EPS Pension Hike: நேற்று நடந்த EPFO CBT கூட்டத்தில் இபிஎஸ் ஓய்வூதியத்தில் அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறையும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
EPS Pension Hike: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹1,000-லிருந்து ₹3,000-ஆக உயர்த்தக்கூடும் என்று ஊகங்கள் நிலவின. இதனால், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் தங்கள் மாதாந்திர ஓய்வூதியம் உயரும் என்று எதிர்பார்த்தனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வந்ததா?
1/8
இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள்
இபிஎஃப் உறுப்பினர்கள் மற்றும் இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 19 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் சில ஆச்சரியங்களும் சில அதிர்ச்சிகளும் அடங்கும்.
2/8
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
சமீபகாலமாக, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹1,000-லிருந்து ₹3,000-ஆக உயர்த்தக்கூடும் என்று ஊகங்கள் நிலவின. இதனால், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் தங்கள் மாதாந்திர ஓய்வூதியம் உயரும் என்று எதிர்பார்த்தனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வந்ததா?
3/8
குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்
EPFO கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹3,000-ஆக உயர்த்த வேண்டும் என்ற ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹3,000-ஆக உயர்த்துவது குறித்து கூட்டத்தில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதாவது, தகுதியுள்ள EPS-95 ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து மாதம் குறைந்தபட்சம் ₹1,000-ஐயே பெறுவார்கள். இருப்பினும், வருங்கால வைப்பு நிதி (PF) தொடர்பான பிற முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
4/8
மத்திய அறங்காவலர் குழு
EPFO-வின் மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) 240-வது கூட்டம், 2024 நவம்பர் 19 அன்று புது தில்லியில் நடைபெற்றது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக, EPS-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், கூட்டத்திற்குப் பிறகு அரசு தரப்பிலிருந்து அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து தற்போதுள்ள விதிகளின்படியே ஓய்வூதியத் தொகையைப் பெறுவார்கள்.
5/8
EPFO கூட்டத்தில் பணியாளர்களுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள்
ஓய்வூதியதாரர்கள் ஒரு முக்கிய விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர்: மருந்துகள், மளிகைப் பொருட்கள், மின்சாரம் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான செலவுகள் என வாழ்க்கைச் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில், ஒரு முதியவர் மாதம் ₹1,000-ஐக் கொண்டு வாழ்வது மிகவும் கடினம். எனவே, ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர்.
6/8
இபிஎஸ்-95
ஈபிஎஸ்-95 (EPS-95) திட்டத்துடன் தொடர்புடைய பல அமைப்புகள், குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ₹7,500 வழங்கப்பட வேண்டும் என்றும், அதனுடன் அகவிலைப்படியும் (DA) வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. இருப்பினும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹3,000 அல்லது ₹7,500 என உயர்த்துவது குறித்து அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
7/8
இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்
இதற்கு முன்னர் இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் 2014 ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டது. அதற்கு பிறகு, பணவீக்கம், வாழ்க்கைச் செலவுகள் என அனைத்திலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இபிஸ் ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத் தொகை மாற்றமில்லாமல் தொடர்கிறது.
8/8
EPFO CBT கூட்டம்
நேற்று நடந்த EPFO CBT கூட்டத்தில் இபிஎஸ் ஓய்வூதியத்தில் அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறையும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.