Tamil Nadu government : 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னையில் அரசு சான்றிதழுடன் சுற்றுலா, பயணப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. முழு விவரம்
Tamil Nadu government : சொந்தமாக டிராவல் ஏஜென்சி தொடங்க விருப்பமா? அரசு மானியத்துடன் தொழில் தொடங்க EDII-TN சிறப்பு வழிகாட்டல் கொடுக்க உள்ளது. முழு விவரம் இங்கே
1/6
தமிழக அரசு பயிற்சி
1. சொந்தமாக டிராவல்ஸ் தொழில் தொடங்க தமிழக அரசு பயிற்சி: சுற்றுலா மற்றும் பயணத் துறையில் புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்காகத் தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இரண்டு நாள் சிறப்புப் பயிற்சி வகுப்பினை நடத்துகிறது. இப்பயிற்சி வரும் 2026 அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள EDII-TN வளாகத்தில் நேரடியாக நடைபெறவுள்ளது.
2/6
விமான டிக்கெட் முதல் விசா நடைமுறைகள் வரை நேரடி பயிற்சி
2. விமான டிக்கெட் முதல் விசா நடைமுறைகள் வரை நேரடி பயிற்சி: இப்பயிற்சியில் விமான டிக்கெட் முன்பதிவு செய்தல், சுற்றுலா மற்றும் பயணம் சார்ந்த அடிப்படை வழிகாட்டல்கள், ஹோட்டல் முன்பதிவு செய்யும் நடைமுறைகள், புதிய சுற்றுலா பேக்கேஜ்கள் உருவாக்குதல், பயணத் திட்டமிடல், விசா பெறுவதற்கான நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து நேரடி செய்முறைப் பயிற்சிகள் விரிவாக அளிக்கப்பட உள்ளன.
3/6
அரசு சான்றிதழ் மற்றும் மானிய ஆலோசனைகள்
3. அரசு சான்றிதழ் மற்றும் மானிய ஆலோசனைகள்: பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், துறை சார்ந்த முன்னணி வல்லுநர்களின் நேரடி வழிகாட்டலோடு, புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நிதி உதவிகள் மற்றும் மானியத் திட்டங்கள் பற்றிய விரிவான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.
4/6
யார் யார் பங்கேற்கலாம்?
4. யார் யார் பங்கேற்கலாம்? கல்வித் தகுதி விவரம்: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்த ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டியது அவசியமாகும்.
5/6
வெளியூர் நபர்களுக்கு தங்கும் விடுதி வசதி
5. வெளியூர் நபர்களுக்கு தங்கும் விடுதி வசதி: சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களிலிருந்து வந்து கலந்துகொள்ளும் பயனாளிகளின் வசதிக்காக, குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதி செய்து தரப்படும். இந்த தங்கும் விடுதி வசதியானது முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6/6
தொடர்புகொள்ள வேண்டிய விவரங்கள்
6. முன்பதிவு மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய விவரங்கள்: இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.editn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8668100181 மற்றும் 9360221280 என்ற தொலைபேசி எண்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்புகொள்ளலாம். நேரில் செல்ல விரும்புவோர் ஈக்காட்டுத்தாங்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள EDII-TN அலுவலகத்தை அணுகலாம்.