ஹர்திக் பாண்டியா டிரேடுக்கு அர்ஷ்தீப் சிங்கை கொடுக்கும்படி மும்பை இந்தியன்ஸ் அணி கேட்டுள்ளது. இதில் பஞ்சாப் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அடுத்த 2 நாட்கள் ஹர்திக் டிரேடில் மிக முக்கியானது என கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியாவை பெற சிஎஸ்கே, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது இது பஞ்சாப், ராஜஸ்தான் என தீவிரமடைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஹர்திக் பாண்டியா டிரேட் முடிவுக்கு வரலாம்.
1/5
மும்பை - பஞ்சாப் டிரேட் பேச்சுவார்த்தை
மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய கடும் பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளது. பல அணிகள் முட்டிமோதிய நிலையில், தற்போது அது பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என வந்து நிற்கிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு ஈடாக அர்ஷ்தீப் சிங் + விஷ்ணு வினோத் டிரேட் செய்யப்படலாம் என பேச்சுகள் எழுந்தன.
2/5
ஆலோசிக்கும் பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் இந்த டீலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆலோசனையில் இருந்து வருகிறது. இந்தச் சூழலில், பஞ்சாப் அணியோ இந்த டிரேட் தகவலை மறுக்கவும் இல்லை என்பதால் அது இந்த டிரேடை ஆலோசிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
3/5
உடனே குதித்த ராஜஸ்தான் ராயல்ஸ்
இதற்கிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னொரு வலையை வீசியிருக்கிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு ஈடாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் + ரவி பிஷ்னோயை தர ராஜஸ்தான் ராயல்ஸ் முன்வந்திருக்கிறது. இந்த டீல் குறித்து மும்பை இந்தியன்ஸ் ஆலோசித்தாலும், வேகப்பந்துவீச்சாளர் கிடைக்காததால் இதற்கு அந்த அணி ஒப்புக்கொள்ளாது என்றே கருதப்படுகிறது.
4/5
ஹர்ஷித் ராணாவை கேட்ட மும்பை
கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வேகப்பந்துவீச்சு படையில் போல்ட், தீபக் சஹார் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. தற்போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் கிடைக்கும்பட்சத்தில் அவர்கள் இருவரையும் விடுவிக்கும் முடிவில் மும்பை இருக்கிறது. எனவே, ராஜஸ்தான் ராயல்ஸின் ஆப்பரை மும்பை ஏற்காது. அதேநேரத்தில் கேகேஆர் அணியிடம் ஹர்ஷித் ராணாவை பெற மும்பை முயற்சித்தது. ஆனால் கேகேஆர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது.
5/5
அடுத்த 48 மணிநேரம் முக்கியம்
இந்தச் சூழலில், மும்பை இந்தியன்ஸ் அணியின் டிரேட் டீல் குறித்து முடிவெடுக்க பஞ்சாப் கிங்ஸின் நிர்வாகம் 2 நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறது. எனவே அடுத்த 48 மணிநேரம் முக்கியம், பஞ்சாப்பின் முடிவும் அப்போதுதான் தெரியும். இதற்கிடையே மற்ற அணிகளும் ஹர்திக் பாண்டியாவை பெற புதிய டீலுடன் வரலாம்.