Magalir Urimai Thogai Latest News: தற்போது வழக்கம்போல் மாதம் ரூ.1,000 ஆகவே வழங்கப்பட்டு வருகிறது. ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைப்பு, ரேஷன் e-KYC, செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்கு போன்றவை பயனாளிகள் கட்டாயம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.
Important Updates for Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு அரசு சார்பில் பல முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளன. ரூ.2,500 உயர்வு குறித்த தகவல்களின் உண்மை நிலை, ஆதார்-வங்கி இணைப்பு, ரேஷன் e-KYC, வங்கி கணக்கு செயல்பாடு மற்றும் மேல்முறையீட்டு நடைமுறைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
1/10
மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
மாதம் ரூ.1,000 பெறும் பெண்கள் கவனத்திற்கு, சில காரணங்களால் உரிமைத் தொகை தற்காலிகமாக நிறுத்தப்படலாம். வங்கி கணக்கு, ஆதார் இணைப்பு, ரேஷன் KYC உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்க வேண்டியது அவசியம்
2/10
ரூ.2,500 ஆக உயர்ந்துவிட்டதா?
சமூக வலைதளங்களில் பரவும் தகவலின்படி மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது வழங்கப்படும் தொகை ரூ.1,000 மட்டுமே.
3/10
பணம் வராமல் போக முக்கிய காரணம்
பல பெண்களுக்கு உரிமைத் தொகை வராததற்கான முக்கிய காரணம். ஆதாருடன் வங்கி கணக்கு இணைக்கப்படாதது. செயலிழந்த வங்கி கணக்கு, நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத அக்கவுண்ட்.
4/10
வங்கி கணக்கு ஆக்டிவாக இருக்கிறதா?
உரிமைத் தொகை பெறும் வங்கி கணக்கு: செயல்பாட்டில் இருக்க வேண்டும். அவ்வப்போது பரிவர்த்தனை செய்ய வேண்டும். குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டும். செயலற்ற கணக்குகளுக்கு பணம் வருவதில் சிக்கல் ஏற்படலாம்.
5/10
ரேஷன் KYC கட்டாயமா?
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கான e-KYC பணிகள் நடைபெற்று வருகின்றன. கைரேகை பதிவு, குடும்ப விவர சரிபார்ப்பு, அட்டை புதுப்பித்தல் மேற்கொள்ளுங்கள். KYC முடிக்காதவர்களின் விபரங்கள் சரிபார்ப்பு நிலையில் இருக்கலாம்.
6/10
6 மாதமாக ரேஷன் வாங்கவில்லையா?
ஒருவர் தொடர்ச்சியாக ரேஷன் பெறாத குடும்பங்கள் கவனிக்க வேண்டும். 6 மாதங்களாக ரேஷன் பொருட்கள் பெறாமல் இருந்தால் உங்கள் விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். மாதந்தோறும் ரேஷன் பொருட்களை பெறுவது நல்லது.
7/10
புதிய விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க: குடும்ப ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் இருக்கக்கூடாது. நான்கு சக்கர கார் வைத்திருக்கக் கூடாது. மேலும் அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
8/10
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்யலாம்?
நிராகரிப்பு காரணம் SMS மூலம் தெரிவிக்கப்படும். அதன்பிறகு . 30 நாட்களுக்குள் RDO அலுவலகத்தின் மூலம் அல்லது ஆன்லைன் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.
9/10
உரிமைத் தொகை தொடர்ந்து வர என்ன செய்ய வேண்டும்?
ஆதார் - வங்கி இணைப்பை சரிபார்க்கவும். வங்கி கணக்கை பயன்படுத்தவும். ரேஷன் e-KYC முடிக்கவும். மாதந்தோறும் ரேஷன் வாங்கவும் மற்றும் மொபைல் எண்ணை புதுப்பித்து வைத்திருக்கவும்.
10/10
முக்கிய அம்சங்கள்
1.தற்போது ரூ.1,000 மட்டுமே வழங்கப்படுகிறது. 2. ரூ.2,500 உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. 3. Aadhaar-Bank Link அவசியம். 4. ரேஷன் e-KYC முடிக்க வேண்டும். 5. வங்கி கணக்கு Active ஆக இருக்க வேண்டும் 6. தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம்.