Rasipalan Today, November 6 Friday: இன்றைய ராசிபலன் நவம்பர் 6 வெள்ளிக்கிழமை மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Rasipalan Today, November 6 Friday: இன்றைய ராசிபலன் நவம்பர் 6 வெள்ளிக்கிழமை 12 ராசிகளுக்குமான பொதுப்பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/12
மேஷம்
மேஷம் - தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும்.
2/12
ரிஷபம்
ரிஷபம் - திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களைச் செலவிடுவீர்கள். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.
3/12
மிதுனம்
மிதுனம் - பேச்சில் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். வேலைச்சுமை அதிகரித்தாலும் பொறுமையுடன் சமாளிப்பீர்கள். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு அக்கறை தேவை.
4/12
கடகம்
கடகம் - மனதில் தெளிவும் உற்சாகமும் நிறையும் நாள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். உறவினர்கள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். பணப்புழக்கம் சீராக இருக்கும்.
5/12
சிம்மம்
சிம்மம் - உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு சாதகமான நாள். அரசு வழி காரியங்களில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும்.
6/12
கன்னி
கன்னி - உடன்பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும். புதிய நண்பர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பண விவகாரங்களில் பிறருக்கு வாக்குறுதி அளிப்பதைத் தவிர்க்கவும்.
7/12
துலாம்
துலாம் - தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிவந்த சிறு மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
8/12
விருச்சிகம்
விருச்சிகம் - முயற்சிகளில் சிறு தடைகள் வந்தாலும் இறுதியில் வெற்றி காண்பீர்கள். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முக்கிய முடிவுகளை அனுபவசாலிகளுடன் கலந்து ஆலோசித்து எடுக்கவும்.
9/12
தனுசு
தனுசு - குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் தேடி வரலாம். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.
10/12
மகரம்
மகரம் - சுறுசுறுப்பாகச் செயல்பட்டு பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பொருளாதார ரீதியாக அனுகூலமான சூழல் நிலவும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.
11/12
கும்பம்
கும்பம் - எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள நேரலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பணியிடத்தில் நிதானமான அணுகுமுறை நற்பலன்களைத் தரும். செலவுகளைத் திட்டமிட்டு செய்யவும்.
12/12
மீனம்
மீனம் - தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு மனதிற்கு உற்சாகமளிக்கும். சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும்.