• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /மகளிர் உரிமைத்தொகை விதிமுறையில் வரப்போகும் முக்கிய மாற்றம்

மகளிர் உரிமைத்தொகை விதிமுறையில் வரப்போகும் முக்கிய மாற்றம்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 31, 2026, 09:23 AM IST|Updated: Oct 31, 2026, 09:33 AM IST
joinshare
Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வரப்போகும் விதிமுறைகள் மாற்றம் குறித்த அப்டேட்டை இங்கே விரிவாக பார்க்கலாம்.

Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் முக்கிய விதிமுறை மாற்றங்களை செய்ய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது. முழு விவரம் இங்கே
 

Magalir Urimai Thogai new rules1/8

மகளிர் உரிமைத்தொகை

மகளிர் உரிமைத்தொகை (Magalir Urimai Thogai) திட்டத்தில் தமிழ்நாடு அரசு, 1.31 கோடி பெண்களுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. அவரவர் வங்கிக் கணக்கிலேயே வரவு வைத்து வருகிறது.
Magalir Urimai Thogai new rules2/8

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்

கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டம் இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படும் திட்டமாக உள்ளது. புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தவெகவும் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
Magalir Urimai Thogai new rules3/8

அதிக பயனாளிகள்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் மாநிலங்களில் அதிக பயனாளிகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். இத்திட்டத்தின் விரிவாக்கத்தையே தமிழ்நாட்டு பெண்கள் மிக மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Magalir Urimai Thogai new rules4/8

மாதம் 2000 ரூபாய் எப்போது அரசு கொடுக்கும்?

ஏனென்றால், தவெக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மாதம் 2000 ரூபாய் இத்திட்டத்தில் கொடுக்கப்படும் என அறிவித்திருந்தது. அதனால், மாதம் 2000 ரூபாய் எப்போது அரசு கொடுக்கும் என பெண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
Magalir Urimai Thogai new rules5/8

புதிதாக விண்ணப்பிக்க காத்திருப்பு

அதேநேரத்தில், புதிதாக திருமணமாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், ஏற்கனவே தகுதிகள் இருந்தும் இத்திட்டத்தில் பயனாளியாக ஆகாமல் உள்ளவர்கள் இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க காத்திருக்கிறார்கள்.
Magalir Urimai Thogai new rules6/8

பயனாளிகளை நீக்க பரிசீலனை

அவர்களுக்கான அப்டேட் என்னவென்றால், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சில விதிமுறைகளை மாற்ற அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியான பயனாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செல்வதை உறுதி செய்யவும், தகுதியற்ற பயனாளிகளை இத்திட்டத்தில் இருந்து நீக்கவும் பரிசீலித்து வருகிறது.
Magalir Urimai Thogai new rules7/8

தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக ...

இந்த நடைமுறை எல்லாம் அடுத்த ஆண்டு பிற்பகுதிலேயே தொடங்கும் என கூறப்படுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது, 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Magalir Urimai Thogai new rules8/8

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விரிவாக்கம்

அதனால், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. மேலும், புதியதாக என்னென்ன விதிமுறைகள் சேர்க்கப்படும் என்பது குறித்த அரசின் பரிசீலனை தொடர்பான அப்டேட் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
TAGS:
TN Govt Schemes

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை ESIC அலுவலகத்தில் வேலை, சூப்பரான சம்பளம்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சென்னை ESIC அலுவலகத்தில் வேலை, சூப்பரான சம்பளம்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

2

சென்ட்ரல் டூ அரக்கோணம், திருவள்ளூர்! மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரம்

3

தேனியை தொடர்ந்து கோவை சிறையிலும் கைதி எஸ்கேப்.. என்னதான் பிரச்சனை?

4

ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு குட் நியூஸ்! ஈமச்சடங்கு நிதியுதவி உயர்வு

5

ஹர்திக் பாண்டியா வேண்டாம்? பின்வாங்கும் CSK! என்ன காரணம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.