SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Zee Enterntainment நிறுவனத்தில் முக்கிய நியமனங்கள் - தலைமை AI அதிகாரியாக துஷார் வோரா நியமனம்

தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுக்கும் நோக்கில் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமை AI மற்றும் தொழில்நுட்ப மாற்ற அதிகாரியாக துஷார் வோரா மற்றும் 3 முக்கிய துறைசார் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Written By Sudharsan G
Published: Nov 02, 2026, 05:39 PM IST | Updated: Nov 02, 2026, 05:44 PM IST
Join

செயற்கை நுண்ணறிவு, புதுமை, நிறுவனம் முழுவதுமான தொழில்நுட்ப மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில், எதிர்காலத்திற்கு ரெடியாகும் தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுக்கும் தனது இலக்கை வலுப்படுத்தும் வகையில், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் முக்கிய நியமனங்களை அறிவித்துள்ளது.

அதன்படி நிறுவனத்தின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கி, தலைமை செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப மாற்ற அதிகாரியாக துஷார் வோரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப மாற் அணுகுமுறைக்கு துஷார் வோரா தலைமை தாங்குவார். பல்வேறு தளங்களில் நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், தொழில்நுட்ப பயன்பாட்டையும் நிறுவனம் முழுவதுமான மாற்ற முயற்சிகளையும் அவர் முன்னெடுப்பார்.

AI உத்தி மற்றும் தொழில்நுட்ப மாற்றத் திட்டம்

மூன்று முக்கிய நியமனங்கள்

உத்திசார்ந்த தொழில்நுட்ப மாற்றத்தின் ஒரு பகுதியாக, Z நிறுவனம் தனது தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தலைமைத்துவக் குழுவையும் வலுப்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் கீழ்க்கண்ட 3 தொழில்நுட்ப வல்லுநர்களும் துறைசார் நிபுணர்களும் நிறுவனத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டோனி தாமஸ்: AI மற்றும் தொழில்நுட்ப மாற்றத் துறைத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப மாற்றம், கிளவுட் உள்கட்டமைப்பு, DevOps ஆகிய துறைகளில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரிய அளவிலான தொழில்நுட்ப மாற்றங்களை முன்னெடுத்தல், தளங்களின் விரிவாக்கத் திறனை மேம்படுத்துதல் மற்றும் செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல் ஆகியவற்றில் அவர் நிபுணத்துவம் பெற்றவர்.

அசுதோஷ் சுக்லா: இவர் செயல்பாட்டுத் தொழில்நுட்ப மாற்றத் துறைத்தலைவராக உள்ளார். தொழில்நுட்பத் தலைமைத்துவம், வணிகச் செயல்பாடுகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றம் ஆகிய துறைகளில் 24 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, கிளவுட் உட்கட்டமைப்பு மற்றும் நிறுவனம் முழுவதுமான தொழில்நுட்ப மாற்ற முயற்சிகள் உள்ளிட்ட துறைகளில் அவருக்கு அனுபவமும் நிபுணத்துவமும் உள்ளன.

விவேக் பாண்டே: விளம்பரச் செயல்பாடுகள் மற்றும் விளம்பர விற்பனைத் தொழில்நுட்ப மாற்றத் தலவைராக இவர் பொறுப்பேற்றுள்ளார். டிஜிட்டல் தளங்கள், விளம்பர தொழில்நுட்பம், வருவாய் உத்தி மற்றும் வணிகத் தொழில்நுட்ப மாற்றம் ஆகிய துறைகளில் விரிவான அனுபவம் கொண்டவர். விரிவாக்கத்திற்கு ஏற்ற வருவாய் ஈட்டும் தளங்களை உருவாக்குதல், விளம்பரச் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் விற்பனைச் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்துதல் ஆகியவற்றில் அவர் நிபுணத்துவம் பெற்றவர்.

துஷார் வோராவின் அனுபவம்

துஷார் வோரா, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றத் துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். இதற்கு முன்பு, பல முன்னணி நிறுவனங்களில் அவர் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

அந்தப் பொறுப்புகளில் டிஜிட்டல் தளங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு (Product), செயல்பாடுகள் ஆகியவற்றுக்குத் தலைமை தாங்கி உள்ளார். பெரிய அளவிலான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப மாற்ற முயற்சிகளையும் அவர் முன்னெடுத்துள்ளார்.

Z நிறுவனத்தின் நோக்கம்

செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன்கள், நிறுவனம் முழுவதுமான தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் டிஜிட்டல் புதுமைகளில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் நீண்டகால மதிப்பை உருவாக்க Z நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES