• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /’காங்கிரஸூடன் இணைய வாய்ப்பே இல்லை’ திமுக கறார்

’காங்கிரஸூடன் இணைய வாய்ப்பே இல்லை’ திமுக கறார்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 04, 2026, 10:03 PM IST|Updated: Oct 04, 2026, 10:07 PM IST
joinshare
DMK alliance news : காங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என திமுக கூறிவிட்டதாம். முழு விவரம்

DMK alliance news : திமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்பும் நிலையில், அதற்கான வாய்ப்பே இல்லை என திமுக தரப்பில் இருந்து சொல்லப்பட்டுள்ளதாம். அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்
 

DMK Congress latest news1/5

திமுக - காங்கிரஸ் உறவு

தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் உறவு இனி மீண்டும் இணையா வாய்ப்பே இல்லை என்று திமுக தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "முடிந்தது முடிந்ததுதான்.. இனி காங்கிரசுடன் எந்தவித சமரசமும் அல்லது ஒட்டுப்போடும் பேச்சுவார்த்தையும் கிடையாது" என்று திமுக தரப்பு டெல்லியில் வெளிப்படையாகக் கூறிவிட்டதாம்.
DMK Congress latest news2/5

திமுகவின் ஆதரவு அவசியம்

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கைகோர்த்த போதே இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு முற்றிலும் முறிந்தது. எனினும், தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக பவரை நிரூபிக்க திமுகவின் ஆதரவு அவசியம் என்பதால், காங்கிரசின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து சமாதானத் தூது அனுப்பி வந்தனர்.
DMK Congress latest news3/5

திமுக மூத்த தலைவர்கள் பதிலடி

இதற்கு திமுக மூத்த தலைவர்கள் திட்டவட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளனர். சமரசத்திற்கு வழியே இல்லை: "கடந்த காலம் முடிந்துவிட்டது. இனி மீண்டும் காங்கிரசுடன் ஒட்டிக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. மாநில அளவில் தவெகவுக்குப் பின்னால் சென்றுவிட்டு, டெல்லியில் எங்களுக்கு ஆதரவு கேட்பதை எங்களால் ஏற்க முடியாது.
DMK Congress latest news4/5

திமுக ஒருபோதும் அங்கீகரிக்காது

"அதிகாரப் பகிர்வுக்காகத் தமிழகத்தில் ஒரு கட்சியுடனும், தேசிய அளவில் எங்களுடனும் உறவு பாராட்ட நினைப்பது சந்தர்ப்பவாத அரசியல். அதை திமுக ஒருபோதும் அங்கீகரிக்காது." அதே நேரத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் ஜனநாயகப் போராட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து கள ஆதரவு தரப்படும்.
DMK Congress latest news5/5

திமுகவின் ஒரே திட்டம்

ஆனால், தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, அல்லது 'இந்தியா' கூட்டணியின் அதிகாரப்பூர்வ கூட்டங்களில் பங்கெடுப்பது போன்ற எதற்கும் இடமில்லை" என்று திமுக தெளிவுபடுத்தி உள்ளதாம். திமுகவின் இந்த முடிவின் மூலம், காங்கிரசுடனான கதவுகள் நிரந்தரமாக அடைக்கப்பட்டுவிட்டதும், எதிர்காலத்தில் மாநிலக் கட்சிகளைத் திரட்டி மாற்று சக்தியாக களம் காண்பதே திமுகவின் ஒரே திட்டம் என்பதும் உறுதியாகியுள்ளது.
TAGS:
DMK

Trending

  • News
  • Photos
  • Videos
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

2

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

3

அடையாள அட்டை இருந்தும் தங்க மோதிரம் இல்லை.. காரைக்குடி பெண் விவகாரத்தில் அரசு விளக்கம்

4

அதிருப்தியில் அபிஷேக் சர்மா.. SRHல் இருந்து MI செல்கிறாரா? ரூ. 30 கோடிக்கு டிரேட்?

5

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தீய சக்தியை புறந்தள்ளுங்கள்.. முதல்வர் விஜய் இறுதிக்கட்ட பிரச்சாரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.