PM Internship Scheme 2026 : 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மாதம் 9 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
PM Internship Scheme 2026 : 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தொழிற் பயிற்சியுடன் கூடிய மாதம் 9 ஆயிரம் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/9
பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம்
2024-2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம் PM Internship Scheme அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி திட்டத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 முன்னனி நிறுவனங்களில், ஒரு கோடி நபர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2/9
யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
இப்பயிற்சி திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு 18 முதல் 25 ஆகும். இப்பயிற்சி 6 மாதம் முதல் 9 மாதம் வரை வழங்கப்படுகின்றன. இப்பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு. ஐடிஐ. டிப்ளமோ, பாலிடெக்னிக், இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
3/9
தகுதியுடையோர் பட்டியல்
முழுநேரக் கல்வியில் பயின்று கொண்டிருப்பவர்கள் பொதுவாகத் தகுதியற்றவர்கள். இருப்பினும், இணையவழிக் கல்வி அல்லது தொலைதூரக் கல்வித் திட்டங்களில் பயில்பவர்கள், மேலும் முழுநேரப் பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் படிப்பின் இறுதியாண்டில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
4/9
பங்கேற்கத் தகுதியற்றவர்கள்
இத்திட்டத்தில் பங்கேற்கத் தகுதியற்றவர்கள்: IT, IIM, தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் (National Law Universities), IISER, NID, IIT மற்றும் IISc ஆகிய நிறுவனங்களில் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். CA, CMA, CS, MBBS, BDS, MD, MS, MBA அல்லது அதற்கு இணையான தகுதிகள் பெற்றவர்கள்; மேலும் M.Phil. மற்றும் Ph.D. பட்டம் பெற்றவர்கள்.
5/9
இவர்கள் பங்கேற்க முடியாது
மத்திய அரசு அல்லது மாநில அரசுத் திட்டங்களின் கீழ் ஏதேனும் திறன் பயிற்சி, தொழிற் பழகுநர் பயிற்சி (Apprenticeship), உள்ளகப் பயிற்சி (Internship) அல்லது பயிற்சித் திட்டத்தில் தற்போது பங்கேற்று வருபவர்கள். தேசிய தொழிற்பழகுநர் பயிற்சித் திட்டம் (NATS) அல்லது தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) ஆகியவற்றின் கீழ் ஏற்கனவே தொழிற் பழகுநர் பயிற்சி அல்லது பயிற்சியை முடித்தவர்கள்.
6/9
மாதம்தோறும் 9000 ரூபாய் ஊக்கத்தொகை
இப்பயிற்சி காலத்தில் மாதம்தோறும் 9000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப் படுகிறது. மேலும் பயிற்சி காலத்தில் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கூடுதல் உதவித்தொகை ரூபாய் 6000 இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
7/9
12 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
இப்பயிற்சியில் சேர குடும்ப ஆண்டு வருமானம் 12 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். முழுநேரம் பணிபுரிபராகவோ இருத்தல் கூடாது. மத்திய/மாநில அரசின் கீழ் ஏதேனும் திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சி பணி அல்லது பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களாக இருத்தல் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் எவரும் அரசு ஊழியராக (சுயம், வாழ்க்கை துணை மற்றும் பெற்றோர்) இருக்கக் கூடாது.
8/9
இணையதள முகவரி
இப்பயிற்சியில் சேர விரும்பும் தகுதியான இளைஞர்கள் https://pminternship.mca.gov.in/login/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், PM-Internship திட்டத்தில் பங்கு பெற விரும்பும் நிறுவனங்கள் பின்வரும் thiranagamtirunelveli@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
9/9
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மேலும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இப்பயிற்சியில் பதிவு செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 9791866918 என்ற Whatsup எண்ணிலோ tnskillsouthernregion என்ற Instagram Page-இல் இணைவதன் வாயிலாகவும் அல்லது திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தரைத்தளத்தில் இயங்கிவரும் மாவட்ட திறன் அலுவலகத்தை நேரில் அணுகலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்.