• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /ஹர்திக் பாண்டியாவுக்கு 2 ஆண்டுகள் தடை? ஐபிஎல்லிலும் விளையாட முடியாது? பிசிசிஐ அதிரடி!

ஹர்திக் பாண்டியாவுக்கு 2 ஆண்டுகள் தடை? ஐபிஎல்லிலும் விளையாட முடியாது? பிசிசிஐ அதிரடி!

Hardik Pandya 2 Years Ban: ஹர்திக் பாண்டியா உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட மறுப்பதாக கூறப்படும் நிலையில், அவர் மீது பிசிசிஐ 2 ஆண்டுகள் வரை தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written ByR Balaji
Published: Nov 02, 2026, 01:40 PM IST|Updated: Nov 02, 2026, 01:43 PM IST
joinshare
ஹர்திக் பாண்டியாவுக்கு 2 ஆண்டுகள் தடை? ஐபிஎல்லிலும் விளையாட முடியாது? பிசிசிஐ அதிரடி!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் செய்தி! பள்ளியிலேயே JEE, NEET பயிற்சி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் செய்தி! பள்ளியிலேயே JEE, NEET பயிற்சி

2

ஹர்திக் பாண்டியாவுக்கு 2 ஆண்டுகள் தடை? ஐபிஎல்லிலும் விளையாட முடியாது? பிசிசிஐ அதிரடி!

3

IDBI வங்கியை கைப்பற்றும் ஃபேர்ஃபாக்ஸ்.. அடுத்ததாக 3 நிறுவனங்களை வாங்கவும் திட்டம்?

4

கோவை : ஈஷாவின் மண் காப்போம் மாதிரி பண்ணையில் மண் உயிரியல் பயிற்சி..! 10 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு..

5

உயரப்போகும் பால் விலை? லிட்டருக்கு ரூ.5 உயர்வா? ஆவின் நிர்வாகம் எடுத்த முடிவு!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 2026 தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அவரது அடுத்தகட்ட கிரிக்கெட் திட்டம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2027 ஐபிஎலை குறிவைக்கும் ஹர்திக்?

ஹர்திக் பாண்டியாவின் பெயர் சமீபகாலமாக ஐபிஎல் வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. அடிக்கடி காயமடைவது மற்றும் உடற்தகுதி தொடர்பான சிக்கல்கள் காரணமாக அவரை வாங்குவதற்கு சில அணிகள் தயக்கம் காட்டியதாக கூறப்பட்டது.

இதற்கிடையே, ஐபிஎல் 2027 தொடரில் நேரடியாக களமிறங்கும் வகையில் ஹர்திக் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அவரை வாங்குவதற்கான அணிகளின் ஆர்வமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஹர்திக்கை அணியில் சேர்க்க சிஎஸ்கே முயற்சி செய்தபோது, அதற்கு பதிலாக மூன்று வீரர்களை மும்பை இந்தியன்ஸ் கேட்டதாக தகவல்கள் வெளியாகின.

பிசிசிஐ உடன் கருத்து வேறுபாடு?

இந்தச் சூழலில், ஹர்திக் பாண்டியாவின் அணுகுமுறை குறித்து பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச போட்டிகளில் மட்டுமின்றி, விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி போன்ற உள்ளூர் தொடர்களிலும் பங்கேற்க வேண்டும் என அவரிடம் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இன்னும் முழுமையான உடற்தகுதியை எட்டவில்லை என்றும், மீண்டும் விளையாட தயாரானதும் தானே தகவல் தெரிவிப்பதாகவும் ஹர்திக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளை தவிர்த்துவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாட திட்டமிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், முழு உடற்தகுதியை அடையவில்லை என்று கூறிவரும் நிலையில், ஹர்திக் பாண்டியா பேஸ்பால் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டதும் பிசிசிஐ தரப்பில் அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

2 ஆண்டுகளுக்கு தடை?

2027 ஐபிஎல் தொடருக்கு பிறகு நேரடியாக 2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட ஹர்திக் திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐக்கு தகவல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இருதரப்பு சர்வதேச தொடர்கள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காமல் தவிர்ப்பது குறித்து வாரியம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஹர்திக் பாண்டியாவுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தடை விதிப்பது குறித்தும் பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தடை ஐபிஎல் போட்டிகளுக்கும் பொருந்தும் வகையில் இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இஷான் கிஷன் விவகாரம் மீண்டும் பேசப்படுவது ஏன்?

இதற்கு முன்பு இஷான் கிஷன் விவகாரத்திலும் இதேபோன்ற சர்ச்சை ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது அணியில் வாய்ப்பு கிடைக்காது என கருதிய அவர், தொடரிலிருந்து விலகி நாடு திரும்பினார். அதன்பிறகு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காததால், இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு பாதிக்கப்பட்டது.

பின்னர் உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து விளையாடிய இஷான் கிஷன் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார். இதனால், ஹர்திக் பாண்டியா விவகாரத்திலும் பிசிசிஐ இதேபோன்ற அணுகுமுறையை கடைப்பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக, டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஹர்திக் பங்கேற்க முடியாது என தெரிவித்தால், அடுத்தகட்டமாக பிசிசிஐ என்ன முடிவெடுக்கும் என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket