TN Ration Card Scheme: வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 2 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
TN Ration Card Scheme: திருநங்கையர், கைம்பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
1/5
ரேஷன் கார்டு திட்டம்
தமிழகத்தில் சுமார் 2.30 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ரேஷன் அட்டையதார்களுக்கு மாதந்தோறும் மானிய விலையில் ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பருப்பு, அரிசி, சர்க்கரை, எண்ணெய் போன்றவற்றை ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகை பதிந்து, பொருட்களை வாங்கிக் கொண்டு வருகின்றனர்.
2/5
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
ஆனால், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருந்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் சிரமத்தை சந்திக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு, கடந்த திமுக ஆட்சியில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் மூலம் 65 வயதுக்கு மேற்பட்ட முதியார்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
3/5
வீடு தேடி வரும் ரேஷன் திட்டம் விரிவாக்கம்
ரேஷன் கடை ஊழியர்கள் மாதத்தின் முதல் வாரத்தில் வாகனங்களில் பொருட்களை எடுத்து சென்று, வீடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இத்திட்டம் மூலம் சுமார் 19.30 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
4/5
டிசம்பர் முதல் திருநங்கையர், கைம்பெண்களின் வீடுகளுக்கு ரேஷன்
அதன்படி, திருநங்கையர், கைம்பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோரின் விடுகளுக்கும் நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை செயல்படுத்தும் விதமாக, கைம்பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது.
5/5
கூடுதலாக 2.27 குடும்ப அட்டைதாரர்கள் பயன்
இதனால், கூடுதலாக சுமார் 2.27 லட்சம் பேரும் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் முதல் கூடுதலாக கைம்பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர் ஆகியோரின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஆண்டுக்கு தமிழக அரசு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.