Explained : உலகம் முழுவதும் வரப்போகும் 4 நெருக்கடிகள்! ஜெய்சங்கர் சொன்ன பகீர் தகவல்..
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், நாட்டிற்கு உணவு மற்றும் இதர அத்தியாவசியங்களில் நெருக்கடி வரும் என்று கூறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
நியூயார்க்கில் இருக்கும் ஆசியா சொசைட்டியில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ‘அடுத்த சில மாதங்களில் உலகம் முழுக்க, ஒரு பெரிய உணவு நெருக்கடி ஏற்படும்’ என்று கூறியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல் நினோ மட்டும் காரணமா?
தீவிரமான ‘எல் நினோ’ நிகழ்வு, உக்ரைன் - மேறு ஆசிய போர் உள்ளிட்டவை காரணமாக உலகில் உணவு பஞ்சம் நிகழலாம் என்று ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். இந்த சூழல்தான், தானியங்கள், உரங்களின் விநியோகத்தை பாதித்து, குறிப்பாக வளரும் மற்றும் ஏழை நாடுகளை இது கடுமையாக பாதிக்கக்கூடும் என்று கூறியிருக்கிறார்.
இந்த காரணங்கள் போதாதென, மேற்கொண்டு வெளிப்படையாக தெரியாத இன்னொரு பாதிப்பும் இருப்பதாக கூறியிருக்கிறார். மோதல்கள் ஏற்படும் நேரத்தில், முதலீடுகள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதாகவும், ‘குளோபல் சவுத்’ எனப்படும் வளரும் நாடுகளிலிருந்து நிதி வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளார். இது, ஆற்றல் (எரிசக்தி), உணவு, உரம் மற்றும் நிதி ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நெருக்கடிக்குள்ளாக்கும் சூழலை உருவாக்கும் என்று கூறியிருக்கிறார்.
Climate Prediction Centre2 எனும் காலநிலை முன்னறிவிப்பு மையம், இது குறித்த ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது. அதில், எல் நினோ வலுவடைந்து வருவதாகவும், 2026-27ஆம் ஆண்டின் இலையுதிர் மற்றும் குளிர்கால பருவங்களில், இது மிக தீவிரமான நிகழ்வாக மாறுவதற்கு 90% அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில், கிழக்கு பூமத்திய ரேகை, பசிபிக் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 3.0டிகிரி செல்சியஸ் அதிகமாக உயரக்கூடுமாம்.
இருப்பதிலேயே, தீவிரமான எல் நினோவாக கருதப்படுவது, 1950ஆம் ஆண்டில் நிகழ்ந்ததுதான். இதை மிஞ்சும் வரையில் அக்டோபர்-டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் காலநிலை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், நீண்ட கால சராசரி மழையளவில், 87%, 1901ஆம் ஆண்டுக்கு பின் பதிவான குறைந்த பருவமழை அளவுகளில், இது 13 வது இடத்தையும், 2001க்கு பின், 4வது இடத்தையும் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் கூட, வெறும் 99.5 மி.மீ மழை மட்டுமே பெய்தது. இது இயல்பை விட சுமார் 40% குறைவாகும்.
குறைவான மழை பதிவு!
கிழக்கு மற்றும் வடக்கிழக்கு இந்தியாவில், இயல்பை விட 26 சதவீதமும், தென்னிந்திய தீபகற்ப பகுதியில், 24 சதவீதமும், மழை குறைவான அளவே பதிவானது.
அரசு, தன்னுடைய 2026-2027ஆம் ஆண்டிற்கான உனவு தானிய உற்பத்திக்கான இலக்கையும் குறைத்திருக்கிறது. ராபி பயிரின் குளிர்கால பயிர் சாகுபடியே, அணைகளின் நீர்மட்டத்தை சார்ந்திருப்பதால், இது அடுத்த சவாலாக இருக்கிறது.
இந்தியாவின் நிலை என்ன?
