குரு பகவான் சுப கிரகங்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். அறிவு , கல்வி, செல்வம், திருமனம் ஆகியவற்றுக்கு குரு பகவான் காரகராக விளங்குகிறார். இவர் பொதுவாக ஓர் ஆண்டுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திர பெயர்ச்சியையும் மேற்கொள்கிறார். தற்போது கடக ராசியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சரித்து வருவதாக குறிப்பிடப்படும் குரு பகவான், அக்டோபர் 31 அன்று சிம்ம ராசிக்கு சென்று கேதுவின் ஆதிக்கம் கொண்ட மகம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான திருப்பங்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக வேலைவாய்ப்பு, தொழில் வளர், வருமானம் மற்றும் குடும்ப உறவுகளில் நற்பலன்களை பெறக்கூடிய ராசிகளாக மேஷம், சிம்மம், மகரம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இந்த ராசிகளுக்கான பலன்களை விரிவாக பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் புதிய வாய்ப்புகளுககன கதவுகளை திறக்கக்கூடும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் முடிவுக்கு வருவதுடன், முக்கியமான முயற்சிகளிலும் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது.
பொருளாதார ரீதியாக சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகுவதுடன், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து உறவுகளில் இணக்கம் அதிகரிக்கலாம்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கவும், லாபம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகளை எடுப்பதில் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரிக்கலாம். உடல்நலத்தை பொறுத்தவரை சாதகமான சூழல் நிலவக்கூடும்.
குரு பகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவது சிம்ம ராசிக்காரர்களுக்கு முக்கியமான காலகட்டமாக அமையலாம். தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் தலைமை பண்புகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும்.ம் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது வேலை தொடர்பான மாற்றங்கள் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதற்கான சூழல் உருவாகலாம்.
வியாபாரிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கலாம். கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பதிலும் வெற்றி பெறலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர மாற்றம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் புதிய முன்னேற்றங்களை கொண்டுவரக்கூடும். மேற்கொள்ளும் முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் திட்டமிட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்க வாய்ப்புகள் உருவாகலாம். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். இதுவரை மேற்கொண்ட முயற்சிகளுக்கான பாராட்டுகளும் அங்கீகாரமும் கிடைக்கக்கூடும். பல்வேறு பணிகளை வெற்றிகரமாக முடிப்பது தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன், எதிர்கால வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையலாம்.
குடும்ப வாழ்க்கையில் அமைதியும் அஸ்திரத்தன்மையும் நிலவ வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவிடுவதற்கும், பரஸ்பர புதலை மேம்படுத்துவதற்கும் சந்தர்ப்பங்கள் அமையலாம். மன அழுத்தத்தை குறைத்து, மனநிலனில் கவனம் செலுத்துவது நன்மை தரும். உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் அவற்றை புறக்கணிக்காமல் உரிய கவனம் செலுத்துவது அவசியம்.