சென்னை: சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி உள்ளது!! சென்னையில் நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில், நவம்பர் 25 (புதன்கிழமை) காலை 9:00 மணி முதல் நவம்பர் 26, 2026 காலை 9:00 மணி வரை, 24 மணி நேரத்திற்கு குழாய் வழி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதவரம் மில்க் காலனி மெட்ரோ ரயில் நிலையத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மேற்கொள்ளும் குடிநீர் குழாய் இணைப்புப் பணிகளுக்காக இந்த நிறுத்தம் செய்யப்படுகிறது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் (CMWSSB) தகவல்படி, புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வியாசர்பாடி மற்றும் படேல் நகர் குடிநீர் விநியோக நிலையங்களுக்கு குடிநீரைக் கொண்டு செல்லும் 'வடக்கு முதன்மை' (North Main) குடிநீர் குழாயில் இந்தப் பணிகள் நடைபெற உள்ளன.
மணலி மண்டலம்: வடபெரும்பாக்கம் மற்றும் தீயம்பாக்கம்.
மாதவரம் மண்டலம்: மேத்தா நகர், ராமச்சந்திர நகர், முத்து மாரியம்மன் கோயில் தெரு, அன்னை சத்யா நகர், சந்திரபாபு காலனி பிரதான சாலை, மெஜஸ்டிக் காலனி, தனிகாசலம் நகர் 'S' பிளாக் மற்றும் பொன்னியம்மன்மேடு.
தண்டையார்பேட்டை மண்டலம்: கவியரசு கண்ணதாசன் நகர், முத்தமிழ் நகர், கொடுங்கையூர், எம்.கே.பி. நகர், தண்டையார்பேட்டை, வி.ஓ.சி. நகர், ஜே.ஜே. நகர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை மணி குண்டு, காசிமேடு, ராயபுரம், சுப்பிரமணியம் தெரு (பெரம்பூர்), பி.பி. சாலை (பெரம்பூர்) மற்றும் வியாசர்பாடி தெற்கு.
திரு.வி.க. நகர் மண்டலம்: மூலக்கடை, அயனாவரம் மற்றும் மாதவரம் நெடுஞ்சாலை.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மாதவரம் பால்பண்ணை மெட்ரோ ரயில் நிலையத்தில் புழல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வியாசர்பாடி மற்றும் படேல் நகர் குடிநீர் பகிர் மான நிலையத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் வடக்கு பிரதான குடி நீர் குழாயில் இமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதையடுத்து, புதன்கிழமை (நவ. 25), காலை 9 மணி முதல் வியாழக் கிழமை (நவ. 26) காலை 9 மணி வரை மண்டலம் 2,3, 4 மற்றும் 6-க்குட் பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநி யோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். அவசரத் தேவைகளுக்கு லாரி கள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https://cmwss b.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவரம், தண்டையார்பேட்டையில் குடிநீர் நிறுத்தம் #CMWSSB| #ChennaiMetroWater | @CMOTamilnadu | @TVKVijayHQ | @actorvijay | @GSBediIAS | @TNDIPRNEWS | @tnmaws https://t.co/pQoYuCET3e
— Chennai Metro Water (@CHN_Metro_Water) November 24, 2026
குழாய் இணைப்புப் பணிகளால் ஒரு நாள் முழுதும் குழாய் வழி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்பதால், பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளையில், குழாய் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் குறைந்த அழுத்தத்துடன் தண்ணீர் வரும் பகுதிகளுக்கு, லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணி தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் மற்றும் பொதுக் குழாய்கள் மூலமான குடிநீர் விநியோகமும் வழக்கம்போல நடைபெறும்.
ஆகையால், பராமரிப்புப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே, இப்பகுதி மக்கள் தங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.