பிரபல நடிகை மமிதா பைஜுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இணையத்தில் ஒரு தகவல் வைரலாவதை தொடர்ந்து அதற்கு மமிதா பைஜு கொடுத்திருக்கும் ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகையாக இருக்கிறார், மமிதா பைஜு. அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் இவர் குறித்த ஒரு முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/5
பிரேமலு படம் மூலம் இண்ட்ரோ ஆன மமிதா
தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர், மமிதா பைஜு. பிரேமலு படம் மூலம் பிரபலமான இவர் விஜய்யுடன் தமிழில் ஜனநாயகன் படத்திலும், பிரதீப் ரங்கநாதனுடன் ட்யூட் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து சூர்யாவிற்கு ஜோடியாகவும், விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
2/5
மமிதா பைஜுவின் ரசிகர்கள்
மமிதா பைஜுவின் க்யூட் ரியாக்ஷனுக்கு பல லட்சம் ரசிகர்கள் அதற்குள் சேர்ந்து விட்டனர். 25 வயது பெண்ணாக இருந்தாலும், இவருடைய ஸ்கெட்யூல் மிகவும் பிசியாகவே இருக்கிறது. சமீபத்தில் இவர் நடித்த பெத்தலகம் குடும்ப யூனிட் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றிருக்கிறது.
3/5
மமிதா பைஜு அடுத்தடுத்த படங்கள்
மமிதா பைஜுவிற்கு இரண்டு வானம், ஹலோ டியர் என்று இரு படங்கள் தற்போது கைவசம் இருக்கின்றன. இதையடுத்து அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்த சமயத்தில்தான் அவர் குறித்த செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
4/5
மமிதா பைஜு அண்ணன் மிதுன்
மமிதா பைஜுவிற்கு, மிதுன் என்கிற சகோதரர் இருக்கிறார். அவர்தான், மமிதாவின் வாழ்க்கை குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பதாக இணையத்தில் வைரலாகி வந்தது. இதற்கு மமிதா பைஜு கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
5/5
மமிதா பைஜு ரியாக்ஷன்
தன் சகோதரர்தான் தன் வாழ்க்கை குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு மமிதா பைஜு “Whaaat?!" என்று ஒரு ஸ்டிக்கருடன் கூடிய ரியாக்ஷனை வெளியிட்டிருக்கிறார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.