• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சிங்கப்பெண் கடன் திட்டம்: லட்சக்கணக்கில் லோன்.. எப்படி பெறலாம்? தமிழக அரசு அறிவிப்பு

சிங்கப்பெண் கடன் திட்டம்: லட்சக்கணக்கில் லோன்.. எப்படி பெறலாம்? தமிழக அரசு அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Nov 29, 2026, 08:53 IST|Updated: Nov 29, 2026, 08:57 IST
joinshare
Singappen Loan Scheme: பெண்கள் சுயதொழில் தொடங்க 'சிங்கப்பெண் கடன்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் அறிவித்துள்ளார். இத்திட்டம் மூலம் பெண்கள் லட்சக்கணக்கில் கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Singappen Loan Scheme: சிங்கப்பெண் கடன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த முழு விவரத்தையும் கூட்டுறவுத்துறை வெளியிட்டு இருக்கிறது.
 

singapen loan scheme1/5

சிங்கப்பெண் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள் சுயதொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கடன் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்கள் சுயதொழில் தொடங்க 'சிங்கப்பெண் கடன்' திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பெண்கள் சிங்கப்பெண் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார்.
singapen loan scheme2/5

சிங்கப்பெண் கடன் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, பெண்களின் பொருளாதார தற்சார்பை உறுதி செய்யவும், அவர்களைத் தொழில் முனைவோராக உயர்த்தவும் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை சார்பில் 'சிங்கப்பெண் கடன்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கந்துவட்டிப் பிடியிலிருந்து மக்களை மீட்டு பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தொழில் முனைவோர்கள். பணிபுரியும் மகளிர்கள் ஆகியோர் கடனுதவி பெற்று பயனடையலாம்.
singapen loan scheme3/5

சிங்கப்பெண் கடன் திட்டத்தின் பயனாளிகள்

அவ்வாறு நடப்பாண்டில் நவம்பர் 2026 வரை 41,369 பயனாளிகளுக்கு ரூ.3,428.49 கோடி அளவில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு பயனாளிக்கு சுமார் ரூ.8.3 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மலம் 13,344 பேருக்கு ரூ.1,432.02 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மலம் 3,154 பேருக்கு ரூ.29.50 கோடியும், நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் 973 பேருக்கு ரூ.96.56 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது.
singapen loan scheme4/5

பெண்களுக்கு ரூ.3,428 கோடி கடனுதவி

மேலும், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மலம் 641 பேருக்கு ரூ.69.43 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி மூலம் 285 பேருக்கு ரூ.27.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 41,369 பெண்களுக்கு ரூ.3,428 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
singapen loan scheme5/5

சிங்கப்பெண் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை

எனவே, புதிய சுயதொழில் தொடங்க விரும்புவோரும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்த விரும்பும் மகளிர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். தங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நேரில் அணுகி கடனுதவி பெற்றுப் பயன்பெறலாம். மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்கள் மற்றும் தேவையான உதவிகளைப் பெற 98840 00845 என்ற வாட்ஸ்அப் உதவி எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS:
Govt Schemes

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சுக்கிரன் பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் கூடி வரும் யோகம்.. 4 ராசிகளுக்கு வெற்றி, பணம் குவியும்

சுக்கிரன் பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் கூடி வரும் யோகம்.. 4 ராசிகளுக்கு வெற்றி, பணம் குவியும்

2

திமுக - பாஜக கூட்டணி? முருகப்பெருமானின் கையில்தான் உள்ளது... திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன்

3

அமித்ஷா உடன் சந்திப்பு... காங்கிரஸை கதறவிட்ட கனிமொழி - பாஜக கூட்டணிக்கு நோ

4

டிசம்பரில் திரைக்கு வரும் படங்கள்! ட்ரெின் முதல் லவ் பைட் வரை..முழு லிஸ்ட்

5

Explained : திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்பட்டது..100 ஆண்டுகால வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்..!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.