மருது சகோதரர்கள் நினைவு தினம், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இந்த மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளும், தனியார் பார்களும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருது சகோதரர்கள் நினைவு தினம், தேவர் ஜெயந்தி இம்மாத இறுதியில் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை, ராமநாதபுரத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1/5
மருது சகோதரர்கள் நினைவு தினம்
சிவகங்கை சீமையை ஆட்சி செய்த, ஆங்கிலேய கொடுங்கோன்மைக்கு எதிராக செயல்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் நினைவு தினம் அக்டோபர் 24ஆம் தேதி அரசு சார்பில் சிவகங்கை திருப்பத்தூர் பகுதியில் உள்ள நினைவிடத்தில் நிகழ்ச்சி நடத்தப்படும்.
2/5
முத்துராமலிங்கனார் குருபூஜை
அக்டோபர் 27ஆம் தேதி அன்று காளையார்கோவிலில் மருது சகோதரர்களின் நினைவிடத்தில் பொதுமக்கள், அமைப்புகள் சார்பாக புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெறும். அதேபோல், சுதந்திரப் போராட்ட வீரரான முத்துராமலிங்கனார் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
3/5
இரண்டு மாவட்டங்களுக்கு 144 தடை
இவற்றை ஒட்டி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அக்டோபர் 20ஆம் தேதிமுதல் அக்டோபர் 31ஆம் தேதிவரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
4/5
பசும்பொன் செல்லும் CM விஜய்
அதேபோல், பசும்பொன்னில் பிரம்மாண்டமாக நடைபெறும் முத்துராமலிங்கனார் குருபூஜைக்கு முதலமைச்சர் விஜய் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக பசும்பொன் செல்ல இருக்கிறார், விஜய்.
5/5
டாஸ்மாக் விடுமுறை
இந்நிலையில், மருது சகோதரர்கள் நினைவு தினம், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 27, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி தனியார் பார்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.