SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : ‘தங்கம் வாங்காதீங்க..வெளிநாடு போகாதங்க’ பிரதமர் மோடி இப்படி கூறியது ஏன்?

பிரதமர் நரேந்திர மோடி, சில நாட்களுக்கு முன்னர் நாட்டு மக்களை தங்கம் வாங்க வேண்டாம் என்றும், வெளிநாட்டிற்கு குடிபெயற வேண்டாம் என்று கூறியது ஏன் என்பது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Sep 03, 2026, 05:39 PM IST | Updated: Sep 03, 2026, 05:44 PM IST
Join

சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்திருப்பதாக ஒரு ரீல்ஸை பதிவிட்டிருந்தார். அப்போது வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும், தங்கம் வாங்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இதற்கு  காரணம் என்ன?

தங்க நகைகள் என்பது, இந்தியாவை பொறுத்தவரை ஒரு பெரிய முதலீடாகவும், கலாச்சாரத்துடன் இணைந்ததாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக பெண் குழந்தை பிறக்கும் போது, அதற்கென்று தங்க நகைகள் சேர்த்து வைக்க ஆரம்பித்து விடுவர், அக்குழந்தையின் பெற்றோர். அதுமட்டுமன்றி, இந்தியாவின் நடுத்தர குடும்ப நிலையை பொறுத்தவரை, அவர்களுக்கு தங்கம் என்பது ஒரு பெரிய சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த சமயத்தில்தான், தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போதைய சூழலில், தங்கத்தை இறக்குமதி செய்வது, தேசத்தின் பொருளாதார கட்டமைப்புகளுக்கு சவாலாக இருப்பதுதான் இதற்கு காரணமாம்.

மத்திய ஆசியாவில் நிலவி வரும் போர்ச்சூழல் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய பணவீக்கம் ஆகிய சவால்களுக்கு மத்தியிலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி பெற்றிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இருப்பினும், ஆண்டு தோறும் சுமார் 7 ஆயிரம் கோடி டாலருக்கு அதிகமான, அந்நிய செலவாணியை தங்கம் வாங்க மத்திய அரசு செலவிடுவதுதான், இந்த நெருக்கடியை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இப்படி, அந்நிய செலவாணியை அதிகம் இழந்தால், உலகின் முக்கிய பொருளாதார சக்தியாக இந்தியா தொடர முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.

மேற்கூறிய விவகாரத்தின் மையப்புள்ளியாகத்தான், பிரதமர் மோடி ‘தங்கம் வாங்க வேண்டாம்’ என கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. நாட்டில் இறக்குமதி செலவை குறைக்கவும், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை எனப்படும் CADஐ கட்டுப்படுத்துவதுதான் ஒரு நாட்டின் GDP வளர்ச்சியை நிலையானதாக மாற்றும் என்பது பொருளாதார வல்லுநர்கள் சொல்லும் கூற்றாக இருக்கிறது.

பொருளாதார வல்லுநர்கள் சொல்வது என்ன?

பொருளாதார வல்லுநர்கள், இது குறித்து பேசுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். இதை மேலும் வலுப்படுத்துவதற்காகவே, பிரதமர், தங்கம் வாங்குவதை குறைக்குமாறு வலியுறுத்தி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | சுபாஷ் சந்திரா விவகாரம்: NCLAT-ல் நடந்த சட்டப் போராட்டம் மற்றும் வழக்கு பின்னணி

’தற்சார்பு இந்தியா’ என்றால் என்ன?

தற்சார்பு இந்தியா என்பது, வெளிநாடுகளின் இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம், நாட்டை பொருளாதாரத்தில் சுதந்திரமானதாகவும், வலுவானதாகவும் மாற்றும் ஒரு திட்டமாக இருக்கிறது. இந்த திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் கொரோனா பெரிடர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் பொருட்களை தயாரித்து, உள்நாட்டு தொழில்களை வளர்த்தல், இந்திய பொருட்களை உலக சந்தைக்கு கொண்டு சேர்த்தம், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவித்தல் இதன் நோக்கமாகும்.

பிரதமர் மோடி குறிப்பிடும் இந்த ‘தற்சார்பு இந்தியா’ என்பது, வெறும் அரசியல் கோஷம் மட்டும் கிடையாது. இது நாட்டின் அந்நிய செலவாணியை பாதுகாகும் ஒரு சொல்லாகவும் இருக்கிறது. மக்கள் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கமும், நம் ரூபயின் மதிப்பை குறைத்து, டாலர் பிடியை வலுப்படுத்துகிறது. இந்த நிலையில் இருந்து மற்றாம் வேண்டும் என்பதற்காகவே, தேவையில்லாமல் தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

தங்க இறக்குமதி:

சீனாதான், உலகளவில் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில், இந்தியா இருக்கிறது. கடந்த நிதியாண்டை காட்டிலும் இந்த நிதியாண்டில்தான் தங்கத்தின் இறக்குமதி 24 சதவீதம் அதிகரித்து, சுமார் 71.98 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த நிதியாண்டில் மட்டும், தங்கம் இறக்குமதி 58 பில்லியன் டாலராக இருந்தது. சர்வதேச சந்தையில் உருவான விலை உயர்வால், 2025-26ல் 757.09 டன்னாக இருக்கிறது. இதன் இறக்குமதி எடை, இந்த நிதியாண்டி, 721.03 டன் ஆக குறைந்திருக்கிறது. இருந்தாலும், பண மதிப்பு ரீதியாக இறக்குமதி செலவு, கணிசமாக உயர்ந்திருக்கிறது.

ஓர் ஆண்டு தங்கம் இறக்குமதியை நிறுத்தினால் என்னவாகும்?

நல்லது தானா?

தங்கத்தின் இறக்குமதியை, முழுவதும் நிறுத்துவது என்பது, பேக் ஃபயரும் ஆகலாம். மேக்ரோ பொருளாதார ரீதியாக ரூபாயின் மதிப்பு உயர்வு போன்ற நன்மைகள் கிடைத்தாலும், சிறிய ரக (மைக்ரோ) பொருளாதார ரீதியாக உள்நாட்டில் நகை தொழில் முடக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கலாம். கள்ளச்சந்தை அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு இப்போதைக்கு தேவை, இப்போதைக்கு தங்கமாக இல்லை. உள்நாட்டு தயாரிப்புகளும், தொழில்முனைவோரும் நிலையான பொருளாதார வளர்ச்சியும்தான். இது தொடர்ந்தால், கண்டிப்பாக இந்தியா அபரிபிதமான வளர்ச்சி அடையும் என்பது நிபுணர்களின் கூற்றாக இருக்கிறது.

மேலும் படிக்க | வெளிநாட்டில் தங்கம் வாங்காதீங்க! பிரதமர் மோடி சொன்னதன் பின்னணி என்ன? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES