• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை... அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்

குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை... அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்

Written BySripriya Sambathkumar
Published: Oct 13, 2026, 12:00 PM IST|Updated: Oct 13, 2026, 12:08 PM IST
joinshare
Guru Peyarchi Palangal: இன்னும் சில நாட்களில் குரு பகவான் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த குரு பெயர்ச்சி 4 ராசிகளுக்கு ராஜயோகத்தை அளிக்கவுள்ளது. யாருக்கெல்லாம் குருவின் அருள் கிடைக்கும் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Jupiter Transit: அனைத்து கிரகங்களிலும் குரு பகவான் அதிக நன்மைகளை அளிக்கும் சுப கிரகமாக கருதப்படுகிறார். தற்போது கடக ராசியில் உள்ள குரு, அக்டோபர் 31, 2026 அன்று சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் ஜனவரி 24, 2027 வரை சுமார் 86 நாட்கள் சிம்ம ராசியில் இருப்பார். குருவின் சிம்ம ராசிப் பெயர்ச்சி மங்களகரமானதாகவும் நன்மை பயப்பதாகவும் கருதப்படுகிறது. இப்பெயர்ச்சி வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருவதால், சில ராசிக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையலாம். குருவின் சிம்ம ராசிப் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Guru Peyarchi1/8

குரு பெயர்ச்சி

சுப கிரகமான குரு பகவான், இந்த மாத இறுதியில், அக்டோபர் 31, 2026 அன்று அவர் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். அவர் ஜனவரி 24, 2027 வரை சுமார் 86 நாட்கள் சிம்ம ராசியில் இருப்பார். குரு பகவானின் இந்த பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Guru Peyarchi Palangal2/8

குரு பெயர்ச்சி பலன்கள்

சிம்மத்தில் குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், 4 ராசிகளில் குரு பகவானின் கூடுதல் அருள் கிடைக்கும். இவர்களது நிதி நிலை ஏற்றம் பெறும். இந்த சமயத்தில் பல வித வெற்றிகள் குவியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Aries3/8

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக அமையும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குரு அருளால் இக்காலத்தில் உங்கள் நிதி நிலை மேம்படும், மேலும் எதிர்பாராத பண வரவு இருக்கும். நிலம், வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பம் தொடர்பான சிக்கல்கள் படிப்படியாகத் தீரும். மேலும் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கல்வித் துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
Gemini4/8

மிதுனம்

குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் மிதுன ராசிக்காரர்களுக்குப் பண வரவுக்கான வாய்ப்புகள் அதிகமாகும். இந்த காலத்தில் வருமானத்தில் ஏற்றம் இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி காண்பார்கள். குடும்ப வாழ்க்கை மேம்பட்டு மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு அதிகரிக்கும். உடல்நலம் தொடர்பான சில சிக்கல்கள் ஏற்படலாம். எனினும், குரு பகவானின் அருளால் அவற்றை எளிதாக சமாளித்து விடுவீர்கள். நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும். புதிய விஷயத்தைத் தொடங்க இது ஒரு நல்ல நாளாக அமையும்.
Libra5/8

சிம்மம்

சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அள்ளித் தரும். இக்காலத்தில் உங்கள் தொழிலில் நீங்கள் வெற்றிபெறலாம். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகளை அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடையும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நிதி ஆதாயம் ஏற்படும். வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். குரு பகவானின் அருளால் சுபச் செய்திகள் கிடைக்கும்.
Sagittarius6/8

தனுசு

அக்டோபர் மாத இறுதியில் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு அதிக நன்மைகளை அளிக்கும். இந்த காலகட்டத்தில் தனுச ராசிக்காரர்களுக்கு பொருள் சார்ந்த வசதிகள் அதிகரிக்கக்கூடும். நிலம், வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான யோகம் உள்ளது. பணியிடத்தில் சாதகமான நன்மைகள் கிடைக்கும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டலாம். இந்த காலத்தில் செலவுகள் குறையும், பணம் சேர்க்க வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கலாம்.
Guru Peyarchi Palangal7/8

குரு பகவானின் அருள் பெற

மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறவும், வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ குரு பகவானின் அருள் பெறவும் தினமும், 'குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்ரம்ம, தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ' என்ற மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.
Disclaimer8/8

பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
மாணவர்களுக்கு குட் நியூஸ்! வாரத்தில் 5 நாட்கள் PET வகுப்புகள்.. அதிரடி அறிவிப்பு!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வாரத்தில் 5 நாட்கள் PET வகுப்புகள்.. அதிரடி அறிவிப்பு!

2

டாடா நினைவு மையத்தில் அருமையான வேலைவாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

சென்னை தினக்கூலி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

4

Explained | சவுதிக்கு புதிய அச்சுறுத்தல்: முக்கிய விமான நிலையங்களை மட்டுமே குறிவைக்கும் ஹூதிகள்!

5

20 லட்சம் சம்பளம் பேசிவிட்டு 1 கோடி கேட்ட இயக்குநர்! யாரை சொன்னார் திருப்பூர் சுப்பிரமணியம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.