November 29 Rasipalan: கார்த்திகை மாதம் 13ஆம் நாளான இன்று (நவம்பர் 29), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
November 29, Today Horoscope: இன்று கார்த்திகை 13ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29) பரபாவ வருடம்.
1/13
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
2/13
மேஷம்
குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்லவும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்த தாமதங்கள் விலகும். தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். மனை சார்ந்த கடனுதவிகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : குழப்பமான நாள்.
கிருத்திகை : உதவிகள் சாதகமாகும்.
3/13
ரிஷபம்
அக்கம் பக்கம் இருப்பவரிடம் அனுசரித்து செல்லவும். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் அமைதி உண்டாகும். தொழிலில் இருந்து வந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோக பணிகளில் ஆதரவுகள் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : மந்தத்தன்மை குறையும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
4/13
மிதுனம்
ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். பேச்சுகளில் கனிவு வேண்டும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குடும்பத்தின் எதிர்கால சிந்தனைகள் மேம்படும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்கால முதலீடுகள் மேம்படும். பணி புரியும் இடத்தில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : கனிவு வேண்டும்.
திருவாதிரை : நம்பிக்கை பிறக்கும்.
புனர்பூசம் : ஒத்துழைப்பான நாள்.
5/13
கடகம்
உறவுகள் பற்றிய எண்ணங்கள் உருவாகும். புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். உற்பத்தி துறைகளில் பொறுமை வேண்டும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பயணங்களில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் பிறக்கும்.
பூசம் : சேமிப்புகள் மேம்படும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.
6/13
சிம்மம்
உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொழில் வாய்ப்புகள் அமையும். புதிய நபர்களால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். இரவு நேர பயணங்களை குறைத்துக் கொள்ளவும். கணவன் மனைவிக்கிடையே புரிதல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : அலைச்சல்கள் ஏற்படும்.
உத்திரம் : புரிதல்கள் உண்டாகும்.
7/13
கன்னி
தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வியாபார நிமித்தமான முயற்சிகள் கைகூடும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான விஷயங்களில் தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.
அஸ்தம் : கற்பனை மேம்படும்.
சித்திரை : தெளிவு பிறக்கும்.
8/13
துலாம்
அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் விவாதங்களை குறைத்துக்கொள்ளவும். உடன் பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். கல்வி பணிகளில் ஆர்வம் ஏற்படும். வரவுகள் சாதகமாக இருக்கும். வாழ்க்கை துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : வரவுகள் சாதகமாகும்.
விசாகம் : ஒத்துழைப்பான நாள்.
9/13
விருச்சிகம்
நண்பர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
விசாகம் : வேறுபாடுகள் மறையும்.
அனுஷம் : மதிப்புகள் கிடைக்கும்.
கேட்டை : பொறுமை வேண்டும்.
10/13
தனுசு
தம்பதிகளுக்கு இடையே அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். அரசு அதிகாரிகள் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
உத்திராடம் : தாமதம் ஏற்படும்.
11/13
மகரம்
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மனதில் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் உருவாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. வர்த்தக பணிகளில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : புரிதல் உண்டாகும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.
12/13
கும்பம்
தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்களிடத்தில் மதிப்புகள் உயரும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த தடுமாற்றம் குறையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : மதிப்புகள் உயரும்.
சதயம் : உதவிகள் சாதகமாகும்.
பூரட்டாதி : வரவுகள் கிடைக்கும்.
13/13
மீனம்
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடம் அமைதியாக இருக்க வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : தேவைகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : புரிதல் ஏற்படும்.
ரேவதி : தாமதங்கள் விலகும்.