• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /குரு பெயர்ச்சி: நாளை முதல் 6 ராசிகளுக்கு ஜாக்பாட்!! வாழ்வில் உச்சம் தொடுவார்கள்

குரு பெயர்ச்சி: நாளை முதல் 6 ராசிகளுக்கு ஜாக்பாட்!! வாழ்வில் உச்சம் தொடுவார்கள்

Written BySripriya Sambathkumar
Published: Oct 30, 2026, 12:58 PM IST|Updated: Oct 30, 2026, 01:15 PM IST
joinshare
Jupiter Transit: நாளை சிம்ம ராசியில் குரு பெயர்ச்சியாகவுள்ளார். குருவின் இந்த பெயர்ச்சி 6 ராசிக்காரர்களின் வாழ்வையே புதுப்பொலிவுடன் மாற்றவுள்ளது. உங்கள் ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்?

Guru Peyarchi: குரு பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் சுபபான கிரகமாக கருதப்படுகிறார். கல்வி, செல்வம், குடும்ப வாழ்க்கை, குழந்தைகள், பண வரவு ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் உள்ளார். குரு பகவானின் பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. குரு சிம்ம ராசிக்குள் நுழைவது சுமார் 6 ராசிகளுக்கு நன்மைகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், மிதுனம், கன்னி, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசியைச் சேர்ந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Guru Peyarchi Palangal1/9

குரு பெயர்ச்சி

நாளை (அக்டோபர் 31) நடக்கவுள்ள குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும். இவர்களது வாழ்வில் இந்த நேரம் பல ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டமான 6 ராசிகள் பற்றி இங்கே காணலாம்.
Aries2/9

மேஷம்

மேஷ ராசிக்காரர்ககளுக்கு சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி ஆக்கப்பூர்வமான நன்மைகளை அளிக்கும். வேலலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இவர்களது வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். குரு பகவானின் அருளால் இந்த பெயர்ச்சி நற்பலன்களைத் தரும். இது வாழ்க்கையில் இனிமையைக் கொண்டுவருவதுடன், குறிப்பிடத்தக்க லாபங்களையும் பெற்றுத் தரக்கூடும்.
Cancer3/9

கடகம்

சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அள்ளித்தரும். குழந்தைகளால் நன்மை உண்டாகும். குருவின் சிம்ம ராசிப் பெயர்ச்சி, கடக ராசியில் பிறந்தவர்களுக்குப் பலனளிக்கும் வகையில் அமையும். வாழ்வில் முன்னேற்றம் காண ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். பணியிடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரொக்கியம் நன்றாக இருக்கும்.
Leo4/9

சிம்மம்

சிம்ம ராசியில்தான் குரு பகவான் பெயர்ச்சி ஆகவுள்ளார். ஆகையால், சிம்ம ராசியினரைப் பொறுத்தவரை, இந்த பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சிலருக்கு எதிர்பாராத பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இத்தனை நாட்களாக இருந்த சிக்கல்கள் தீரும். வாழ்வில் வெற்றிகள் குவியும்.
Scorpio5/9

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமான நன்மைகளை அளிக்கும். இந்த காலம் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு மங்களகரமானதாக அமையக்கூடும். இது செழிப்பைக் கொண்டுவருவதுடன், அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
Sagittarius6/9

கும்பம்

குருவின் சிம்ம ராசிப் பெயர்ச்சி, தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். மேலும் உங்கள் நிதி நிலை மேம்படும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
Aquarius7/9

கும்பம்

கும்ப ராசியினருக்கு, இந்த குரு பெயர்ச்சி மிகச் சிறந்ததாக அமையும். நீண்ட நாட்களாக முடங்கியிருந்த அல்லது நிலுவையில் இருந்த பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். பல வித பணிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்.
Guru Peyarchi Palangal8/9

குரு பெயர்ச்சி பலன்கள்

வாழ்வில் மகிழ்ச்சி நிலவவும், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும் 'குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம், நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நமஹ' என்ற குரு ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.
Disclaimer9/9

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
TNPSC தேர்வு எழுத நினைப்போருக்கு குட் நியூஸ்... வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

TNPSC தேர்வு எழுத நினைப்போருக்கு குட் நியூஸ்... வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

2

Explainer: மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்கள்: ரூ.77.98 கோடியை வாரி வழங்கிய மத்திய அரசு

3

ஹெலிகாப்டர் திடீர் மாயம்... 6 பேரியின் நிலை என்ன? - உத்தரகாண்டில் பரபரப்பு

4

50 நாட்களுக்கும் மேல் சிகிச்சையில் வி.எஸ்.பாபு! என்னதான் ஆச்சு? சமீபத்திய அப்டேட்..

5

சென்னை அம்மா உணவக ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி!! விரைவில் ஊதிய உயர்வு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.