• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஏஐ நிறுவனத்திடம்..ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்ட நடிகை! என்ன விஷயம்?

ஏஐ நிறுவனத்திடம்..ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்ட நடிகை! என்ன விஷயம்?

Written ByYuvashree M
Published: Oct 01, 2026, 10:04 AM IST|Updated: Oct 01, 2026, 10:39 AM IST
joinshare
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர், ஊர்வசி ரவுதேலா. இவர், ஒரு ஏஐ நிறுவனத்திடம் 7000 கோடி இழப்பீடு கோரியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

தமிழில், லெஜெண்ட் திரைப்படம் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர், ஊர்வசி ரவுதேலா. இவர், தன்னுடைய பெயர் மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ஒரு ஏஐ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Legend Movie Heroine 1/5

லெஜெண்ட் படத்தில் நடித்தவர்

இந்தி திரையுலகில், பிரபல நடிகையாக இருக்கிறார், ஊர்வசி ரவுதேலா. இவர், தமிழில் ‘லெஜண்ட்’ எனும் படத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் ஃபேமஸ் ஆனார். இவர்தான் தற்போது ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு மூலமாக பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
Urvashi Rautela Press Release2/5

ஊர்வசி ரவுதேலா அறிக்கை வெளியீடு

இது குறித்து ஊர்வசி ரவுதேலா, ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். அதில், உரிய அனுமதியின்றி, பெயர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏஐ நிறுவனம் ஒன்ரு பயன்படுத்தி இருக்க கூடாது என்றும், இதற்காக ரூ.7000 கோடி இழப்பீட்டை கோருவது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
Allegation that AI videos are being created for commercial purposes3/5

வணிக நோக்கங்களுக்காக ஏஐ வீடியோக்கள் உருவாகுவதாக குற்றச்சாட்டு

ஏஐ கருவியின் மூலமாக, பிரபலங்களின் வீடியோக்கள் உருவாகி வருவதாகவும், ஒரு சிலர் வணிக நோக்கங்களுக்காக, திரை நட்சத்திரஙகளின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தி வருவதகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், ஊர்வசி ரவுதேலா இவ்வளவு பெரிய தொகையை இழப்பீடாக கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Allegations against a Los Angeles Based AI company4/5

லாஸ் ஏஞ்சல்ஸின் ஏஐ நிறுவனம் மீது குற்றச்சாட்டு

ஊர்வசி ரவுதேலா தற்போது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்போகும் அந்த ஏஐ நிறுவனம், லாஸ் ஏஞ்சல்ஸை தளமாக கொண்டதாக இருக்கிறது. ஊர்வசியின் குற்றச்சட்டுகளுக்கு, அந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமன ஷிராஜ் ஹசன் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.
News circulating that the founder has responded5/5

நிறுவனர் பதில் கொடுத்ததாக பரவும் செய்தி

அதில், ரூ.7000 கோடி இழப்பீடு கேட்டது குறித்து ஊர்வசியை விமர்சித்துள்ளார். கடந்த காலத்தில், ஊர்வசி தங்களின் நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலை குறிப்பிட்டு பேசிய அவர், செயற்கை நுண்ணறிவுதான் பாலிவுட்டின் எதிர்காலம் என்று அவர் கூறியதை நினைவு படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
TAGS:
Bollywood

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.