Milk Price Hike: ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்து, லிட்டர் 86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் தயிரின் விலையும் 90 ரூபாயாக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
Milk Price Hike: ஆரோக்கியா பால் விலை உயருவால், மக்களுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
1/5
தமிழகத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு குறைந்த விலையில் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரைலிட்டர் ஆவின் பால் ரூ.22 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆவின் பாலுக்கு கடந்த சில மாதங்களாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2/5
ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு
ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆராக்கியா பாலின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. அரை லிட்டர் ரூ.2 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு லிட்டர் பால் 88 ரூபாயிலிருந்து ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரை லிட்டர் பால் வாங்க இனி 2 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டி இருக்கும்.
3/5
ஆரோக்கியா தயிர் விலை ரூ.4 உயர்வு
பால் மட்டுமின்றி, ஆரோக்கியா தயிரின் விலை 88 ரூபாயில் இருந்து 90 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருபக்கம் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மறுபக்கம் ஆரேக்கியா பாலின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பால் வாங்குவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
4/5
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை குறைவு
ஆவின் கொள்முதல் விலை உயர்வைத் தொடர்ந்து, தனியார் பால் நிறுவனங்களும் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், விலை குறைவான ஆவின் பால் பக்கம் பொதுமக்கள் மீண்டும் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தினமும் ஆவின் பால் விற்பனை 16.5 லட்சம் லிட்டருக்கும் அதிகமான இருந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் 25 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது.
5/5
ஆவின் பால் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன?
சென்னை மட்டுமின்றி, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பால் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், ஆரோக்கியா பால் உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.