தீபாவளி அன்று (நவ. 8) சிம்ம ராசியில் குரு - கேது பகவான் இணைகின்றனர். இதனால், கடகம், சிம்மம், தனுசு, மகரம உள்ளிட்ட 4 ராசிகளுக்கு பெரியளவில் நன்மைகள் குவியும்.
வேலை சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும் கடகம், சிம்மம், தனுசு, மகரம் உள்ளிட்ட 4 ராசிகளுக்கு நன்மைகள் வந்து சேரும். இருப்பினும் ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகளை பொறுத்து பலன்கள் மாற்றமடையும்.
1/7
குரு - கேது இணைவு
வரும் தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் குரு பகவானும், கேது பகவானும் இணைய இருக்கிறார்கள். ஜோதிட கணிப்பின்படி, குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சிம்ம ராசியில் கேது பகவான் ஏற்கெனவே வீற்றிருக்கிறார்.
2/7
4 ராசிகளுக்கு நன்மை
இந்நிலையில், வரும் நவம்பர் 8ஆம் தேதி இரு கிரகங்களும் சிம்ம ராசியில் இணைவதால், கடகம், சிம்மம், தனுசு, மகரம் உள்ளிட்ட 4 ராசிகளுக்கு பெரியளவில் நன்மைகள் குவியும். வேலை சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும் நன்மைகள் குவியும். இந்த ராசிக்காரர்களுக்கு அவரவர் ஜாதகத்தில் கிரக நிலைகளை பொருத்து குரு - கேது இணைவு பயன்களை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/7
கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள்
பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தேங்கி இருந்த வேலைகள் முன்னேற்றம் காணும். புதிய வேலைவாய்ப்புகள் வரலாம். வருவாய் அதிகரிக்கும். வேலைகளில் பொறுப்புகள் கூடும், வாய்ப்புகளும் கூடும். வரவு செலவில் கச்சிதமாக இருந்தால் குடும்பம் செழிப்படையும்.
4/7
சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள்
பணி சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும் சிம்ம ராசிக்காரர்கள் அதிக கவனம் செலுத்தலாம். ஊழியர்கள் தங்களின் திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் தேடி வரும். தொழில் செய்பவர்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் நன்மைகள் தேடி வரலாம். பழைய வேலைகளில் இருந்தும் நன்மைகள் வரும். அதேநேரத்தில் முதலீடு செய்வதற்கு முன் நன்கு ஆராய்ந்து முதலீடு செய்யவும்.
5/7
தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்
குரு பகவானின் பார்வை இருப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மைகள் எக்கச்சக்கம். இந்த பண்டிகை காலத்தில் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, புதிய திட்டங்கள் சார்ந்து முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் முதலீட்டில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். முதலீடு செய்யும்போது அவசரம் காட்டாமல் பொறுமையாக செயல்படவும்.
6/7
கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள்
இந்த காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்கள் திட்டமிடும் அனைத்தும் கைக்கூடும். வேலையிடத்தில் மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும் மற்றும் புதிய பொறுப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வணிகசார்ந்தவர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கைக்கூட வாய்ப்புள்ளது. பணத்தை முறையாக செலவிட்டால் எதிர்காலத்தில் பெரியளவில் உதவும்.
7/7
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.