• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /குரு பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு ராஜயோகம், அள்ளிக்கொடுப்பார் குரு பகவான்

குரு பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு ராஜயோகம், அள்ளிக்கொடுப்பார் குரு பகவான்

Written BySripriya Sambathkumar
Published: Oct 15, 2026, 02:36 PM IST|Updated: Oct 15, 2026, 02:44 PM IST
joinshare
Jupiter Transit: அக்டோபர் மாத இறுதியில் குரு பகவான் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பொற்காலம் பிறக்கவுள்ளது. யார் அந்த அதிர்ஷ்ட ராசிகள்?

Guru Peyarchi Palangal: அக்டோபர் 31, 2026 அன்று மாலை 7:19 மணிக்கு, குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த இடப்பெயர்ச்சி, அனைத்து 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது தொழில் மற்றும் வணிகம் உள்ளிட்ட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். குருவின் இந்த சிம்ம ராசிப் பெயர்ச்சி, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

Guru Peyarchi1/8

குரு பெயர்ச்சி

சுப கிரகமான குரு பகவான் ஞானம், விரிவாக்கம், மகிழ்ச்சி, செழிப்பு, நற்பேறு மற்றும் அதிர்ஷ்டத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். குரு பகவானின் சிறு அசைவும் பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. அவர் அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்
Guru Peyarchi Palangal2/8

குரு பெயர்ச்சி பலன்கள்

சிம்ம ராசியில் குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் இது பொற்காலமாய் திகழும். குரு அருளால் இவர்களது வாழ்க்கை ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Aries3/8

மேஷம்

மேஷ ராசியினருக்கு, அக்டோபர் 31, 2026 அன்று நிகழவுள்ள குரு பெயர்ச்சி, தொழில் மற்றும் நிதி வாழ்க்கைக்கு மிகவும் சாதகமாகவும் நேர்மறையாகவும் அமையும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். மேஷ ராசிக்காரர்கள் குரு பகவானின் அருளால் புதிய பொறுப்புகள், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடும். கல்வித்துறையிலும் இந்த பெயர்ச்சி புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரும். இக்காலகட்டத்தில், முதலீடுகளைச் செய்வதற்கான முக்கிய வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கலாம். உங்கள் நிதி நிலைமை முன்பை விட கணிசமாக மேம்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
Gemini4/8

மிதுனம்

மிதுன ராசியினருக்கு, சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த நேரத்தில், உங்களுக்கு லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, நிதிச் செழிப்புக்கான புதிய வழிகளும் உங்களுக்குத் திறக்கும். வணிகத்தில், நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளும் புதிய தொடர்புகள் வருங்காலத்தில் சாதகமாக அமையும். குரு பகவானின் அருளால் லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும்.
Leo5/8

சிம்மம்

அக்டோபர் 31 அன்று, குரு பகவான் சிம்ம ரசியில்தான் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த பெயர்ச்சி தைரியம், தொழில் வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தும். இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள். பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். வேலை தேடுபவர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். தொழில் செய்பவர்கள் புதிய திட்டங்கள் மற்றும் உத்திகள் மூலம் பயனடைவார்கள். உங்கள் தொழில்முறை முயற்சிகளில் சீரான வளர்ச்சி ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வருமானத்திலும் முன்னேற்றம் காணப்படும். ஆன்மீகம் மற்றும் மதம் சார்ந்த செயல்பாடுகளில் உங்கள் ஆர்வம் தொடர்ந்து நீடிக்கும்.
Sagittarius6/8

தனுசு

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். குருவின் பெயர்ச்சி, தனுசு ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகலை அளிக்கும். இது வாழ்விற்கு மிக சாதகமாக அமையும். உங்கள் தொழில் வாழ்க்கையில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். முதலீடுகள் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் லாபம் கிடைக்கும். திடீர் பண வரவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இருப்பினும், நிதி சார்ந்த விஷயங்களைக் கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும்.
Guru Peyarchi Palangal7/8

குரு பகவானின் அருள் பெற

குரு பகவானின் பரிபூரண அருளை பெற, 'குரவே ஸர்வ லோகாநாம், பிஷஜே பவ ரோகிணாம், நிதயே ஸர்வ வித்யானாம், தக்ஷிணாமூர்த்தயே நம:' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயனம் செய்யலாம்.
Disclaimer8/8

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
RCB செய்யப்போகும் அதிரடி மாற்றம்.. 7 வீரர்களை விடுவிக்க திட்டம்? அடுத்த கேப்டன் இவர்தான்!

RCB செய்யப்போகும் அதிரடி மாற்றம்.. 7 வீரர்களை விடுவிக்க திட்டம்? அடுத்த கேப்டன் இவர்தான்!

2

நியூசிலாந்தை காலி செய்த திலக் - நிதிஷ் ஜோடி... இந்திய அணி மிரட்டல் வெற்றி

3

இனி EB ரீடிங் எடுக்க ஆள் வரத் தேவையில்லை: தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் Explained

4

Kanyakumari Red Alert: திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை மூடல்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

5

நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.