SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

கடந்த 10 நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வரும் நிலையில், தங்கம் விலை குறைவுக்கான காரணம் குறித்து பிரதமர் மோடி முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். அவசரத் தேவையின்றி வாங்க வேண்டாம் என்றும் தான் விடுத்த அழைப்பின் காரணமாகவே தங்கம் விலை குறைந்ததாக கூறினார்.

Written By Umabarkavi K
Published: Nov 22, 2026, 17:30 IST | Updated: Nov 22, 2026, 17:48 IST
Join

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. சில நாட்களாகவே தங்கம் விலை சட்டென குறைந்து வருவது நகை பிரியர்களுடைய பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது. தொடர்ந்து விலை குறைந்து ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்திற்கு கீழ் இறங்கியது. அப்படியாக கடந்த நவம்பர் 18 ஆம் தேதி தங்கம் விலை பெருமளவில் சரிவை சந்தித்தது. 

தொடர்ந்து குறையும் தங்கம் விலை

அதன்படி கடந்த நவம்பர் 18ஆம் தேதி சவரனுக்கு ரூ.2,040 குறைந்தது. தொடர்ந்து நவம்பர் 20ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1880 குறைந்திருந்தது. நவம்பர் 22ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு  ரூ.91,720-க்கு, கிராமுக்கு ரூ.11,465-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஒரு பக்கம் சரிந்து வந்தாலும், சரி இந்த அளவுக்கு தங்கம் விலை ஏறுமோ என்ற அச்சம்  சாமானியர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இப்படியான சூழலில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைவதற்கான காரணத்தை பிரதமர் மோடி விளக்கம் அளித்து இருக்கிறார்.

தங்கம் விலை குறைவுக்கு காரணம்

கடந்த மே மாதம் நாட்டு மக்களிடம் தங்கம் வாங்குவது தவிர்க்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். மக்கள் அதை ஏற்றுக் கொண்டதால் தங்கத்தின் விலை குறைய அது உதவியது என்று பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார். லக்னோ கோமதி நகரில் உள்ள இந்திரா காந்தி பிரதிஷ்டானில் ஐந்தாவது தேசிய திறன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார் ‌. 

அப்போது தங்கம் விலை குறைவு குறித்து அவர் விளக்கம் அளித்திருக்கிறார். தங்கம் விலை குறைவு குறித்து பேசி பிரதமர் மோடி, அத்தியாவசிய தேவை இல்லை என்றால் ஓராண்டுக்கு யாரும் வாங்க வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக் கொண்டிருந்தேன் என்று நினைவு கூர்ந்த அவர், 1965 ஆம் ஆண்டு கடுமையான உணவு மையத்தின் போது ஒருவேளை உணவை தவிர்க்குமாறு முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி விடுத்த அழைப்புடன் தனது கோரிக்கையை ஒப்பிட்டார்.

"அப்போது முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் அழைப்புக்கு இந்த நாடு செவி சாய்த்தது. இன்றும் இந்த நாடு அதே பண்பையே கொண்டுள்ளது. என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் தங்கம் வாங்குவதை குறைக்கும் ஆறு கேட்டுக் கொண்டதற்கு நாட்டு மக்கள் மதிப்பளித்து தங்கம் வாங்குவதை குறைத்தனர். அதனால் தங்கத்தின் விலையும் குறைந்தது. இன்று மக்கள் என்னிடம் நீங்கள் சொல்வதால் தங்கத்தை நாங்கள் வாங்கவில்லை அதனால் எங்கள் பணம் மிச்சமானது என்றும் மக்கள் கூறுவதாக" பிரதமர் மோடி தெரிவித்தார்.  

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை பெரும் சரிவை கண்டுள்ளது. பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது மே ஒன்பதாம் தேதி கிராம ஒன்றுக்கு தங்கம் விலை ரூ.15,250 ஐம்பதாக இருந்த தங்கத்தின் விலை, இன்று ரூ.11,465 ஆக குறைந்துள்ளது.

பிரதமர் மோடியின் வேண்டுகோள் என்ன?

மத்திய கிழக்கு நாடுகளின் நிலவிய போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது தொடர்ந்து இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு கடும் அழுத்தத்திற்கு உள்ளானது. அத்தகைய சூழ்நிலையில்தான் கடந்த மே மாதம் நாட்டு மக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். தங்கம் மட்டுமின்றி, எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வீட்டில் இருந்தே பணி புரியுமாறு கோரிக்கை வைத்தார். வெளிநாட்டு பயணங்களை குறைக்க வேண்டுமென கூறினார். செப்டம்பர் மாதத்திலும் அத்தியாவசிய தீவு என்று தங்கமாவதற்கு மாறும் மக்களிடம் அவர் மீண்டும் கேட்டுக் கொண்டார்.

தங்கம் விலை சரிவுக்கு  உண்மை காரணம் என்ன?

தங்கம் விலை வீச்சுக்கு முக்கியமான காரணமாக, அமெரிக்காவில் வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தியது காரணம் என கூறப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை அரசு உயர்த்தியது. தற்போது டிசம்பர் மாதத்திலும் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் போது டாலர் மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி (லாபம்) கிடைக்கும். தங்கத்தை வாங்கி வைத்தால் வட்டி எதுவும் கிடைக்காது என்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுவிட்டு அதிக லாபம் பத்திரங்களில் பணத்தை செலவு செய்கிறார்கள். இப்படி பலரும் தங்கத்திலிருந்து முதலீடுகளை திரும்ப பெறுவதால் அதன் தேவை குறைந்து விலை தெரிகிறது. தற்போது உலக சந்தையில் தங்கம் விலை குறைவதற்கு மிக முக்கிய காரணமாகும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES