டிசம்பர் மாதம் திருப்பதி செல்ல திட்டமிட்டிருக்கும் பயணிகளுக்கு முக்கிய செய்தி உள்ளது. சென்னை திருப்பதி இடையிலான நான்கு ரயில் சேவைகள் டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் பிரிவில் உள்ள ரேணிகுண்டா யார்டில், ரயில் பாதைகளை நவீனப்படுத்தும் மற்றும் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த காரணத்தால், சென்னைக்கும் திருப்பதிக்கும் இடையே இயக்கப்படும் நான்கு விரைவு ரயில் சேவைகள் டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே மூலம் மேற்கொள்ளப்படும் இந்த ரத்து நடவடிக்கையானது, சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே இரு திசைகளிலும் பயணம் செய்யும் பயணிகளையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
⚠️Cancellation of Saptagiri Express Trains Train Nos. 16057, 16054, 16053 and 16058 will remain fully cancelled from 9 to 27 December 2026 due to yard remodelling and Electronic Interlocking works at Renigunta Yard. #IndianRailways #SaptagiriExpress #SouthernRailway https://t.co/MmISBWVRJi
— Southern Railway (@GMSRailway) October 29, 2026
ரயில் பாதைகளை நவீனப்படுத்தும் மற்றும் மறுசீரமைக்கும் பணிகள் காரணமாக பின்வரும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும்:
தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் பிரிவில் உள்ள ரேணிகுண்டா யார்டில், ரயில் பாதைகளை நவீனப்படுத்தும் மற்றும் மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதே இந்த ரத்து நடவடிக்கைகளுக்குக் காரணமாகும்.
இந்த காலகட்டத்தில் சென்னைக்கும் திருப்பதிக்கும் இடையே பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், தற்போதைய ரயில் கால அட்டவணையைச் சரிபார்த்து, மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறித்த விவரங்களையும், கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளையும் அறிய அதிகாரப்பூர்வ ரயில்வே தளங்களை அணுகலாம்.