• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சிஎஸ்கே குறிவைக்கும் இளம் வீரர்.. போட்டிபோடும் SRH, KKR! முழு விவரம்

சிஎஸ்கே குறிவைக்கும் இளம் வீரர்.. போட்டிபோடும் SRH, KKR! முழு விவரம்

Written ByR Balaji
Published: Oct 20, 2026, 09:11 PM IST|Updated: Oct 20, 2026, 09:14 PM IST
joinshare

ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் உதய் சகரனை வாங்க சிஎஸ்கே, சன் ரைசர்ஸ், கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Chennai Super Kings 1/5

சிஎஸ்கே குறிவைக்கும் இளம் வீரர்..

ஐபிஎல் 2027 தொடருக்கான மினி ஏலத்தை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில சீசன்களில் அணியில் வெளிப்பட்ட குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை சரிசெய்யும் முயற்சியில் பயிற்சியாளர் ஜாகீர் கான் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் நோக்கில் இளம் இந்திய பேட்டர் உதய் சகரனை சிஎஸ்கே குறிவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Chennai Super Kings2/5

மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் திட்டம்!

சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் அதிரடியாக ரன் குவிக்கக்கூடிய வீரர்களை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது டிவோல்ட் பிரேவிஸை மட்டுமே அந்த பொறுப்பில் முக்கியமாக நம்பியிருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாக மற்றொரு அதிரடி பேட்டரைச் சேர்க்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட உதய் சகரனை பயிற்சி தேர்வுக்கு அழைத்ததாகவும், அவர் சிஎஸ்கேவின் டிரயலில் பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Chennai Super Kings 3/5

உள்ளூர் டி20 தொடரில் உதய் சகரன் அதிரடி!

பஞ்சாப் டி20 லீக் தொடரில் உதய் சகரன் வெளிப்படுத்திய பேட்டிங் திறன் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் விளையாடிய 6 போட்டிகளில் 58.50 சராசரி மற்றும் 192.86 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 351 ரன்கள் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 அரைசதங்களும் அடங்கும். குறிப்பாக, நாக் அவுட் போட்டியில் வெறும் 20 பந்துகளில் 60 ரன்கள் குவித்தது அவரது அதிரடி ஆட்டத்துக்கு சான்றாக அமைந்தது. இந்தச் செயல்பாடுகளால் ஐபிஎல் அணிகளின் கவனத்தை அவர் ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
Chennai Super Kings4/5

சிஎஸ்கேவுக்கு கடும் போட்டி கொடுக்குமா சன் ரைசர்ஸ், கொல்கத்தா?

உதய் சகரனை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமின்றி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்கத்தா அணிக்கு இந்திய பேட்டிங் வரிசையை வலுப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், வெளிநாட்டு வீரர்கள் சேர்க்கைக்கான இடவசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்திய வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து சன் ரைசர்ஸ் பரிசீலிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட மற்ற அணிகளும் அவரைத் தேர்வு செய்ய முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai Super Kings5/5

சிஎஸ்கேவுக்கு கம்பேக் அவசியம்..

கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத சிஎஸ்கே, 2027 தொடரில் வலுவான மறுவருகையைப் பதிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இதற்காக வீரர்களின் பெயர் அல்லது அனுபவத்தைவிட அவர்களின் தற்போதைய செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளித்து அணியை உருவாக்க நிர்வாகம் திட்டமிடலாம் என கூறப்படுகிறது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்களின் செயல்பாடுகளும் மதிப்பீடு செய்யப்படலாம். ஆனால், அவரை அணியிலிருந்து நீக்குவது போன்ற முடிவுகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. உதய் சகரன் ஏலத்தில் பங்கேற்றால், அவரது விலை மற்றும் அவருக்கான போட்டி எந்த அளவுக்கு இருக்கும் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
TAGS:
Chennai Super Kings

Trending

  • News
  • Photos
  • Videos
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

2

ரஞ்சியில் ஆஸ்திரேலியா அம்பேர்.. ஷெஃபீல்ட் ஷீல்டில் இந்தியா அம்பயர்.. BCCI-யின் புதிய திட்டம் ! Explained

3

வடகிழக்கு பருவமழை: கனமழையில் சிக்கப்போகும் தென் மாவட்டங்கள்.. அப்போ சென்னை கதி? Explained

4

அக்டோபர் 28ல் சுக்கிரன் உதயம்: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்!

5

12 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி, யூடியூப் சேனல்! ஜெயிலர் 2 சிறுவன் இவ்ளோ பெரிய ஆளா..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.