அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்பது போட்டித் தேர்வர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். அந்த வகையில், அரசின் தற்போதைய விதிகளில் உள்ளதை விட வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வயது வரம்பு உயர்வு என்பது BC, BC(M), MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள் ஏற்கெனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| தேர்வு | பொதுப் பிரிவினர் வயது வரம்பு | ஒதுக்கீட்டுப் பிரிவு வயது |
| குரூப் - 1 | 37 | 42 |
| குரூப்-2, 2ஏ | 35 | உச்ச வயது வரம்பு இல்லை |
| குரூப்-4 (அதிக கல்வித்தகுதி) | - | உச்ச வயது வரம்பில்லை |
| குரூப்-4 (அதிக கல்வித்தகுதி இல்லாதவர்களுக்கு) | 35 | 37 |
| SC, ST, ஆதரவற்ற விதவை | - | 40 |
| தேர்வு | பொதுப் பிரிவினர் வயது வரம்பு | ஒதுக்கீட்டுப் பிரிவு வயது |
| குரூப்-1 | 47 | 52 |
| குரூப்-2, 2ஏ | 45 | உச்ச வயது வரம்பில்லை |
| குரூப்-4 (அதிக கல்வித்தகுதி) | - | உச்ச வயது வரம்பில்லை |
| குரூப்-4 (அதிக கல்வித்தகுதி இல்லாதவர்களுக்கு) | 45 | 47 |
| SC, ST, ஆதரவற்ற விதவை | - | 50 |
தமிழ்நாடு அரசின் இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (அக். 30, 2026) முதல் அடுத்து ஐந்து ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் வயது வரம்பு நிறைவடையும் சூழலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரியளவில் பயனளிக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.