்து ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார்.

Written ByR Balaji
Published: Sep 03, 2026, 05:36 PM IST|Updated: Sep 03, 2026, 05:40 PM IST
joinshare
வெளிநாட்டில் தங்கம் வாங்காதீங்க! பிரதமர் மோடி சொன்னதன் பின்னணி என்ன? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

2

டெட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பயிற்சி ஏற்பாடு

3

விலைவாசியை குறைங்க, பட்டினியா கிடக்க முடியல... விதவை பெண்ணின் தர்ணா போராட்டம்

4

அரசு ஊழியர்களுக்குத் குட்நியூஸ்! திருமண முன்பணம் விதிமுறையில் முக்கிய மாற்றம்

5

மனு போடவே வேண்டாம்... வீடு தேடி வரும் சேவைகள்! தமிழக அரசின் புதிய வெற்றி இ-சேவை 2.0 திட்டம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய நாட்டின் பொருளாதாரம் 7.8% வேகத்தில் வளர்ந்து வருவதாக சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பொருமிதம் கொண்டார். அப்போது நம் நாட்டு மக்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்வது, அங்கு தங்க நகை வாங்குவது உள்ளிட்ட விஷயங்களை தவிர்க்க வேண்டும் என என குறிப்பிட்டிருந்தார். இது இந்தியர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்போதும், பிரதமர் மோடி இப்படி சொல்ல காரணம் என்ன? இதற்கு பின்னால் இருப்பது என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் எழுப்பி வந்தனர். சிலர் பிரதமர் மோடியின் இந்த பேச்சை விமர்சிக்கவும் செய்தனர். இப்படி பல முரண்பாடுகள் இருந்தன. இந்த நிலையில், ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பிரதமர் நரேந்திர மோடி அப்படி சொல்ல காரணம் என்ன என்பது குறித்து விளக்கி உள்ளார்.

இது தொடர்பாக பேசிய ஸ்ரீதர் வேம்பு, இந்திய பொருளாதாரம் 7.8 சதவீதம் என்ற வலுவான வளர்ச்சியை பதிவு செய்திருக்கும் நிலையில், வெளிநாடுகளில் செய்யப்படும் செலவுகளை குறைக்க வேண்டும் என்பது முரண்பாடாக தோன்றலாம். ஆனால், பொருளாதாரம் வேகமாக வளரும்போது அதனுடன் இறக்குமதி தேவையும் அதிகரிப்பது இயல்பானது என ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக தொழில்துறை உற்பத்தி மற்றும் மக்களின் நுகர்வு அதிகரிக்கும் போது, எரிசக்தி, இயந்திரங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கான வெளிநாட்டு சார்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி வருவாய் உயர்வது நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் முக்கிய வழியாக இருந்தாலும், ஏற்றுமதி நிறுவனங்களே தங்களது உற்பத்திக்கு தேவையான பல்வேறு பொருட்களை வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டிய சூழல் உள்ளது. இயந்திரங்கள், மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதால், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வெளிநாட்டு வருவாயின் ஒரு பகுதி மீண்டும் வெளிநாடுகளுக்கே செல்கிறது.

இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உள்நாட்டு தொழில்நுட்ப உற்பத்தியை வலுப்படுத்துவது முக்கியம் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக செமிகண்டக்டர், பிராசஸர், கிராபிக்ஸ் பிராசஸர் மற்றும் உயர்தர மென்பொருள் போன்ற துறைகளில் உள்நாட்டு திறனை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர் வலியுறுத்துகிறார்.

இதன் காரணமாக ஏற்றுமதியை மட்டும் அதிகரிப்பது அந்நிய செலாவணி தொடர்பான சிக்கலுக்கு முழுமையான தீர்வாகிவிடாது. வெளிநாடுகளுக்கு பொருட்களை விற்பதன் மூலம் வருவாய் கிடைத்தாலும், நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான இறக்குமதிகளுக்காக கணிசமான தொகை மீண்டும் செலவிடப்படுகிறது. எனவே, ஏற்றுமதி வளர்ச்சியுடன் உள்நாட்டு உற்பத்தி திறனையும் இணைந்து மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இதற்கு உதாரணமாக ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் சீனா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளின் வளர்ச்சி பாதையை ஸ்ரீதர் வேம்பு குறிப்பிடுகிறார். இந்த நாடுகள் பொருளாதார வளர்ச்சியை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், அதே காலகட்டத்தில் தங்களது தொழில்நுட்ப திறன், உற்பத்தி கட்டமைப்பு மற்றும் உள்நாட்டு தொழில் நிறுவனங்களையும் வலுப்படுத்தின.

இந்தியாவின் நீண்டகால பொருளாதார இலக்கு ஜிடிபி வளர்ச்சியுடன் முடிந்துவிடக்கூடாது என்பதே அவரது கருத்தாக உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தியை உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனையும் இந்தியா வளர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியின் அளவை படிப்படியாக குறைக்க முடியும். அதேபோல், உயர்தர தொழில்நுட்ப பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் திறன் அதிகரித்தால், அவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நிய செலாவணியையும் சேமிக்க முடியும்.

எனவே, இந்திய பொருளாதாரம் 7.8 சதவீதம் என்ற வேகத்தில் வளர்ந்தாலும், அந்த வளர்ச்சிக்குத் தேவையான பல முக்கிய பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை தொடர்ந்தால், அந்நிய செலாவணி மீது அழுத்தம் நீடிக்கலாம். இதனால்தான் உள்நாட்டு உற்பத்தி, தொழில்நுட்ப தன்னிறைவு மற்றும் எரிசக்தி சுயசார்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இந்த பின்னணியில்தான் வெளிநாடுகளில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டின் அந்நிய செலாவணியை உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துவதும், வெளிநாட்டு சார்பை படிப்படியாக குறைப்பதும் நீண்டகால அடிப்படையில் இந்தியாவுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும். இதனுடன், தங்கம் போன்ற இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான தேவையை குறைக்க வேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
India