• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி: சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி: சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Written ByKarthikeyan Sekar
Published: Oct 28, 2026, 06:47 AM IST|Updated: Oct 28, 2026, 06:52 AM IST
joinshare
Railway NTPC Free Coaching in Salem: ரயில்வே NTPC தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குவது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

Railway NTPC Free Coaching in Salem: ரயில்வே வேலைவாய்ப்புக்கு சேலத்தில் நவம்பர் 4 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இங்கே
 

Railway NTPC Free Coaching in Salem1/5

இலவச பயிற்சி அறிவிப்பு :

இலவச பயிற்சி அறிவிப்பு : இந்திய ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் NTPC (Non Technical Popular Categories) தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளன. வரும் நவம்பர் 4 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் இப்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Railway NTPC Free Coaching in Salem2/5

காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி :

காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி : ரயில்வே NTPC அறிவிப்பின்படி, 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதிக்கு 1,688 காலிப்பணியிடங்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 3,548 காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகளுக்கு 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி உச்ச வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
Railway NTPC Free Coaching in Salem3/5

விண்ணப்பிக்கும் முறை, கடைசி தேதி :

விண்ணப்பிக்கும் முறை, கடைசி தேதி : இத்தேர்வுகளுக்கு தகுதியான நபர்கள் www.rrbapply.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 6, 2026 ஆகும். 12-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 13, 2026 ஆகும். விண்ணப்பதாரர்களின் வசதிக்காக சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
Railway NTPC Free Coaching in Salem4/5

பயிற்சி வகுப்புகள் நடைபெறும் விவரம் :

பயிற்சி வகுப்புகள் நடைபெறும் விவரம் : சேலம் வேலைவாய்ப்பு மையத்தில் நவம்பர் 4 காலை 10 மணிக்கு துவங்கும் இந்த இலவச பயிற்சி வகுப்புகள், வார நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் (சனி மற்றும் ஞாயிறு) தொடர்ந்து நடத்தப்படும். மாணவர்கள் எந்தவித சிரமமுமின்றி தேர்வுக்கு தயாராகும் வகையில் இந்த வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.
Railway NTPC Free Coaching in Salem5/5

தொடர்புக்கு.... :

தொடர்புக்கு.... : இப்பயிற்சி வகுப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம். எனவே, இந்திய ரயில்வே தேர்வுகளுக்கு தயாராகி வரும் தகுதியும் ஆர்வமும் கொண்ட இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவியர் இந்த இலவச வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
டிஏ உயர்வு, சம்பள உயர்வு, டிஏ அரியர்: அரசு ஊழியர்களுக்கு 3 பரிசுகள்.. இன்று அறிவிப்பா?

டிஏ உயர்வு, சம்பள உயர்வு, டிஏ அரியர்: அரசு ஊழியர்களுக்கு 3 பரிசுகள்.. இன்று அறிவிப்பா?

2

அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லையா? லேட்டஸ்ட் அப்டேட்

3

கைத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளிப் பரிசு! போனஸ் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

4

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் அதிரடி உயர்வு! குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயம்

5

AI கருவி! பங்குச்சந்தை ஆய்வின் புதிய ஹீரோ... Kwala Intel-ல் என்ன ஸ்பெஷல்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.