Telangana Mla Malreddy Ranga Reddy Video: நாடு முழுவதும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள், வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், சிறுமிகள், பெண்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க கடமையாக சட்டங்கள் கொண்ட வந்தாலும், பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களில் பெண்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இப்படியான சூழலில், மக்கள் பிரநிதியாக இருக்கும் எம்எல்ஏ ஒருவரே கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டாதாக கூறப்படும் சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறி இருக்கிறது.
அக்டோபர் 6ஆம் தேதி தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டினம் பகுதியில் இருந்து யம்ஜால் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, இம்பராஹிம்பட்டினம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மால்ரெட்டி ரங்கா ரெட்டி பேருந்தில் ஏறியதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண்கள், சிறுமிகள் மற்றும் திருநங்கைகளுக்கான மகாலட்சுமி இலவசப் பயணத் திட்டத்தில் பயணிக்கும் பெண்களிடம் பேசுவதற்காக பேருந்தில் ஏறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் பயணிகள் எவ்வாறு பயனடைகிறார்கள் என்பதை ஆய்வு செய்வதற்காக அவர் பேருந்தில் ஏறி இருக்கிறார். அப்போது, கல்லூரி மாணவி ஒருவரிடன் எம்எல்ஏ ரங்கா ரெட்டி உரையாற்றி இருக்கிறார். மகாலட்சுமி இலவச பேருந்து பயணத் திட்டம் மூலம் ரூ.45000 வரை சேமிக்க முடிகிறது என மாணவி அவரிடம் தெரிவித்து இருக்கிறார். கல்லூரி மாணவியிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவர் தகாத முறையில் நடந்து இருப்பதாக வீடியேவில் பதிவாகி உள்ளது.
இது தொடர்பாக வெளியான வீடியோவில், எம்எல்ஏ ரங்கா ரெட்டி சீட்டில் அமர்ந்திருக்க, நின்று கொண்டிருந்த 2 கல்லூரி மாணவர்களிடையே பேசினார். அதில், ஒரு மாணவியிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, மாணவியின் கையை பிடித்திருக்கிறார். இதனால், மாணவிக்கு அசௌகரியம் ஏற்பட்ட நிலையில், கையை விலக்க முயன்றுள்ளார்.
அதுபற்றி தெரிந்தும் எம்எல்ஏ ரங்கா ரெட்டி, தொடர்ந்து மாணவியின் இடுப்பை பிடிக்க முயல்வது வெளியான வீடியோவில் தெரிகிறது. காங்கிரஸ் எம்எல்ஏ ரங்கா ரெட்டி மாணவியிடம் அத்துமீறிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், காங்கிரஸ் மால்ரெட்டி ரங்கா ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
The Congress needs to train its male politicians to keep their hands off girls. His banal conversation doesnt need him to repeatedly touch her. Doesn’t matter how old he is - she is NOT comfortable and this man has NO idea of consent. Keeps reaching out, feeling her upper waist when she is attempting to move away in that cramped space plus holds the hand of her friend who also helps pull her back. Women are Goddesses blah blah but wont leave a chance to feel up a child old enough to be his grand daughter.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 6, 2026
இதுகுறித்து பாடகி சின்மயி தனது எக்ஸ் தளத்தில் கூறியருப்பதாவது, "பெண்களைத் தொடாமல் இருக்கத் தங்கள் ஆண் அரசியல்வாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது காங்கிரஸ் கட்சியின் கடமை. சாதாராணமான உரையாடலின்போது, அவர் அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் தொட வேண்டிய அவசியமில்லை. அவரது வயது என்ன என்பது முக்கியமில்லை. அந்த பெண்ணக்கு அசௌகரியம் ஏற்பட்டது.
அந்த மனிதனுக்கு consent என்றால் என்னவென்ற புரிதலே அந்த மனிதருக்கு இல்லை. நெருக்கடியான அந்த இடத்தில் அப்பெண் விலகிச் செல்ல முயலும்போதும் அவர் அவளைத் தொட முயற்சிக்கிறார். அத்துடன் அந்த பெண்ணை பின்னோக்கி இழுக்க உதவும் அவளது தோழியின் கையை பிடிக்கிறார். பெண்கள் தெய்வங்கள் என மேடைக்கு மேடை பேசிகிறார்கள்.
ஆனால், தங்கள் பேத்தி வயதிலிருக்கும் ஒரு சிறுமியை தவறாகத் தொட்டுப் பார்க்கும் வாய்ப்பைக்கூட அவர்கள் விடுவதில்லை” என்று கூறினார். எம்எல்ஏ ரங்கா ரெட்டியின் செயல் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்த போதிலும், இதுரை அவரது தரப்பில் இருந்தும், அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் எந்த ஒரு அறிக்கைகள் குறிப்பிடவில்லை.