புதன் கிரகம் வரும் நவம்பர் 10ஆம் தேதி (செவ்வாய்) அன்று துலாம் ராசிக்குள் வக்ர நிலையில் மாறுவார். இதனால் மூன்று ராசிக்காரர்களின் பொருளாதாரமும், வாழ்வும் செழிப்படையும்.
புதன் கிரகம் துலாம் ராசிக்குள் வக்ர நிலையில் மாறுவதால் கடகம், கன்னி, கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் பலனடைவார்கள். இருப்பினும், ஒருவரின் ஜாதகத்தில் புதன் கிரகம் எந்த நிலையில் இருக்கிறதோ அதற்கேற்ப பலன்கள் மாற்றமடையும்.
1/6
துலாம் ராசியில் புதன் கிரகம்
ஜாதிடத்தின்படி, புதன் கிரகம் அறிவாற்றல், பேச்சு, வணிகம், கல்வி, வேலை உள்ளிட்டவற்றுக்கு காரணமானவர். அந்த வகையில், புதன் கிரகத்தின் நகர்வுகள் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை செலுத்தும்.
2/6
3 ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம்
அந்த வகையில், தீபாவளிக்கு பின்னர் வரும் நவம்பர் 10ஆம் தேதி (செவ்வாய்) புதன் கிரகம் துலாம் ராசியில் எழுந்தருள்கிறார். குறிப்பாக, துலாம் ராசியில் புதன் வக்ர நிலையில் இருப்பார். இதனால், மூன்று ராசிக்காரர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் மற்றும் பொருளாதாரமும் மேம்படும்.
3/6
கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள்
இதன் காரணமாக, கடக ராசிக்காரர்களுக்கு வேலையிடத்தில் புதிய நம்பிக்கை துளிர்விடும். மேலதிகாரிகளிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். அங்கும் நற்பெயர் கிடைக்கும். புதிய வணிக ஐடியாவும் சிறப்பான முடிவை கொடுக்கவும். புதிய வழியில் வருமானம் வரும், இதனால் பொருளாதாரம் செழிப்படையும்.
4/6
கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள்
புதன் கிரகம் துலாம் ராசிக்கு வக்ர நிலையில் நகர்வதால் பொருளாதார ரீதியான பலன்கள் அதிகம் கிடைக்கும். வேலையிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். வணிகர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் வந்து சேரும்.
5/6
கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள்
புதன் கிரகம் துலாம் ராசிக்கு வக்ர நிலையில் இருப்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வந்து சேரும். நீண்ட நாளாக நடக்காத வேலைகள் இப்போது சீரடையும். வேலையிடத்தில் புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வணிகத்தில் லாபமும், முதலீட்டில் எதிர்பாராத வருவாயும் வந்து சேரும்.
6/6
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.