சனிக்கிழமையான ஆகஸ்ட் 15ஆம் தேதி 80வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்திற்கு அரசு விடுமுறை என்பதால் ஆகஸ்ட் 14 , 15, 16 அன்று மூன்று நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
ஆகஸ்ட் 14, ஆகஸ்ட் 15, ஆகஸ்ட் 16 என வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு எந்தெந்த தினங்களில் எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகின்றன...? அதேபோல் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு எத்தனை பேருந்து இயக்கப்படுகின்றன...? என்பவற்றை இங்கு காணலாம்.
1/5
வார இறுதி நாட்கள்
ஆகஸ்ட் 14 (வெள்ளி), ஆகஸ்ட் 15 (சனி), ஆகஸ்ட் 16 (ஞாயிறு) ஆகிய வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் இதர இடங்களுக்கு கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2/5
கிளாம்பாக்கம்
ஆகஸ்ட் 14 அன்று சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14/08/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 505 பேருந்துகளும்; ஆகஸ்ட் 15 அன்று 570 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
3/5
கோயம்பேடு பேருந்து நிலையம்
ஆகஸ்ட் 14 அன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 பேருந்துகளும்; ஆகஸ்ட் 15 அன்று 110 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து ஆகஸ்ட் 14, ஆகஸ்ட் 15 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 80 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
4/5
சிறப்பு பேருந்துகள்
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 16, ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் அன்றைய தினம் 465 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது .
5/5
சிறப்பு பேருந்துகள்
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) அன்று 21 ஆயிரத்து 231 பயணிகளும்; சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று 4 ஆயிரத்து 369 பயணிகளும்; ஞாயிறு (ஆகஸ்ட் 16) அன்று 18 ஆயிரத்து 437 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். www.tnstc.in இணையதளம், TNSTC மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.