புதனும் சுக்கிரனும் இணைவதால் லஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் பொருளாதார வாழ்வும், தனிப்பட்ட வாழ்வும், பணி சார்ந்த வாழ்வும் என அனைத்தும் சிறப்பானதாக மாறும். அந்த வகையில், லஷ்மி நாராயண யோகத்தால் பயனடையும் 4 ராசிகளும், அதன் பலன்களையும் இங்கு காணலாம்.
வரும் அக்டோபர் 29ஆம் தேதி கர்வா சௌத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம்தான் புதனும் சுக்கிரனும் இணைகிறார்கள். அன்றைய தினம் முதல் பயனடையும் ராசிகள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
1/7
லஷ்மி நாராயண ராஜயோகம்
ஜோதிட சாஸ்திரப்படி, புதன் பகவானும், சுக்கிர பகவானும் இணையும் நாளில் லஷ்மி நாராயண ராஜயோகம் உருவாகும். புதன் கிரகம் உங்களின் அறிவாற்றல், பேச்சு, வணிகம், முடிவு எடுக்கும் தன்மை ஆகியவைக்கு பொறுப்பானவர். சுக்கிர பகவான் செல்வம், சொகுசு, கலை மற்றும் காதல் போன்றவைக்கு காரணமாக இருப்பவர்.
2/7
இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்
வரும் அக்டோபர் 28ஆம் தேதி சதுர்த்தி திதியில் கர்வா சௌத் பண்டிகையை வட இந்தியாவில் பல மாநிலங்களில் மக்கள் கொண்டாடுவார்கள். தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்கும், நீடித்த ஆரோக்கியத்திற்கும் விரதம் இருந்து அன்றைய நாள் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வார்கள். அன்றைய தினம் புதனும் சுக்கிரனும் இணைகிறது. எனவே, இந்தாண்டு கர்வா சௌத் மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், லஷ்மி நாராயண ராஜயோகத்தால் பலனடையும் 4 ராசிக்காரர்கள் குறித்து இங்கு காணலாம்.
3/7
மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள்
மேஷ ராசியினருக்கு வேலையிடத்தில் புதிய வாய்ப்புகள் பிறக்கும், பதவி உயர்வு தேடி வரும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். நீண்டகால சிக்கல்கள் முடிவுக்கு வரும், சட்ட ரீதியான விவகாரங்களில் சாதகமான தீர்வுகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
4/7
கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள்
பொருளாதார நிலை இவர்களுக்கு கணிசமாக உயரும். வேலையில் கூடுதல் பொறுப்புகளும், வேலை மாற நினைப்பவர்களுக்கு நல்ல புதிய வாய்ப்புகளும் தேடி வரும். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
5/7
துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்
வேலையிடத்தில் முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும். தொழிலிலும் சிறப்பான லாபத்தை ஈட்டும் வாய்ப்புகள் அமையும். தடைபட்டிருந்த காரியங்கள் வேகமெடுக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் சுகபோக வசதிகள் பெருகும்.
6/7
கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள்
புதிய வேலை தேடுபவர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய திட்டங்கள் கைக்கூடும். வருமானத்தை ஈட்டுவதற்கான புதிய வழிகள் திறந்து நிதி நிலைமை வலுவடையும்.
7/7
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.