இந்தியாவிற்கு, இன்னும் போதுமான கையிருப்பு உணவு இருக்கிறது. கடந்த ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி, இந்திய உணவு கழகமான FCI, 40.31 மில்லியன் டன் அரிசியும், கூடுதலாக 38.74 மில்லிய்ன் டன் அரிசியை உற்பத்தி செய்யக்கூடிய நெல் கையிருப்பும் இருந்தன. இருந்தாலும், விலை உயர்வு தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம்.
அரசிடம், அதிக கையிருப்பு இருந்தாலும் உயர்த்தர அரிசியின் விலைகள் அதிகரித்து வருகின்றன. ஏனென்றால், இந்திய உணவு கழகத்தின் கையிருப்பில் இருக்கும் அரிசியில், பெரும்பகுதி நலத்திட்டங்களுக்கான பொதுவாக ரகங்களாக இருக்கின்றன. தென்கிழக்கு ஆசியா மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பகுதி அரிசி உற்பத்தி, 2 முதல் 8 சதவீதம் வரை குறையக்கூடும் என ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
மேலும் படிக்க | ச்சீ ஹோட்டல் பாத்ரூம்ல இப்படியா? சாப்பிட வந்தவங்களுக்கு ஷாக்..வைரலாகும் வீடியோ
வறட்சியால் பாதிப்பு..
ஏற்கனவே தாய்லாந்தில் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. தாய்லாந்தில், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், இயல்பை விட ஏறக்குறைய 60 சதவீதம் குறைவான மழை பதிவாகி இருக்கிறது. கம்போடியாவில், ஒரு லட்சம் ஹெக்டருக்கும் அதிகமான நெல் வயல்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பிலிப்பைன்ஸ், மிகவும் பாதிக்கப்படக்கூடிய இம்போர்ட் ஆளராக இருக்கிறது. அமெரிக்க வேளாந்துறை, பிலிபைன்ஸ் அரிசி உற்பத்தி 12.36 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 12.25 மில்லியன் மெட்ரிக் டன்னாக குறையும் என கணித்திருக்கிறது. இறக்குமதியானது, 5.20 மில்லியன் மெட்ரிக் டன்னை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களுக்கு உணவு உதவி தேவை!
தெற்கு மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில், சுமார் 6.7 கோடி மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுவதாக, உலக வங்கி ஏற்கனவே கணக்கிடப்பட்டிருக்கிறது. மேலும், சூடானில் 14 பகுதிகளில் பஞ்ச அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. இதில் சிறு ஆறுதல் தரும் ஒரே விஷயம், இந்த ஆண்டுக்கான வணிக மக்காச்சோளப் பயிர், சுமார் 1.74 கோடி டன்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், இது ஓரளவுதான் கைக்கொடுக்கும்.
இந்த எல் நினோ நிகழ்வு, கிட்டத்தட்ட 5 கோடி மக்கள் வரை பட்டினியில் தள்ளக்கூடும் என்று ஐநா சபையால் கணிக்கப்பட்டிருக்கிறது.
விலை உயர்வதால், விவசாயிகள் குறைவான அளவில் மட்டுமே உரங்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால், போதிய மழைப்பொழிவு இருந்தாலுமே, பயிர் விளைச்சல் பாதிக்கப்படலாம். இதற்கு முன்னர், 2023ல் இந்தியாவின் எல்நினோ கால நிலை அரிசித்தடையை ஏற்படுத்தியது. இதனால், உலகளாவிய விலைகளை 15-20 சதவீதம் உயர்த்தும் நிலை ஏற்பட்டது.
யார் அதிகம் பாதிக்கப்படுவர்?
கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கும் இறக்குமதி நாடுகள், அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆப்ரிக்காவில் பல்வேறு நாடுகள் மற்றும் தெற்காசியாவில் இருக்கும் நாடுகள் போன்ற, கடன் நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு அதிக விலையை கொடுக்கும் திறன் இல்லாமல் போய் விடும். FCI கையிருப்பை உணவு, அரசியல் கருவியாக நாம் பயன்படுத்தலாம்.