திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் குழுவை சஸ்பெண்ட் செய்துள்ள உச்சநீதிமன்றம் தீபம் ஏற்றுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்தும் உத்தவிட்டது. இதைத்தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி இருந்தது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் பார்த்திபன், வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன், CRPF IG திருமலா விக்ரம், கண்காணிப்பு சிறப்பு அலுவலர் வீரராகவ், வருவாய் கோட்டாட்சியர் கெரனாபுக் லித்தியா, CRPF IG முகேஷ் குமார், ஸ்தானிக பட்டர்கள் சாமிநாதர், ரமேஷ், அஜித் ஆகியோருக்கு மலை மேல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது தெரியவந்தது. தீபம் ஏற்றும் போதும் அவர்கள்தான் அருகில் இருந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது, தீபம் ஏற்றப்பட இருந்த சமயத்தில் தங்களின் 100 ஆண்டு கனவு நிறைவேறியதாக, அங்கு கூடியிருந்த இந்து அமைப்பினர் முழக்கமிட்டனர். அதோடு, அவர்கள் பட்டாசு வெடித்தும் நடனமாடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இதையடுத்து, திருப்பரங்குன்றத்தில் உள்ள பல்வேறு வீடுகளில் பெண்கள் குத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.